விவோவின் இது ஒரு 'சின்ன' அப்படி.. அதே 'பெரிய' அப்படி.. விரிவாக்கக்கூடிய டிஸ்பிளேவுடன் புது போன்..

|

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ எதிர்காலத்தில் விரிவாக்கக்கூடிய டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் தயாராகி வருவது போல் தெரிகிறது. இந்த விரிவாக்கக்கூடிய டிஸ்பிளே உடைய புது ஸ்மார்ட்போனின் டிசைன் இப்போது உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பில் நிறுவனம் தாக்கல் செய்துள்ளது. இந்த காப்புரிமை விண்ணப்பத்தின் வரைபடங்கள் எதிர்காலத்தில் இந்த விரிவாக்கக்கூடிய டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன் எப்படி இருக்கும் என்பதைக் காட்டியுள்ளது. இது பற்றிய கூடுதல் சுவாரசியமான தகவலை இப்போது பார்க்கலாம்.

ஒன்னு இருக்கு, ஆனா அதுவே அப்புறமா வேற மாதிரி இருக்கு

ஒன்னு இருக்கு, ஆனா அதுவே அப்புறமா வேற மாதிரி இருக்கு

எஸ்ஜே சூர்யா சொல்வது போல், "ஒன்னு இருக்கு, ஆனா அதுவே அப்புறமா வேற மாதிரி இருக்கு", "இருக்கு ஆனா இல்லை" என்பது போன்ற பாணியில் விவோவின் அடுத்த எதிர்கால ஸ்மார்ட்போனின் மாடல் அமைந்துள்ளது என்பது வேடிக்கை. இருப்பினும், இந்த அட்டகாசமான டிசைனை நிறுவனம் உருவாக்குவதற்கு ஏகப்பட்ட சவாலைச் சந்திக்க வேண்டியது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்படி பியூச்சர்ஸ்டிக் டிசைன்களை மக்களும் அதிகம் விரும்புவதால், இது ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

மிரட்டலான பியூச்சரிஸ்டிக் டிஸ்பிளே டிசைன்

மிரட்டலான பியூச்சரிஸ்டிக் டிஸ்பிளே டிசைன்

விவோ நிறுவனம் முயற்சி செய்துள்ள இந்த புதிய விரிவாக்கக் கூடிய டிஸ்பிளே ஸ்மார்ட்போன்களை நிறுவனம் உருவாக்க முயல்கிறது என்பது சமீபத்திய அறிவிப்பின் மூலம் உறுதியாகியுள்ளது. இது எந்த அளவிற்குச் சாத்தியமாகும் என்பது நமக்கு இப்போதே தெரியவில்லை, ஆனால், இந்த டிசைன் இப்போதே ஸ்மார்ட்போன் பயனர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த டிஸ்பிளே பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

இனி ஸ்மார்ட்போன் டிஸ்பிளே உடையும் என்ற பயம் வேண்டாம்.. விஞ்ஞானிகளின் புதிய தீர்வு.. அல்ட்ராஹார்ட் கிளாஸ்..இனி ஸ்மார்ட்போன் டிஸ்பிளே உடையும் என்ற பயம் வேண்டாம்.. விஞ்ஞானிகளின் புதிய தீர்வு.. அல்ட்ராஹார்ட் கிளாஸ்..

Vivo-வின் அடுத்த எதிர்கால சாதனத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

Vivo-வின் அடுத்த எதிர்கால சாதனத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

குறிப்பாகப் பயனர்கள் தங்களின் ஆவணங்களைப் படிப்பது, வீடியோக்களைப் பார்ப்பது, வீடியோ எடிட்டிங்கிற்கான கிளிப்களைப் பதிவு செய்வது மற்றும் பலவற்றை உள்ளடக்கிய விரிவான செயல்பாடுகளையும், கிட்டத்தட்ட அனைத்தையும் தங்கள் ஸ்மார்ட்போன்களில் செய்ய விரும்புகிறார்கள். இப்படியான செயல்பாட்டிற்கு டிஸ்பிளே பறந்து விரிந்திருந்தால் பயனர்களின் அனுபவம் மேலோங்கும் தானே. இதனால் இந்த எதிர்பார்க்கப்படும் Vivo-வின் அடுத்த சாதனத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

