ப்ளடி ஸ்வீட்.. மொத்த டேப்லெட் சந்தையும் காலி.. ஹாட் லுக்கில் Vivo Pad 3 ரெடி.. எப்போ ரிலீஸ்?
விவோ (Vivo) நிறுவனம், விரைவில் அதன் புதிய டேப்லெட் சாதனமான விவோ பேட் 3 (Vivo Pad 3) சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விவோ பேட் 3 சாதனத்தின் அறிமுகம் மற்றும் சிறப்பம்ச விபரங்கள் இதோ.
நீண்ட காலமாக இணையத்தில் அடிக்கடி அடிவாங்கிய ஒரு வார்த்தை தான் விவோ பேட் 3 (Vivo Pad 3). விவோ நிறுவனம் அதன் சொந்த டேப்லெட் சந்தையான சீனாவில், மிக விரைவில் இந்த விவோ பேட் 3 (Vivo Pad 3) டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. ஆனால், இது எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்தது.

ஆனால், இப்போது, பிரபல தளமான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) மூலமாக விவோவின் அடுத்த மிரட்டல் டேப்லெட் சாதனமான விவோ பேட் 3 (Vivo Pad 3) சாதனம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் முக்கிய சிறப்பம்ச விபரங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் அறிமுக தேதி பற்றிய விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
விவோ பேட் 3 (Vivo Pad 3):
@ZionsAnvin என்ற டிப்ஸ்டர் வெளியிட்ட தகவல் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக வெளியானதை வைத்து பார்க்கையில், இந்த விவோ பேட் 3 (Vivo Pad 3) டேப்லெட் சாதனம் 13" இன்ச் LCD டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே 3K ரெசொலூஷன் அம்சத்தை கொண்டிருக்கும்.
இந்த விவோவின் புதிய டேப்லெட் சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 9300 பிராசஸர் (MediaTek Dimensity 9300 processor) உடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விவோ பேட் 3 டேப்லெட் 80W சார்ஜிங் அம்சத்தை ஆதரிக்கும் என்று லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது. இந்த விவோ பேட் 3 (Vivo Pad 3) டேப்லெட் சாதனத்தின் அறிமுகம் எப்போது?

விவோ பேட் 3 டேப்லெட் முக்கிய சிறப்பம்சம் (Vivo Pad 3 Tablet Specs):
டிப்ஸ்டர் வெளியிட்டுள்ள தகவலின் படி, விவோ பேட் 3 (Vivo Pad 3) டேப்லெட் சாதனம் இந்த 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது முதலில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அதனை தொடர்ந்து உலக சந்தை மற்றும் இந்திய சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த காலப்பிரிவில் விவோ நிறுவனம் விவோ பேட் 3 (Vivo Pad 3) டேப்லெட் சாதனம் மட்டுமின்றி, அதன் ஸ்மார்ட்போன் வரிசைகையும் விரிவுபடுத்தவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. டிப்ஸ்டர் தகவலின் படி, இந்த விவோ பேட் 3 (Vivo Pad 3) டேப்லெட் உடன் நாம் விவோ X100s (Vivo X100s) ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.
அதேபோல், இத்துடன் நிறுவனம் விவோ X ஃபோல்ட் 3 (Vivo X Fold 3), மற்றும் விவோ X ஃபோல்ட் 3 ப்ரோ (Vivo X Fold 3 Pro) ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இன்னும் வரும் நாட்களில் இந்த விவோ பேட் 3 டேப்லெட் சாதனத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் பற்றிய விபரங்களை பார்க்கலாம். அதுவரை எங்களுடன் இணைந்திருங்கள். இது பட்ஜெட் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








