ஆப்பிள் டேப்லெட்டுகே டஃப் கொடுக்கும் புது Vivo டேப்லெட்.. வெயிட்லெஸ் & ஸ்லிம் டிசைன்..
விவோ (Vivo) இன்று சீனாவில் விவோ பேட் ஏர் (Vivo Pad Air) என்ற புதிய டேப்லெட் சாதனத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விவோ நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆன ஜியா ஜிங்டாங் விவோ பேட் ஏரின் போஸ்டரை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த டேப்லெட்டின் சில முக்கிய விவரக்குறிப்புகளையும் உறுதிப்படுத்தியுள்ளார். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விவோ பேட் ஏர் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோவின் மூன்றாவது டேப்லெட் சாதனமாகும். ஏனெனில், நிறுவனம் இதற்கு முன்பு விவோ பேட் மற்றும் விவோ பேட் 2 என்ற 2 சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய டேப்லெட் சாதனத்தின் சிறப்பம்சம் மற்றும் விவரக்குறிப்புகள் பற்றி பேசுகையில், புதிதாக அறிவிக்கப்பட்ட விவோ பேட் ஏர் ஆனது 11.5' இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது ஒரு 2.8K தீர்மானம் கொண்ட டிஸ்பிளே என்பது கவனிக்கத்தக்கது. இந்த டேப்லெட்டில் மெட்டல் பாடி வழங்கப்பட்டுள்ளது. இது 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோ டிஸ்ப்ளே மற்றும் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகிறது.
இது குவால்காம் (Qualcomm) இன் ஆக்டா கோர் (octa-core) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 8,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 44W வேகமான சார்ஜிங்கை வழங்குகிறது. Vivo Pad Air என்ற இந்த புதிய டேப்லெட் சாதனத்தின் விலை மற்றும் கிடைக்கும் விவரங்களை விவோ நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், Vivo வெளிப்படுத்திய படங்களின்படி, Vivo Pad Air மூன்று வண்ண விருப்பங்களில் வெளிவரும்.
இது ப்ளூ (blue), பிங்க் (pink) மற்றும் சில்வர் (silver) ஆகிய 3 வெவ்வேறு நிறங்களில் கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விவோ பேட் ஏர் குவால்காமின் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் (SoC) மூலம் இயக்கப்படுகிறது. இது அட்ரினோ 650 ஜிபியு (Adreno 650 GPU) உடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது, விவோ சாதனத்தின் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விபரங்களை பற்றி நிறுவனம் எந்த தகவலையும் பகிரவில்லை.
இருப்பினும், இது முந்தைய மாடல்களில் வழங்கப்பட ஸ்டோரேஜ் உடன் தழுவி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Vivo Pad Air ஆனது 2.8K தீர்மானம் மற்றும் 3:2 விகிதத்தைக் கொண்ட 11.5' இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 144Hz ரெஃப்ரஷ் ரேட் வீதம் மற்றும் P3 ப்ரோடு வண்ண வரம்பைக் கொண்டுள்ளது. மேலும், டேப்லெட்டில் நான்கு ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சாஃப்டவேரைப் பொறுத்தவரை, விவோ பேட் ஏர் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான ஆரிஜின் ஓஎஸ் 3 (OriginOS 3) இல் இயக்குகிறது. டேப்லெட்டின் தடிமன் அடிப்படையில், 6.67 மிமீ அளவுகள் மற்றும் 530 கிராம் எடையுடையதாக இருக்கிறது. ஏர் என்ற பெயருக்கு ஏற்றார் போல குறைந்த எடையை கொண்டுள்ளது. Vivo Pad Air ஆனது 8,500mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது.
இது 44W வேகமாக சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதன் கேமரா விவரங்கள், ரேம் மற்றும் ஸ்டோரேஜ் மாறுபாடு உள்ளமைவு போன்ற மீதமுள்ள விவரக்குறிப்புகள் மற்றும் செல்ஃபி கேமரா தகவல் ஆகியவை வரும் சில நாட்களில் விலை மற்றும் கிடைக்கும் விவரங்களுடன் Vivo ஆல் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது, Vivo Pad Air இன் உலகளாவிய கிடைக்கும் தன்மை குறித்து Vivo எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை.
இருப்பினும் இது அடுத்த சில மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. சீன சந்தையை தொடர்ந்து, இது உலக சந்தை மற்றும் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சாதனம் பற்றிய கூடுதல் தகவல்களை விரைவில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.


Click it and Unblock the Notifications








