வச்சி செய்யும் Vivo.. இனி லேப்டாப் எதுக்கு.. 12000mAh பேட்டரி, 12.95-இன்ச் டிஸ்பிளே, 16GB ரேம், 66W சார்ஜிங்!
ஆப்பிளின் புதிய ஐபேட் 2025 மாடல்கள் அறிமுகமான வேகத்தில் பல நிறுவனங்கள் தத்தம் புதிய டேப்லெட் மாடலக்ளை அறிமுகம் செய்த வண்ணம் வருகின்றன மற்றும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. அந்த பட்டியலில் விவோ நிறுவனமும் சேர்ந்துள்ளது. 2025 ஏப்ரல் மாதத்தில், விவோ நிறுவனம் ஒரு மெகா வெளியீட்டு நிகழ்வை நடத்தி அதன் பல தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழவில் விவோ எக்ஸ்200 அல்ட்ரா, விவோ எக்ஸ்200எஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களும், விவோ வாட்ச் 5 என்கிற புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடலும் மற்றும் ஒரு புதிய விவோ டேப்லெட்டும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவோவின் புதிய டேப்லெட் - விவோ பேட் 4 ப்ரோ (Vivo Pad 4 Pro) மாடலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

விவோ பேட் 4 ப்ரோ டேப்லெட்டில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? என்ன விலைக்கு வரும்?
- 3.1கே ரெசல்யூஷனை
- 12.95-இன்ச் எல்சிடி பேனல்
- 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 13 மெகாபிக்சல் ரியர் கேமரா
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஒரிஜின்ஓஎஸ் 5
- டைமன்சிட்டி 9400 சிப்செட்
- 8 ஜிபி, 12 ஜிபி அல்லது 16 ஜிபி ரேம்
- 512 ஜிபி வரை ஸ்டோரேஜ்
- 66W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 12,000mAh பேட்டரி
- விலையை பொறுத்தவரை சீனாவில் இது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.45,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
விவோ பேட் 4 ப்ரோ டேப்லெட் ஆனது ஒப்போ பேட் 4 ப்ரோ ( Oppo Pad 4 Pro) மற்றும் சியோமி பேட் 7எஸ் ப்ரோ (Xiaomi Pad 7s Pro) ஆகிய மாடல்களுடன் கடுமையாக போட்டி போடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவோ பேட் 4 ப்ரோ டேப்லெட்டை போலவே, ஒப்போ பேட் 4 ப்ரோ மற்றும் சியோமி பேட் 7எஸ் ப்ரோ ஆகிய இரண்டும் ஏப்ரல் மாதத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்போ பேட் 4 ப்ரோவில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் இடம்பெறலாம், அதே நேரத்தில் சியோமி டேப்லெட்டில் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப் பேக் செய்யப்படலாம். முன்னரே குறிப்பிட்டபடி ஆப்பிள் நிறுவனம் அதன் பட்ஜெட் விலை ஐபேட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்தது. அது ஏ16 சிப் உடனான ஐபேட் (iPad with A16 Chip) மாடல் ஆகும்.
ஆப்பிள் ஐபேட் 2025 மாடலின் வைஃபை ஒன்லி வேரியண்ட்டின் இந்திய விலை விவரங்கள்: பேஸிக் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.34,900 க்கும், 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.44,900 க்கும் மற்றும் ஹை எண்ட் 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.64,900 க்கும் வாங்க கிடைக்கிறது.
ஆப்பிள் ஆப்பிள் ஐபேட் 2025 மாடலின் வைஃபை + செல்லுலார் வேரியண்ட்டின் இந்திய விலை விவரங்கள்: பேஸிக் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.49,900 க்கும், 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.59,900 க்கும் மற்றும் ஹை எண்ட் 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,900 க்கும் வாங்க கிடைக்கிறது.
ஆப்பிள் ஐபேட் 2025 மாடல் ஆனது பிங்க், சில்வர், யெல்லோ மற்றும் ப்ளூ என மொத்தம் 4 கலர்களில் வாங்க கிடைக்கிறது. இந்த ஐபேட்க்கான ஸ்மார்ட் ஃபோலியோ (Smart Folio) மற்றும் மேஜிக் கீபோர்ட் ஃபோலியோ (Magic Keyboard Folio) ஆகியவற்றை முறையே ரூ.8,500 மற்றும் ரூ.24,900 க்கு வாங்க கிடைக்கிறது. இது அனைத்துமே ஆப்பிள் பிராண்டின் அதிகாரப்பூர்வ ஸ்டோர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








