Home
News

80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு விவோ எஸ்15, விவோ எஸ்15 ப்ரோ: சிறந்த ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்!

விவோ எஸ்15, விவோ எஸ்15 ப்ரோ வெளியீடு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. விவோ எஸ்15 மற்றும் விவோ எஸ்15 ப்ரோ ஸ்மார்ட்போனானது நாளை சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. விவோ எஸ்1 சீரிஸ் 80 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவோடு வருகிறது.

விவோ எஸ்15 மற்றும் விவோ எஸ்15 ப்ரோ

விவோ எஸ்15 மற்றும் விவோ எஸ்15 ப்ரோ

விவோ நிறுவனம் சீனாவில் விவோ எஸ்15 மற்றும் விவோ எஸ்15 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சீனாவில் வெளியிட இருக்கிறது. முன்னதாக விவோ நிறுவனம் அதன் கேமரா அம்சங்கள் மற்றும் 80 வாட்ஸ் ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் ஆதரவு உட்பட ஸ்மார்ட்போன்களை நிறுவனம் டீஸ் செய்தது. விவோ நிறுவனம் தனது சொந்த நாட்டில் விவோ எஸ்15 மற்றும் விவோ எஸ்15 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக வெய்போவில் தகவல் உறுதிப்படுத்தி இருக்கிறது. இருப்பினும் தற்போது வெளியீட்டு நேரம் தற்போது வரை உறுதிப்படுத்தவில்லை. விவோவின் துணை தலைவர் வரவிருக்கும் எஸ்15 சீரஸ் மாடல்கள் முதன்மை சிப் மற்றும் 80 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவோடு வரும் என உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

80 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு

80 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு

விவோ எஸ்15 மற்றும் விவோ எஸ்15 ப்ரோ ஸ்மார்ட்போனானது நாளை சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. விவோ எஸ்1 சீரிஸ் 80 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையாகக் கொண்ட இந்த சாதனம் ஆரிஜன் ஓஸ் ஆதரவைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. விவோ நிர்வாகி விவோ எஸ்15 தொடரின் சில கேமரா அம்சங்களை பகிர்ந்திருக்கிறார். இந்த மாதிரிகள் வரவிருக்கும் விவோ எஸ்15 ஸ்மார்ட்போனின் சோனி இமேஜ் சென்சார்கள் மேம்படுத்தப்பட்ட கேமரா செயல்திறன் இடம்பெற்றிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஆதரவு

12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஆதரவு

விவோ எஸ்15 ஸ்மார்ட்போனானது 6.62 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஆதரவைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா ஆதரவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

மீடியாடெக் டைமன்சிட்டி 8100 எஸ்ஓசி ஆதரவு

மீடியாடெக் டைமன்சிட்டி 8100 எஸ்ஓசி ஆதரவு

விவோ எஸ்15 ப்ரோ சாதனத்தை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 8100 எஸ்ஓசி கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த சாதனம் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு ஆதரவைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 50 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ராவைட் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் கேமராவைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. விவோ ஸ்மார்ட்போனானது மே 18 ஆம் தேதி இந்தியாவில் விவோ எக்ஸ் 80 தொடரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

விவோ ஒய்55 4ஜி ஸ்மார்ட்போன்

விவோ ஒய்55 4ஜி ஸ்மார்ட்போன்

விவோ சமீபத்தில் விவோ ஒய்55 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது, விவோ Y55 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2,400x1,080 பிக்சல் தீர்மானம், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

50 எம்பி பிரைமரி கேமரா ஆதரவு

50 எம்பி பிரைமரி கேமரா ஆதரவு

விவோ Y55 4ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா +2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். விவோ Y55 4ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இந்த சாதனம். பின்பு Funtouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

File Images

Best Mobiles in India

English summary
Vivo S15, Vivo S15 Pro Smartphone Might be Launching with 80W Fast Charging Support: Expected Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X