காத்திருக்கலாமா?- விவோ டி2 5ஜி வெளியீடு ஒத்திவைப்பு: புதிய வெளியீட்டு தேதி விவரம் இதோ!

|

விவோ டி2 5ஜி வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் புதிய வெளியீடு தேதி, அம்சங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை குறித்து பார்க்கலாம்.

விவோ டி2 5ஜி வெளியீட்டு தேதி

விவோ டி2 5ஜி வெளியீட்டு தேதி

விவோ நிறுவனம் மே 23 விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போனை தனது சொந்த சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தது. இருப்பினும் வெளியீட்டு தேதி ஜூன் 6 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் விவோ போன் இந்தியாவில் பிப்ரவரியில் அறிமுகமான விவோ டி1 5ஜி சாதனத்தி வாரிசாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவோ டி2 5ஜி சாதனம் தரவுத் தளத்தில் காணப்படுகிறது.

வெளியீடு ஜூன் 6-க்கு ஒத்திவைப்பு

வெளியீடு ஜூன் 6-க்கு ஒத்திவைப்பு

விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீடு ஜூன் 6-க்கு ஒத்திவைக்கப்பட்டது. வரவிருக்கும் விவோ டி2 5ஜி சாதனத்தின் புதிய வெளியீட்டு தேதியைப் பகிர்ந்து கொள்ள விவோ ஆனது வெய்போவின் தளத்தை பயன்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் ஜூன் 6 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி மாலை 7 மணிக்கு அறிமுகப்படுத்தப்படும். ஸ்மார்ட்போனின் எந்த முக்கிய விவரக்குறிப்புகளையும் பிராண்ட் பகிரவில்லை. இந்த சாதனம் JD.com-ல் பட்டியலிடப்பட்டுள்ளது, இதன்மூலம் அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

விவோ டி2 5ஜி அம்சங்கள், விலை

விவோ டி2 5ஜி அம்சங்கள், விலை

விவோ டி2 5ஜி அம்சங்கள், விலை குறித்து இதுவரை வெளியான தகவலை பார்க்கலாம். இந்த அம்சங்களை பொறுத்தவரை, விவோ டி2 ஆனது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்திற்கான ஆதரவுடன் 6.62-இன்ச் இ4 அமோலெட் பேனலுடன் வரக்கூடும். இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் மூலம் இயக்கப்படும், இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான உள்சேமிப்பு ஆதரவோடு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு

டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு

இமேஜிங் ஆதரவுக்கு என இந்த போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் 64 எம்பி முதன்மை கேமரா, 12 எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி போர்ட்ரெய்ட் கேமரா உள்ளிட்ட ஆதரவோடு வருகிறது. முன்னதாக, விவோ டி2 சாதனமானது பஞ்ச்-ஹோல் கட்அவுட் ஆதரவோடு வருகிறது. இந்த சாதனம் 16 எம்பி செல்ஃபி கேமரா சென்சார் உடன் வைக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஆதரவோடு இயக்கும் மற்றும் 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,700 எம்ஏஎச் பேட்டரி யூனிட்டை கொண்டிருக்கும்.

இதுவரை அம்சங்கள் குறித்து வெளியான தகவலையே பார்த்தோம். விரைவில் ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ அம்சங்கள் படிப்படியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த சாதனத்தின் வெளியீடு குறித்த தகவலை நிறுவனம் இதுவரை பகிர்ந்து கொள்ளவில்லை.

விவோ ஒய்72டி ஸ்மார்ட்போன் அறிமுகம்

விவோ ஒய்72டி ஸ்மார்ட்போன் அறிமுகம்

விவோ நிறுவனம் நேற்று (மே 23) விவோ ஒய்72டி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. விவோ நிறுவனம் விவோ Y72t ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. விவோ Y72t ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல் தீர்மானம்,60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 12 இயங்குதள ஆதரவு

ஆண்ட்ராய்டு 12 இயங்குதள ஆதரவு

குறிப்பாக விவோ Y72t ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக OriginOS 1.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்தஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. புதிய விவோ Y72t ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Vivo T2 5G Launch Postponed: New Launching Date, Price details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X