புதிய விரிவாக்கக்கூடிய டிஸ்பிளே ஸ்மார்ட்போனுக்கான காப்புரிமை

புதிய விரிவாக்கக்கூடிய டிஸ்பிளே ஸ்மார்ட்போனுக்கான காப்புரிமை

இந்த புதிய விரிவாக்கக்கூடிய டிஸ்பிளே ஸ்மார்ட்போனுக்கான காப்புரிமை பெற்ற வடிவமைப்பின் படி, இந்த சாதனத்தின் ஸ்பீக்கர் கிரில் மேலே இருக்கும் படி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், USB Type C போர்ட் இந்த ஸ்மார்ட்போனின் உடலின் சைடு பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்திய அறிவிப்பின் படி, காப்புரிமை மே 2021 இல் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது டிசம்பர் 2, 2021 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது.

WhatsApp சாட் மறைப்பது எப்படி? சாட்டை Save செய்து.. டெலீட் செய்து.. மீட்டெடுப்பது எப்படி? ப்ரோ டிப்ஸ்..WhatsApp சாட் மறைப்பது எப்படி? சாட்டை Save செய்து.. டெலீட் செய்து.. மீட்டெடுப்பது எப்படி? ப்ரோ டிப்ஸ்..

Oppo, Tcl போன்ற நிறுவனங்களின் எக்ஸ்பண்டபிள் ஸ்மார்ட்போன்கள்

Oppo, Tcl போன்ற நிறுவனங்களின் எக்ஸ்பண்டபிள் ஸ்மார்ட்போன்கள்

வெளியீட்டின் மூலம் பகிரப்பட்ட காப்புரிமை படங்கள் Vivo பணிபுரியும் ஸ்மார்ட்போனில் விரிவாக்கக்கூடிய டிஸ்பிளே இருப்பது உறுதியாகியுள்ளது. வெளியான படங்களின்படி, இந்த புதிய ஸ்மார்ட்போன் உடலின் கேமரா பக்கத்தைப் பக்கவாட்டில் விரிவாக்குவதன் மூலம் டிஸ்பிளேவை பயனர்கள் பெரிதாக்கலாம் அல்லது விரிவுபடுத்தலாம் என்பது தெரிகிறது. இது ஒரு புதிய தொழில்நுட்பம் அல்லது கருத்து அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில், விரிவாக்கக்கூடிய டிஸ்பிளே ஸ்மார்ட்போன்கள் மூலம் நாம் என்ன செய்ய முடியும் என்பதை Oppo, Tcl போன்ற ஏற்கனவே காட்டியிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

டெமோ செய்து காட்டிய நிறுவனம்

டெமோ செய்து காட்டிய நிறுவனம்

இருப்பினும் இது சுவாரஸ்யமானது, ஏனெனில் விரிவாக்கக்கூடிய டிஸ்பிளேக்கள் இன்னும் பொதுவான விஷயமாகவில்லை என்பதே உண்மை. ஏனெனில், இதற்கு முன்னாள் இந்த ஐடியாவை சமர்ப்பித்த Oppo கூட இன்னும் அதன் விரிவாக்கக்கூடிய டிஸ்பிளேயுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை சந்தையில் வணிக சாதனமாக அறிமுகப்படுத்த முடியவில்லை என்பதே நிதர்சனம். ஆனால், நிறுவனம் இந்த விரிவாக்கக்கூடிய டிஸ்பிளே ஸ்மார்ட்போன்கள் மூலம் என்ன செய்ய முடியும் என்பதை நிறுவனம் டெமோ செய்து காட்டியது குறிப்பிடத்தக்கது.

வெறும் ரூ.799 இருந்தா பேசிக் போன் வாங்கலாம்.. 'இவ்வளவு' இருந்தா ஸ்மார்ட்போனே வாங்கலாம்.. சூப்பர்ல..வெறும் ரூ.799 இருந்தா பேசிக் போன் வாங்கலாம்.. 'இவ்வளவு' இருந்தா ஸ்மார்ட்போனே வாங்கலாம்.. சூப்பர்ல..

டேப்லெட்டிற்கு நெருக்கமான காட்சி அனுபவம் இனி கையடக்க ஸ்மார்ட்போனில்

டேப்லெட்டிற்கு நெருக்கமான காட்சி அனுபவம் இனி கையடக்க ஸ்மார்ட்போனில்

ஆவணங்களைப் படிப்பது, வீடியோக்களைப் பார்ப்பது, விரிவடையக்கூடிய டிஸ்பிளே உடன் கூடிய Vivoவின் எதிர்பார்க்கப்படும் எக்ஸ்பெண்டபிள் டிஸ்பிளே ஸ்மார்ட்போனில் எல்லாம் அம்சங்களும் மிகவும் வேடிக்கையாகவும் பெரியதாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது இயலப்பாக இருக்கும் போது ஒரு ஸ்மார்ட்போனாக செயல்படுகிறது. இதன் டிசப்பிலேவை விரிவுபடுத்தும் போது இது டேப்லெட்டிற்கு நெருக்கமான காட்சி அனுபவத்தை வழங்குகிறது. பெரிய டிஸ்பிளேவில் வீடியோக்களைப் பார்ப்பது, வீடியோ எடிட்டிங்கிற்கான கிளிப்களைப் பதிவு செய்வது போன்ற அனுபவம் இனி இன்னும் விரிவடையும்.

இனி மினி தியேட்டராகவும் செயல்படும் டிஸ்பிளே

இனி மினி தியேட்டராகவும் செயல்படும் டிஸ்பிளே

இனி பெரிய விஷயங்களைச் சிறிய ஸ்மார்ட்போப்பிற்குள் இருந்தே செய்ய முடியும். நீங்கள் நினைக்கும் நேரத்தில் கிட்டத்தட்ட கைக்கு அடக்கமான ஸ்மார்ட்போனாகவும் இது செயல்படும், அதேபோல், நீங்கள் விரும்பும் நேரத்தில் இனி மினி தியேட்டராகவும் செயல்படும். உங்கள் ஸ்மார்ட்போனில் இனி நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பது தான் உங்கள் விருப்பம். இந்த எதிர்பார்க்கப்படும் Vivo சாதனம் எப்போதும் வெளியாகும் என்பது இன்னம் சரியாகத் தெரியவில்லை.

70,000 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு வரும் 'லியோனார்ட்' வால் நட்சத்திரம்.. வெறும் கண்ணிலேயே பார்க்கலாமா?70,000 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு வரும் 'லியோனார்ட்' வால் நட்சத்திரம்.. வெறும் கண்ணிலேயே பார்க்கலாமா?

விரிவாக்கக்கூடிய டிஸ்பிளேயில் கூட செல்ஃபி கேமரா

விரிவாக்கக்கூடிய டிஸ்பிளேயில் கூட செல்ஃபி கேமரா

ஏனெனில், காப்புரிமை பெற்ற வடிவமைப்பின் படி, ஸ்மார்ட்போனின் ஸ்பீக்கர் கிரில் மேலே இருக்கிறது. USB Type C போர்ட் உடலின் பக்கவாட்டில் உள்ளது. ஸ்மார்ட்போனில் ஒரு பஞ்ச் ஹோல் கட் அவுட் வடிவமும் உள்ளது. இது டிஸ்பிளேவின் மேல் வலது புறத்தில் செல்ஃபி கேமராவைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இன்னும் இந்த சாதனத்தில் நிறுவனம் ஏதேனும் சில சிறிய மாற்றங்களைக் கொண்டு வரலாம் அல்லது வராமலும் போகலாம் என்பதால் இந்த டிசைனை முழுமையா எடுத்துக்கொள்ள வேண்டாம்.

எப்போது இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்?

எப்போது இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்?

ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதற்கான காலக்கெடு எதுவும் வெளியாகவில்லை. ஏனென்றால், அதன் காப்புரிமை இப்போதுதான் வெளியிடப்பட்டது மற்றும் நிறுவனத்தால் சாதனம் பற்றி அதிகாரப்பூர்வ பேச்சு எதுவும் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் போட்டி இருப்பதால், ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் விரிவாக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனை முதலில் அறிமுகப்படுத்தும் செயல்முறையை விரைவாகக் கண்காணிக்க விரும்புகின்றன என்பது தெளிவாகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vivo Might Bring New Smartphone With An Expandable Display In The Future : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X