வரவிருக்கும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பவர்டு ஃபிளாக்ஷிப் உடன் வருகிறதா விவோ எக்ஸ் நோட்: அம்சங்கள்!
விவோவின் புதிய உயர்நிலை ஸ்மார்ட்போனான விவோ எக்ஸ் நோட் வரும் மாதத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சாதனம் விவோ நெக்ஸ்5 என மறுபெயரிட்ட பதிப்பாக வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. விவோவின் சீன இணையதளத்தில் விவோ நோட் எக்ஸ் என ஆன்லைனில் பட்டியலிடப்பட்டுள்ளது. 'Whylab' இதை முதலில் கண்டறிந்த நபர் ஆவார். இது அகற்றப்பட்டாலும் பதிவிட்ட குறுகிய காலத்தில் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மற்றும் விவரக்குறிப்புகள் குறித்த சில முக்கியத் தகவல்கல் வெளியாகியுள்ளது.

விவோ எக்ஸ் நோட்
வெளியான தகவலின்படி, விவோ எக்ஸ் நோட் ஆனது பெரிய 7 இன்ச் 2கே அமோலெட் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சாம்சங் தயாரித்த இ5 அமோலெட் திரையானது அனைத்து மூலைகளிலும் வளைந்து 3டி அல்ட்ராசோனிக் கைரேகை ஸ்கேனரைக் கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்லது. வரவிருக்கும் விவோ நோட் எக்ஸ் சாதனத்தின் முன்பகுதியானது பிராண்டின் தற்போதைய முதன்மை சாதனமான விவோ எக்ஸ் 70 ப்ரோ+ சாதனத்தை நினைவூட்டும் விதமாக இருக்கிறது. இது அமோலெட் டிஸ்ப்ளே 2கே தெளிவுத்திறன் மற்றும் திரவ 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதி
இந்த ஸ்மார்ட்போன் டாப் ஆஃப் தி லைன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறுது. இது இரண்டு கட்டமைப்புகளில் வெளியிடப்படும் எனவும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி உள்சேமிப்பு மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி உள்சேமிப்பு ஆகிய வேரியண்ட்களில் வரும் என கூறப்படுகிறது. 7 இன்ச் 2கே பேனலை ஆதரிக்க, ஸ்மார்ட்போனில் 5,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதன்மை தர செயல்திறன்
விவோ புகைப்படம் எடுக்கும் ஆர்வலர்களுக்கு ஒரு முதன்மை தர செயல்திறனை உறுதி செய்யும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம். விவோ வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளதால், வரவிருக்கும் ஃபிளாக்ஷிப் பேட்டரி ஆயுளை நிரப்ப 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் அம்சம் பயன்படுத்தலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. விவோ எக்ஸ் நோட் ஆனது ஏப்ரல் 2022 இல் சீனாவில் உள்நாட்டு சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்திய சந்தையில் அதன் அதிகாரப்பூர்வ வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ Y01 ஸ்மார்ட்போன்
விவோ சமீபத்தில் விவோ Y01 ஸ்மார்ட்போன் மாடலை ஆப்ரிக்க சந்தையில் அறிமுகம் செய்தது விவோ நிறுவனம்.எலிகன்ட் பிளாக் மற்றும் சபையர் ப்ளூ நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்தது. புதிய விவோ Y01 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிரபார்த்த மீடியாடெக் பி35 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் Funtouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 கோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோ Y01 ஸ்மார்ட்போனின் விவரங்கள்
புதிய விவோ Y01 ஸ்மார்ட்போனின் பின்புறம் 8எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவும் உள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விவோ Y01 ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது
இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய விவோ Y01 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 10 வாட் பாஸ்ட் சார்ஜிங், கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் எலிகன்ட் பிளாக் மற்றும் சபையர் ப்ளூ நிறங்களில் அந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் வி5, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், யுஎஸ்பி ஒடிஜி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ Y01 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications