பட்ஜெட் விலையில் இது ஒரு புது மான்ஸ்டர்.. Vivo T1x போன் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

|

விவோ ரசிகர்களின் காத்திருப்பு வீண் போகவில்லை, ஒரு வழியாக நீண்ட இடைவெளிக்குப் பின் Vivo நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போன் மாடலான Vivo T1x மாடலை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. விவோவின் புதிய Vivo T1x ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலை பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உண்மையை சொல்லப் போனால், விவோ ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட, மிகக் குறைந்த விலையில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு அனைவரின் கவனத்தையும் இப்போது ஈர்த்துள்ளது.

புதிய Vivo T1x ஸ்மார்ட்போன்

புதிய Vivo T1x ஸ்மார்ட்போன்

இந்த புதிய Vivo T1x ஸ்மார்ட்போன் சாதனம் இப்போது இந்தியாவில் 90 ஹெர்ட்ஸ் ரெப்பிரேஷ் ரேட் கொண்ட வாட்டர் டிராப் ஸ்டைல் ​​நாட்ச் டிஸ்ப்ளே உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பட்ஜெட் பிரைஸ் ஸ்மார்ட்போன் சாதனம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் வெளிவந்துள்ளது. பட்ஜெட் செக்மென்ட்டில் கிடைக்கக்கூடிய பெஸ்ட் சிப்செட் இது என்பதில் சந்தேகமில்லை. இது 50 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி சென்சாருடன் இயங்கும் டூயல் கேமரா அமைப்புடன் வருகிறது.

Vivo T1x போனின் விபரம்

Vivo T1x போனின் விபரம்

இந்த ஸ்மார்ட்போனின் மற்ற சிறப்பம்சங்கள் என்ன என்பதையும், இந்த புதிய Vivo T1x ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றிய விபரங்களை இந்த பதிவில் முழுமையாகப் பார்க்கலாம். தெரியாதவர்களுக்கு, இந்த புதிய ஸ்மார்ட்போன் டிவைஸ் இதற்கு முன்னதாக ஏப்ரல் மாதம் மலேசியாவில் வெளியிடப்பட்டது. அதேபோல், மீடியா டெக் டைமென்சிட்டி 900 சிப்செட்டை கொண்ட Vivo T1x இன் 5G வேரியண்ட் மாடல் கடந்த ஆண்டு அக்டோபரில் சீனாவில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Vivo T1x ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

Vivo T1x ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

விவோ இப்போது அறிமுகம் செய்துள்ள இந்த புதிய Vivo T1x ஸ்மார்ட்போன் டிவைஸ் ஆனது 6.58' இன்ச் கொண்ட முழு HD+ உடைய 1,080 x 2,408 பிக்சல்களுடன் கூடிய LCD டிஸ்ப்ளேவை ஆதரிக்கிறது. இது 90Hz ரெப்ரெஷ்ஷிங் ரேட், 90.6 சதவீதம் டிஸ்பிளே டி பாடி ரேட்ஸியோ ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த டிவைஸ் ஹூட்டின் கீழ், ஆக்டா-கோர் குவால்காம் Snapdragon 680 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இது Adreno GPU 610 மற்றும் 6GB வரை LPDDR4x ரேம் உடன் இயங்குகிறது.

நத்திங் போன் தெரியும் இது என்னப்பா 'சம்திங்'.. 'Something'.! உங்க போனை Nothing டிசைனுக்கு உடனே மாற்றலாமா?நத்திங் போன் தெரியும் இது என்னப்பா 'சம்திங்'.. 'Something'.! உங்க போனை Nothing டிசைனுக்கு உடனே மாற்றலாமா?

