வாரி துக்கும் பட்ஜெட்.. 13" இன்ச் LCD டிஸ்பிளே.. பவர்புல் சிப்செட்.. 1 இல்ல 2 டேப்லெட் ரெடி.. Vivo சரவெடி..
விவோ (Vivo) நிறுவனம், விரைவில் அதன் புதிய டேப்லெட் சாதனமான விவோ பேட் 3 (Vivo Pad 3) சீரிஸ் சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் இரண்டு டேப்லெட்கள் இடம்பெடுமென்றும். இவை LCD டிஸ்பிளேவை பெரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விவோ பேட் 3 (Vivo Pad 3) மற்றும் விவோ பேட் 3 ப்ரோ (Vivo Pad 3 Pro): இந்த விவோ பேட் 3 சீரிஸ் வரிசையில், விவோ பேட் 3 (Vivo Pad 3) மற்றும் விவோ பேட் 3 ப்ரோ (Vivo Pad 3 Pro) என்று இரண்டு சாதனங்களை விவோ அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சாதனத்தின் அறிமுகம் மற்றும் முக்கிய சிறப்பம்ச விபரங்கள் இப்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

விவோ பேட் 3 (Vivo Pad 3): இந்த புதிய விவோ பேட் 3 சாதனங்கள் LCD டிஸ்பிளேவை பெரும் என்று புதிய தகவல் குறிப்பிட்டுள்ளது. நீண்ட காலமாக இணையத்தில் அடிக்கடி காணப்பட்டு வந்த விவோ பேட் 3 (Vivo Pad 3) பற்றிய கூடுதல் விபரங்கள் இப்போது வெளியாகியுள்ளன. விவோ நிறுவனம் அதன் சொந்த டேப்லெட் சந்தையான சீனாவில், மிக விரைவில் இந்த விவோ பேட் 3 (Vivo Pad 3) டேப்லெட் சீரிஸ் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது.
விவோ பேட் 3 லீக்ஸ்: அறிமுகத்திற்கு முன்பாக, இப்போது டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக விவோவின் அடுத்த மிரட்டல் டேப்லெட் சாதனமான விவோ பேட் 3 (Vivo Pad 3) சாதனம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் முக்கிய சிறப்பம்ச விபரங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் அறிமுக தேதி பற்றிய விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
13 இன்ச் டிஸ்பிளே: @ZionsAnvin என்ற டிப்ஸ்டர் வெளியிட்ட தகவல் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக வெளியானதை வைத்து பார்க்கையில், இந்த விவோ பேட் 3 (Vivo Pad 3) மற்றும் விவோ பேட் 3 ப்ரோ (Vivo Pad 3 Pro) டேப்லெட் ஆகிய சாதனங்கள் 13" இன்ச் LCD டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே 3K ரெசொலூஷன் அம்சத்துடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

பிராசஸர்: இந்த விவோவின் புதிய டேப்லெட் சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 9300 பிராசஸர் (MediaTek Dimensity 9300 processor) உடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விவோ பேட் 3 டேப்லெட் 80W சார்ஜிங் அம்சத்தை ஆதரிக்கும் என்று லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது. இந்த விவோ பேட் 3 (Vivo Pad 3) டேப்லெட் சாதனத்தின் அறிமுகம் எப்போது என்ற கணிப்பும் இப்போது கணிக்கப்பட்டுள்ளது.
அறிமுகம் எப்போது? புதிய லீக் தகவலின் படி, விவோ பேட் 3 (Vivo Pad 3) மற்றும் விவோ பேட் 3 ப்ரோ (Vivo Pad 3 Pro) டேப்லெட் சாதனம் இந்த 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது முதலில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்தபடியாக உலக சந்தை மற்றும் இந்திய சந்தைகளில் இது வெளிவருமென்று கூறப்பட்டுள்ளது.
விவோ ஸ்மார்ட்போன் 2024: இந்த காலப்பிரிவில் விவோ நிறுவனம் விவோ பேட் 3 (Vivo Pad 3) மற்றும் விவோ பேட் 3 ப்ரோ (Vivo Pad 3 Pro) டேப்லெட் சாதனம் மட்டுமின்றி, நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் வரிசைகையும் விரிவுபடுத்தவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. டிப்ஸ்டர் தகவலின் படி, இந்த விவோ பேட் 3 (Vivo Pad 3) டேப்லெட் உடன் நாம் விவோ X100s (Vivo X100s) ஸ்மார்ட்போனின் அறிமுகத்தையும் எதிர்பார்க்கலாம்.
விலை என்ன: விவோ நிறுவனத்தின் விவோ X ஃபோல்ட் 3 (Vivo X Fold 3), மற்றும் விவோ X ஃபோல்ட் 3 ப்ரோ (Vivo X Fold 3 Pro) ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் இந்திய சந்தையில் பட்ஜெட் செக்மென்ட்டில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








