இந்தியால அடுத்த தீ-யா விற்பனையாக போகும் Vivo Y02.! காரணம் இதன் விலை தானா?

|

விவோ நிறுவனம் X90 தொடரை சீனாவில் வெளியிடத் தயாராகி வருகிறது. Vivo இலிருந்து மூன்று பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் Vivo X90, Vivo X90 Pro மற்றும் Vivo X90 Pro+ 5G போன்ற மாடல்கள் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாக விவோ ஃபிளாக்ஷிப்கள் பற்றிய கூடுதல் விவரங்களை புதிய லீக் தகவல்கள் வெளியிட துவங்கியுள்ளன.

இந்தியாவில் தீ-யா விற்பனையாக போகும் புது Y சீரிஸ்

இந்தியாவில் தீ-யா விற்பனையாக போகும் புது Y சீரிஸ்

இதற்கு மத்தியில், இந்த நேரத்தில் நிறுவனம் மற்றொரு புதிய Vivo ஸ்மார்ட்போன் மாடலை மிகவும் மலிவான விலையில் அறிமுகம் செய்யுமென்று மற்றொரு வதந்தியும் பரவத் துவங்கியுள்ளது. இது பற்றிய விவரங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. விவோ தனது Y சீரிஸ் வரிசையில் புதிதாக ஒரு சாதனத்தை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவிருக்கிறது என்று ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

புதிய Vivo Y02 ஸ்மார்ட்போன்

புதிய Vivo Y02 ஸ்மார்ட்போன்

Vivo நிறுவனம் இந்த புதிய மலிவு விலை ஸ்மார்ட்போன் மாடலை Vivo Y02 என்ற பெயரில் அறிமுகம் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் விவோவின் மிகவும் மலிவான ஸ்மார்ட்போன் மாடலாக இந்த புதிய விவோ Y02 இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விவோவின் Y01 மாடலுக்கு அடுத்தபடியாக வெளிவருகிறது.

உங்க 4G டேட்டா திட்டத்துடன் 5G யூஸ் பண்ணலாமா? Airtel, Jio வாடிக்கையாளர்களே கவனியுங்க.!உங்க 4G டேட்டா திட்டத்துடன் 5G யூஸ் பண்ணலாமா? Airtel, Jio வாடிக்கையாளர்களே கவனியுங்க.!

Vivo Y02 பற்றி லீக் ஆனா முக்கிய தகவல்.!

Vivo Y02 பற்றி லீக் ஆனா முக்கிய தகவல்.!

இது தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் வரும் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அதன் முந்தைய மாடலான விவோ Y01 மாடலுக்கு கீழே பட்டியலில் அமர்ந்திருக்கும் என்று கூறப்படுகிறது. அறிமுகத்திற்கு முன்னதாக Vivo Y02 ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்கள் மற்றும் சிறப்பம்ச விபரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

Vivo Y02 சிறப்பம்சம் (எதிர்பார்க்கப்படும்)

Vivo Y02 சிறப்பம்சம் (எதிர்பார்க்கப்படும்)

Vivo விரைவில் இந்தியாவில் Y02 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் என்று ஒரு புதிய லீக் தகவல் குறிப்பிடுகிறது. இந்த போன் V2217 என்ற மாடல் எண் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் வரவிருக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகளை டிப்ஸ்டர் பராஸ் குக்லானி வெளியிட்டுள்ளார். அதுபற்றி இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

5G போன் கதிர்வீச்சால் கேன்சர் ஏற்படுமா? திடுக்கிட வைத்த ஆராய்ச்சியின் முடிவுகள்.!5G போன் கதிர்வீச்சால் கேன்சர் ஏற்படுமா? திடுக்கிட வைத்த ஆராய்ச்சியின் முடிவுகள்.!

விவோ Y02 ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் மற்றும் சிப்செட்

விவோ Y02 ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் மற்றும் சிப்செட்

விவோவின் இந்த மலிவு விலை Y02 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P22 சிப்செட்டை நாம் எதிர்பார்க்கலாம். குறைந்தது இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல், இதன் ஸ்டோரேஜ் குறைந்தபட்சம் 32 ஜிபி இன்டெர்னல் உடன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக ஸ்டோரேஜை விரிவாக்கத்திற்கான ஆதரவும் இருக்கும்.

விவோ Y02 கேமரா அம்சம்

விவோ Y02 கேமரா அம்சம்

Vivo மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி அல்லது 512 ஜிபி வரை எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்புறத்தில், சிங்கிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இது ஒற்றை 8MP பின்புற கேமரா சென்சார் உடன் LED ஃபிளாஷ் உடன் வரும். முன்பக்கத்தில் இது 5MP சென்சார் உடன் வரும்.

எது வேணுமோ அள்ளிக்கோங்க.! அதிரடி ஆஃப்பர்.! Redmi 4G / 5G ரெண்டுமே இருக்கு.!எது வேணுமோ அள்ளிக்கோங்க.! அதிரடி ஆஃப்பர்.! Redmi 4G / 5G ரெண்டுமே இருக்கு.!

மலிவு விலை சாதனத்தில் இத்தனை அம்சமா?

மலிவு விலை சாதனத்தில் இத்தனை அம்சமா?

இந்த மலிவு விலை சாதனம் 5000mAh பேட்டரியை பேக் செய்யும். இது 5W அல்லது 10W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கலாம். விவோவின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் 6.51' இன்ச் ஹாலோ ஃபுல்வியூ ஐபிஎஸ் எல்சிடியைக் கொண்டிருக்கும். இது 1600 x 720 பிக்சல்கள் HD+ தீர்மானத்துடன் வரலாம். இந்த Y02 ஸ்மார்ட்போன் இரட்டை சிம் ஸ்லாட்டைக் கொண்டிருக்கும்.

Vivo Y02 என்ன விலையில் எதிர்பார்க்கப்படுகிறது?

Vivo Y02 என்ன விலையில் எதிர்பார்க்கப்படுகிறது?

இறுதியாக, ஃபோன் Funtouch OS 12 உடன் ஆண்ட்ராய்டு 12 இல் இயங்கும். விவோ இந்த போனை ரூ. 8,449 என்ற விலைக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்று டிப்ஸ்டர் கூறுகிறார். இந்த சாதனம் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதன் சரியான அறிமுக தேதி இன்னும் தெளிவாகக் கிடைக்கவில்லை. ஆனால், அடுத்த மாத இறுதிக்குள் இது விற்பனைக்கு கிடைக்கும் என்று மற்றொரு லீக் தகவல் குறிப்பிடுகிறது.

ஒட்டுமொத்த வீட்டிற்கு ஒட்டுமொத்த வீட்டிற்கு "1" Jio பிளான்.! 17 OTT பலன் இலவசம்.! 3TB டேட்டாவுடன் இன்னும் ஏராளம்.!

Best Mobiles in India

English summary
Vivo May Soon Launch New Vivo Y02 Smartphone Under Rs 9000 in India.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X