Android 12 இல் இயங்கும் புது ஸ்மார்ட்போன்

Android 12 இல் இயங்கும் புது ஸ்மார்ட்போன்

இந்த டிவைஸின் ரேம் அம்சத்தை பயனர்கள் 8ஜிபி வரை விரிவாக்க முடியும். விவோ மென்மையான கேமிங் அனுபவத்திற்காக புதிய சாதனத்தில் 4 லேயர் கூலிங் சிஸ்டத்தை வழங்கியுள்ளது. இந்த புதிய Vivo T1x ஸ்மார்ட்போன் டூயல் நானோ சிம் உடன் வருகிறது. இந்த பட்ஜெட் பிரைஸ் ஸ்மார்ட்போன் Android 12 அடிப்படையிலான Funtouch OS 12 இல் இயங்குகிறது. அடுத்தபடியாக இந்த ஸ்மார்ட்போனின் கேமரா விபரங்களைப் பார்க்கலாம்.

Vivo T1x ஸ்மார்ட்போன் கேமரா விபரம்

Vivo T1x ஸ்மார்ட்போன் கேமரா விபரம்

Vivo T1x ஸ்மார்ட்போன் டூயல் பேக் கேமரா அமைப்புடன் வருகிறது. இது f/1.8 லென்ஸுடன் 50 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி சென்சார் மற்றும் f/2.4 லென்ஸுடன் 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் கொண்ட கேமராவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில், f/1.8 லென்ஸுடன் 8 மெகாபிக்சல் சென்சாரை கொண்டுள்ளது. கேமரா யூனிட் சூப்பர் HDR, மல்டிலேயர் போர்ட்ரெய்ட், ஸ்லோ-மோஷன், பனோரமா, லைவ் ஃபோட்டோ மற்றும் சூப்பர் நைட் மோட் போன்றவற்றை ஆதரிக்கிறது.

Vivo T1x போனின் ஸ்டோரேஜ் மற்றும் இணைப்பு அம்சம்

Vivo T1x போனின் ஸ்டோரேஜ் மற்றும் இணைப்பு அம்சம்

Vivo T1x ஆனது 128ஜிபி வரை ஆதரிக்கும் UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது மைக்ரோ SD கார்டு வழியாக 1TB வரை பிரத்தியேக ஸ்லாட் மூலம் எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜை ஆதரிக்கிறது. இந்த புதிய விவோ சாதனத்தில் இருக்கும் இணைப்பு விருப்பங்களைப் பற்றிப் பார்க்கையில், இது 4G LTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS, Glonass, OTG, FM ரேடியோ மற்றும் USB Type-C போர்ட் ஆகியவற்றை ஆதரிக்கிறது. Vivo T1x போனின் செயல்திறனை மேம்படுத்த இதில் மல்டி-டர்போ 5.0 அம்சம் கூட வழங்கப்பட்டுள்ளது.

PAN கார்டில் பெயர், போட்டோ தகவலை மாற்றுவது எப்படி? ஆப்லைன் or ஆன்லைன் சேஞ்சஸ் எது சிறந்தது?PAN கார்டில் பெயர், போட்டோ தகவலை மாற்றுவது எப்படி? ஆப்லைன் or ஆன்லைன் சேஞ்சஸ் எது சிறந்தது?

Vivo T1x ஸ்மார்ட்போனின் விலை

Vivo T1x ஸ்மார்ட்போனின் விலை

Vivo T1x ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சலுகை
இந்தியாவில் Vivo T1x இன் அடிப்படை வேரியண்ட் மாடலான 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் இன் விலை ரூ. 11,999 ஆக இருக்கிறது. இதன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் இன் விலை ரூ. 12,999 ஆகவும், இதன் டாப்-ஆஃப்-லைன் மாடலான 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் இன் விலை ரூ. 14,999 ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கிராவிட்டி பிளாக் மற்றும் ஸ்பேஸ் ப்ளூ வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது.

விற்பனை விபரம்

விற்பனை விபரம்

இந்த புதிய Vivo T1x ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை வரும் ஜூலை 27 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. HDFC வங்கி கார்டுகளை பயன்படுத்தி Flipkart இலிருந்து Vivo T1x ஐ வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ. 1,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். கூடுதலாக, இ-காமர்ஸ் இணையதளம் Flipkart Axis Bank கார்டைப் பயன்படுத்தி வாங்கும் போது 5% வரை எக்ஸ்ட்ரா கேஷ்பேக் வழங்குகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Vivo T1x Launched In India With 5000 mAh Battery Check Price and Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X