ஆஹா., 50 எம்பி டூயல் செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் உடன் விவோ எஸ்12, விவோ எஸ்12 ப்ரோ: விலை இவ்வளவுதான்!
விவோ எஸ் 12, விவோ எஸ் 12 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் சிப்செட்கள், டூயல் முன்புற கேமரா வடிவமைப்பு ஆகியவற்றுடன் வருகிறது. விவோ எஸ் 12 ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஒரிஜின் ஓஎஸ் மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.44 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,408 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்ப்ளே உடன் 20:9 விகிதத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த டிஸ்ப்ளே ஆனது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 180 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஹூட்டின் கீழ் ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1100 சிப்செட் வசதியோடு வரும் எனவும் 12 ஜிபி ரேம் வசதியை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

புதிய விவோ எஸ் 12 தொடர்
சீன தொழில்நுட்ப நிறுவனமான விவோ தனது புதிய விவோ எஸ் 12 தொடரின் கீழ் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொடரில் விவோ எஸ் 12 மற்றும் விவோ எஸ் 12 ப்ரோ சாதனங்கள் அடங்கும் எனவும் இந்த ஸ்மார்ட்போன் ஒரே மாதிரியான விவரக்குறிப்புகள், செயலி திறன்கள் உடன் வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த இரண்டு சாதனங்களும் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

விவோ எஸ் 12 மற்றும் விவோ எஸ் 12 ப்ரோ
சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள விவோ எஸ் 12 மற்றும் விவோ எஸ் 12 ப்ரோ சாதனங்கள் இந்திய சந்தையில் வெளியடப்படுமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த இரண்டு சாதனங்களும் பல வண்ண விருப்பங்களில் வருகின்றன. ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் இரண்டு மாறுபாடுகளை கொண்டிருக்கின்றன.

ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஒரிஜின் ஒஎஸ்
விவோ எஸ்12 சாதனத்துக்கான விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த விவோ எஸ் 12 ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஒரிஜின் ஒஎஸ் மூலம் இயங்குகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 6.44 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080×2,408 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 180 ஹெர்ட்ஸ் மாதிரி வீத டிஸ்ப்ளே உடன் வரும் என கூறப்படுகிறது. ஹூட்டின் கீழ் இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1100 சிப்செட் மற்றும் 12 ஜிபி ரேம் ஆகியவற்றுடன் வரும் என கூறப்படுகிறது.

108 எம்பி முதன்மை கேமரா
விவோ எஸ் 12 ஸ்மார்ட்போனின் கேமராவானது மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 108 எம்பி முதன்மை கேமரா அமைப்புடன் வரும் எனவும் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமராவுடன் 2 எம்பி மேக்ரோ சென்சாரை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. சாதனத்தின் முன்புறம் இரண்டு கேமராக்களை கொண்டிருக்கும் எனவும் அது 44 எம்பி முதன்மை கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைட் கேமராவை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 4200 எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது என்றும் 44 வாட்ஸ் ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

256 ஜிபி உள்சேமிப்பு வசதி
விவோ எஸ் 12 ஸ்மார்ட்போனானது 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் எனவும் கூறப்படுகிறது. இணைப்பு விருப்பங்களாக 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆகியவை அடங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு இன் - டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதியை கொண்டிருக்கிறது. அதேபோல் அங்கீகரிக்கப்பட்ட ஃபேஸ் அன்லாக் அம்சத்தையும் கொண்டிருக்கிறது.

50 எம்பி கேமரா
விவோ எஸ்12 ப்ரோ ஸ்மார்ட்போனானது விவோ எஸ்12 போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.56 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080×2,376 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 240 ஹெர்ட்ஸ் மாதிரி விகிதத்துடன் வருகிறது. விவோ எஸ் 12 ப்ரோ ஸ்மார்ட்போனானது விவோ எஸ் 12 போன்ற பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 44 எம்பி கேமராவுக்கு பதிலாக 50 எம்பி கேமராவை கொண்டிருக்கிறது. அதேபோல் 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் இரண்டாம் நிலை கேமராவை கொண்டிருக்கிறது.

4300 எம்ஏஎச் பேட்டரி
இந்த ஸ்மார்ட்போனானது 4300 எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 44 வாட்ஸ் ஃபிளாஷ் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 256 ஜிபி உள்சேமிப்பு வசதி மற்றும் ஆக்டோ கோர் மீடியா டெக் டைமன்சிட்டி 1200 எஸ்ஓசி ஆதரவோடு இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதியோடு வருகிறது. பயோமெட்ரிக் அங்கீகரிக்கப்பட்ட ஃபேஸ் அன்லாக் அம்சத்தோடு வருகிறது.

விவோ எஸ்12 தொடர் விலை
விவோ எஸ்12 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.33100 ஆகவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் வேரியண்ட் விலை ரூ.35500 ஆக இருக்கிறது. விவோ எஸ் 12 ப்ரோ ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.40200 ஆக இருக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.43700 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 30 முதல் சீனாவில் வாங்குவதற்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் இந்திய அறிமுகம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications