Home
News

திடீர் விலை குறைப்பு! சும்மாவே இந்த Vivo 5G போனை போட்டி போட்டு வாங்குவாங்க! இப்போ விலை இன்னும் கம்மி!

இந்திய சந்தையில் ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் பெஸ்ட் 5ஜி போன்கள் (Best 5G Phones Under Rs.20000) என்கிற பட்டியலில் விவோ டி2 5ஜி (Vivo T2 5G) மாடலுக்கு நிச்சயம் ஒரு இடமுண்டு. அப்படியான விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போனின் மீது திடீர் விலைக்குறைப்பு (Price Cut) அறிவிக்கப்பட்டுள்ளது.

விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போனின் மீது எவ்வளவு விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது? இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் எத்தனை ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது? அவைகளின் பழைய விலை என்ன? புதிய விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

Vivo T2 ஸ்மார்ட்போன் மீது திடீர் விலை குறைப்பு!

விவோவின் புதிய மிட்-ரேன்ஜ் (Mid-range) ஸ்மார்ட்போனான விவோ டி2 5ஜி கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகமானது. இது மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியானது: 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,999 க்கும், 8ஜிபி ரேம் +128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.20,999 க்கும் வெளியானது.

தற்போது விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போனின் மீது ரூ.2000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சுவாரசியமாக விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போனின் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே ரூ.2000 விலைக்குறைப்பை பெற்றுள்ளன. இந்த விலைக் குறைப்புக்குப் பிறகு பேஸிக் 6ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.16,999 க்கும், ஹை-எண்ட் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.18,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

Vivo T2 ஸ்மார்ட்போன் மீது திடீர் விலை குறைப்பு!

ரூ.2000 விலைக்குறைப்போடு சேர்த்து விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போனின் மீது சில கூடுதல் சலுகைகளும் (Extra Offers) கிடைக்கிறது. நீங்கள் இன்டஸ்லேண்ட் பேங்க் (IndusInd Bank), யெஸ் பேங்க் (Yes Bank), ஃபெடரல் பேங்க் (Federal Bank) மற்றும் பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க்குகளுடன் கூட்டு சேர்ந்து ரூ.1,500 வரையிலான கேஷ்பேக் (Cashback) கிடைக்கும்.

விவோ டி2 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: இது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) மற்றும் 1080 x 2400 பிக்சல் ரெசல்யூஷன் உடனான 6.38-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை (FHD+ Display) கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே ஸ்காட் சென்ஸேஷன் கிளாஸ் (Schott Xensation Glass) மூலம் பாதுகாக்கப்படுகிறது.

Vivo T2 ஸ்மார்ட்போன் மீது திடீர் விலை குறைப்பு!

பெயர் குறிப்பிடுவது போல இந்த ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவை (5G Support) கொண்டுள்ளது. இது ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்டை (Octa-core Qualcomm Snapdragon 695 Chipset) பேக் செய்கிறது. இது அதிகபட்சமாக 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவுடன் வரும் விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 13 (FunTouch OS 13) மூலம் இயக்கப்படுகிறது இது ஹைப்ரிட் டூயல் சிம்மை (Hybrid dual SIM) ஆதரிக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கேமராக்களை பொறுத்தவரை, விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) உள்ளது. அதில் 64எம்பி மெயின் கேமரா (எஃப்/1.79 அபெர்க்ஷர்) + 2எம்பி டெப்த் கேமரா (எஃப்/2.4 அபெர்க்ஷர்) கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது.

கடைசியாக விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போன் 44வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு (44W Fast Charging Support) உடன் 4500எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. விவோ தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை, சமீபத்தில் விவோ 100ஐ 5ஜி (Vivo 100i 5G) ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமானது. இது விவோ 100 மாடலின் டோன்டு-டவுன் (toned-down) மாடலாகும்; அதாவது சற்றே அம்சங்கள் குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போனாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T2 5G Gets Rs 2000 Price Cut in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X