ஆகஸ்ட் 7: விற்பனைக்கு வரும் அசத்தலான விவோ எஸ்1.!

|

விவோ நிறுவனத்தின் அசத்தலான விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஆகஸ்ட் 7-ம் முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடலை பேடிஎம் வழியே வாங்கினால் குறிப்பிட்ட கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 7: விற்பனைக்கு வரும் அசத்தலான விவோ எஸ்1.!

விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். குறிப்பாக 19:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.


இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 7: விற்பனைக்கு வரும் அசத்தலான விவோ எஸ்1.!

மேலும் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது.

விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி மூன்றாம் நிலை சென்சார் என மூன்று ரியர் கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

ஆகஸ்ட் 7: விற்பனைக்கு வரும் அசத்தலான விவோ எஸ்1.!

விவோ எஸ்1 சாதனத்தில் 4500 எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Vivo S1 Pre-Bookings Live At Offline Stores: India Launch Set For August 7 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X