Home
News

மிட்ரேஞ்சில் விலை.. மிரட்டலான கேமரா போன்.. உலக கவனம் ஈர்க்கும் Vivo S18 சீரிஸ்.. எப்போது அறிமுகம்?

விவோ (Vivo) நிறுவனம் விரைவில் மிட்ரேஞ் செக்மென்ட்டில் (Midrange segment) புதிய விவோ எஸ்18 சீரிஸ் (Vivo S18) போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புது சாதனம் வித்தியாசமான கேமரா (camera) மற்றும் LED லைட் அம்சத்துடன் வருகிறது.

இந்த புதிய விவோ S18 சீரிஸ் வரிசையில் 3 புதிய ஸ்மார்ட்போன் மாடல் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் விவோ S18 (Vivo S18), விவோ S18 ப்ரோ (Vivo S18 Pro) மற்றும் விவோ S18e (Vivo S18e) போன்ற மாடல்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மிட்ரேஞ்சில் இந்த சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்பதனால், இது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மிட்ரேஞ்சில் விலை.. மிரட்டலான கேமரா போன்.. உலகை ஈர்க்கும் Vivo S18..

இந்த புதிய விவோ S18 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை நிறுவனம் வரும் டிசம்பர் 14ம் தேதி அறிமுகம் செய்யுமென்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த போனின் அறிமுகத்திற்கு முன்பாக, ஒரு நம்பகமான விவோ டிப்ஸ்டர் மூலம் இந்த சாதனத்தின் ஒரிஜினல் புகைப்படங்கள் இணையத்தில் லீக் செய்யப்பட்டுள்ளன. இதில் போனின் ரியர் டிசைன் தெளிவாக காண்பிக்கப்பட்டுள்ளது.

விவோ S18 மற்றும் விவோ S18 ப்ரோ (Vivo S18 and Vivo S18 Pro):

இந்த புதிய விவோ S18 ஸ்மார்ட்போனின் நிறமும் இதில் வெளியாகியுள்ளது. இந்த நிறத்தை விவோ நிறுவனம் பூ போன்ற டிஸைனுடன் ஒப்பிட்டுள்ளது. இது புத்தாண்டின் நல்வரவாக பார்க்கப்படுகிறது. இந்த சாதனத்தின் கேமரா பம்ப் 2 சிறிய சதுர வடிவ டிஸைனுடன் ஒன்றின் கீழ் ஒன்றாக அமைக்கப்பட்டுள்ளது. மேல உள்ள முதல் சதுர மாட்யூலில் கேமராக்களை நிறுவனம் பொருந்தியுள்ளது.

அதற்கு கீழ் உள்ள சதுர வடிவத்தில், நிறுவனம் மிகவும் பிரத்தியேகமான ஸ்டூடியோ லைட்டிங் அனுபவத்தை வழங்கும் ஆரா லைட் (Aura light) LED பிளாஷ் அமைப்பை வழங்கியுள்ளது. இது வார்ம் மற்றும் கோல்டு லைட்டிங் அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டது. அதாவது, மஞ்சள் நிறம் மற்றும் வெள்ளை நிற லைட்டிங்கை பயனர் விருப்பத்திற்கு ஏற்ப வழங்கும் அம்சத்தை கொண்டுள்ளது.

மிட்ரேஞ்சில் விலை.. மிரட்டலான கேமரா போன்.. உலகை ஈர்க்கும் Vivo S18..

விவோ S18 போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் (Vivo S18 smartphone expected features):

விவோ S18 ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்பாக இந்த தகவல் வெளியாகி புதிய ஹைப்பை அதிகரித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களை பற்றி பேசுகையில், இதில் உள்ள பல அம்சங்கள் நம்மை வியப்படைய செய்கிறது. காரணம், இது ஒரு மிட்ரேஞ் போனாக இருந்தாலும், இதில் உள்ள அம்சங்கள் ஒவ்வொன்றும் பிரமாதமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில், இது 6.6" இன்ச் அளவு கொண்ட OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் ஆதரவை கொண்டிருக்கும். இது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் (Snapdragon 7 Gen 3) மூலம் இயக்கப்படும் என்று லீக் தகவல் குறிப்பிடுகிறது. விவோ S18 ப்ரோ சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 9200+ (MediaTek Dimensity 9200+) சிப்செட்டை பெரும்.

கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இது 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 12MP டெலிபோட்டோ சென்சார் போன்றவற்றை கொண்டிருக்கும். இதன் முன்பக்கத்தில் 50MP செல்பி கேமரா முன்பக்க டூயல் டோன் LED பிளாஷ் உடன் வரும் என்று கூறப்படுகிறது. இது 5000mAh பேட்டரியை பேக் செய்யுமென்றும் கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo S18 and Vivo S18 Pro Midrange Smartphone Real Life Photo Got Leaked Before Launch On December 14
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X