தலைவன் Vivo வரான்.. புதுசா வேறெந்த போனும் வாங்காதீங்க.. பட்ஜெட்ல சூப்பர் போனா இருக்க போகுது.. என்ன மாடல்?
விவோ (Vivo) நிறுவனம் விரைவில் ஒரு புதிய கையடக்க ஸ்மார்ட்போன் சாதனத்தை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த எதிர்பார்க்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் சாதனம் விவோ T3 ப்ரோ 5ஜி (Vivo T3 Pro 5G) என்ற பெயருடன் விரைவில் வெளிவரும் என்று லீக் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்பாகவே இப்போது பல தளங்களில் விவோ T3 ப்ரோ 5ஜி (Vivo T3 Pro 5G) தொடர்பான லீக் தகவல்கள் கசியத்துவங்கியுள்ளன. இந்த போனில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்ற விபரம் இதோ.
விவோ நிறுவனம் விரைவில் அதன் T சீரிஸ் வரிசையில் புதிதாக ஒரு ப்ரோ மாடல் ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை நிறுவனம் விவோ T3 ப்ரோ 5ஜி (Vivo T3 Pro 5G) என்ற பெயரில் வெளியிடும் என்று லீக் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. அதேபோல், இதுவொரு பட்ஜெட் அல்லது மிட்பட்ஜெட் செக்மென்ட் விருப்பமாக வெளிவரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விவோ T3 ப்ரோ 5ஜி (Vivo T3 Pro 5G):
விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் விவோ T3 ப்ரோ 5ஜி (Vivo T3 Pro 5G) ஸ்மார்ட்போன் சாதனம் 3D கர்வுடு அமோலேட் (AMOLED) டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் 4500 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆதரவை கொண்டிருக்கும் என்று லீக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே பயனருக்கு ஸ்மூத் மற்றும் பிரைட்டான டிஸ்பிளே அனுபவத்தை வழங்குமென்று கூறப்பட்டுள்ளது.
இது மிகவும் பிரைட்டான டிஸ்பிளேவாக வந்தாலும், இதில் கண்களை பாதுகாக்க உதவும் ஐ ப்ரொடெக்ஷன் அம்சமும் கூட வழங்கப்பட்டுள்ளது என்று லீக் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய விவோ T3 ப்ரோ 5ஜி (Vivo T3 Pro 5G) ஸ்மார்ட்போன் சாதனம் சக்தி வாய்ந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், சரியான சிப்செட் பெயர் குறிப்பிடப்படவில்லை.
மற்றொரு லீக் தகவலில் எதிர்பார்க்கப்படும் விவோ T3 ப்ரோ 5ஜி (Vivo T3 Pro 5G) ஸ்மார்ட்போன் சாதனம் ஆரஞ்சு நிறத்தில் வீகன் லெதர் பேக் பேனலுடன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட்டை கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இந்த ஸ்மார்ட்போனில் விவோ நிறுவனம் 50MP சோனி IMX882 சென்சாரை OIS ஆதரவுடன் கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விவோ T3 ப்ரோ 5ஜி எதிர்பார்க்கப்படும் விலை (Vivo T3 Pro 5G Expecting Price):
இந்த விவோ T3 ப்ரோ 5ஜி (Vivo T3 Pro 5G) ஸ்மார்ட்போன் சாதனம் 4K வீடியோ ரெக்கார்டிங் ஆதரவுடன், சூப்பர் நைட் விஷன் மோட், அல்ட்ரா வைடு லென்ஸ், ஏஐ ஏரேசர் மற்றும் ஏஐ போட்டோ என்ஹான்ஸ் அம்சம் போன்ற பல அட்டகாசமான கேமரா அம்சங்களை பேக் செய்யுமென்று கூறப்பட்டுள்ளது. இது இன்னும் சில தினம் அல்லது ஆகஸ்ட் 21, 2024 ஆம் தேதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
விவோ T3 ப்ரோ 5ஜி (Vivo T3 Pro 5G) ஸ்மார்ட்போன் சாதனம் 5000mAh பேட்டரி உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில், இந்த போன் iQOO Z9s Pro போனின் மறுபெயரிடப்பட்ட புதிய போனாக இருக்குமென்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் விவோவின் அதிகாரப்பூர்வ தளம் மற்றும் விவோ கடைகள் வழியாக விற்பனைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 24,999-திற்குள் இருக்குமென்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








