விவோ ஸ்மார்ட்போன் வைத்திருப்பவரா நீங்கள்: உங்களுக்கு ஒரு நற்செய்தி!

|

விவோ தனது நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு தற்போதுள்ள ஃபன்டச் ஓஎஸ்-க்கு மாற்றாக ஆரிஜின் ஓஸ் எனப்படும் புதிய ஆபரேட்டிங் சிஸ்டம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விவோ புதிய ஆபரேட்டிங் சிஸ்டம்

விவோ புதிய ஆபரேட்டிங் சிஸ்டம்

விவோவின் புதிய ஆபரேட்டிங் சிஸ்டம் ஆரிஜின் ஓஎஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஓஎஸ் தற்போதிருக்கும் ஃபன்டச் ஓஎஸ்-ல் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆரிஜின் ஓஎஸ் குறித்த அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்றாலும் தற்போதுவரை கிடைத்துள்ள தகவல்களை ஆராய்ந்து பார்க்கலாம்.

டிப்ஸ்டர் வெளியிட்ட தகவல்

டிப்ஸ்டர் வெளியிட்ட தகவல்

டிஜிட்டல் சேட் ஸ்டேஷன் என்று அழைக்கப்படும் டிப்ஸ்டரின் தகவலை சற்று ஆராய்ந்து பார்க்கையில், விவோவின் புதிய ஆரிஜன் ஓஎஸ் இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்க வாய்ப்புள்ளது. இது சாத்தியமாகும் பட்சத்தில் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் விவோ எக்ஸ் 60 தொடருடன் இந்த ஓஎஸ் அறிமுகமாக அதிக வாய்ப்பிருக்கிறது.

ஃபன்டச் ஓஎஸ் 11

ஃபன்டச் ஓஎஸ் 11

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக விவோ ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்ட்ராய்டு அடிப்படையிலான இயக்க முறைமையை மேம்படுத்தும் பணியில் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. அதன்படி விவோ சமீபத்தில் விவோ வி20 ஸ்மார்ட்போனை இந்தியாவில் ஃபன்டச் ஓஎஸ் 11 உடன் அறிமுகப்படுத்தியது. இதுவே விவோ நிறுவனம் ஆண்ட்ராய்டு 11 உடன் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஸ்மார்ட்போனாகும்.

வெறும் ரூ.3,597-க்கு மூன்று கேமரா,18W சார்ஜிங் கொண்ட ஒப்போ ஏ33: பிளிப்கார்ட் தீபாவளி விற்பனை!வெறும் ரூ.3,597-க்கு மூன்று கேமரா,18W சார்ஜிங் கொண்ட ஒப்போ ஏ33: பிளிப்கார்ட் தீபாவளி விற்பனை!

புதிய ஆபரேட்டிங் சிஸ்டம் இயக்கமுறை

புதிய ஆபரேட்டிங் சிஸ்டம் இயக்கமுறை

இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு புதிய ஆபரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்யும் பணியில் விவோ நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய ஆபரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்த மென்மையாக இருக்கும் என்றும் பயன்பாடு விவேகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போதுவரை அதிகாரப்பூரவ அறிவிப்பு இல்லை என்றாலும் வெளியாகும் தகவல் ஆரிஜின் ஓஎஸ் பயன்பாட்டை உறுதிப்படுத்தும் விதமாகவே உள்ளது.

விவோ வி 20 ஸ்மார்ட்போன்

விவோ வி 20 ஸ்மார்ட்போன்

சமீபத்தில் விவோ வி 20 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 11 உடன் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயத்தை பொருத்தவரை இது 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூ.24,990 எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூ.27,990 எனவும் விற்பனைக்கு கிடைக்கிறது.

6.44 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

6.44 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

6.44 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இதில் மூன்று கேமரா இருக்கிறது. அது 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் கேமரா ஆகும்.

4000 எம்ஏஎச் பேட்டரி

4000 எம்ஏஎச் பேட்டரி

விவோ வி 20 ஸ்மார்ட்போனில் 44 மெகாபிக்சல் செல்பி கேமரா, 4000 எம்ஏஎச் பேட்டரி 33 வாட்ஸ் ஃபளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் இருக்கிறது. அதோடு விவோ வி 20 ப்ரோ 5ஜி தயாரிப்பில் நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும் இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் இறுதிக்குள் அறிமுகமாகும் என்றும் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி ஜெரோம் சென் கூறியிருந்ததாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

source: indiatoday.in

Best Mobiles in India

English summary
Vivo May Launching Origin Os to Replace Funtouch Os

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X