Home
News

'பறக்கும் கேமரா'வுடன் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.. விவோ செய்யும் நம்ப முடியாத காரியம் இது தான்..

விவோ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் கேமராக்கள் மூலம் நிறைய புதிய பரிசோதனைகளைச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் நிறுவனம் கிம்பல் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்ட பிறகு, இப்போது அடுத்தகட்ட நடவடிக்கையாக விவோ நிறுவனம் ஒருங்கிணைந்த பறக்கும் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் மாடலை உருவாக்குவதில் மும்முரமாக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. ட்ரோன் போன்ற திறன்களைக் கொண்ட கேமராவில் விவோ செயல்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஸ்மார்ட்போனிலிருந்து பிரிக்கப்பட்டு பறக்கக்கூடிய கேமரா

ஸ்மார்ட்போனிலிருந்து பிரிக்கப்பட்டு பறக்கக்கூடிய கேமரா

இது ஸ்மார்ட்போனிலிருந்து பிரிக்கப்பட்டு, காற்றில் பறந்து வான்வழி படங்கள் மற்றும் வீடியோக்களை படம்பிடிக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. விவோ நிறுவனம் 2020 டிசம்பரில், இந்த ஸ்மார்ட்போனுக்கான காப்புரிமையை உலக அறிவுசார் சொத்து அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது. பறக்கும் கேமராவுடன் வடிவமைக்கப்பட்டுள்ள விவோவின் புதிய ஸ்மார்ட்போன் மாடலின் டிசைனிங் ஓவியம் இணையத்தில் தற்பொழுது வெளியாகியுள்ளது.

பறக்கும் கேமரா உடன் விவோவின் ஸ்மார்ட்போன்

பறக்கும் கேமரா உடன் விவோவின் ஸ்மார்ட்போன்

பறக்கும் கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போனின் இந்த ஓவியத்தை முதலில் டச்சு வெளியீடான லெட்ஸ் கோ டிஜிட்டல் கண்டறிந்தது. தொலைப்பேசியின் விளிம்பில் இழுக்கும் பெட்டியுடன் கூடிய ஸ்மார்ட்போனை ஸ்கெட்ச் காட்டுகிறது. இழுக்கப்படும் கேமரா பெட்டியில், நான்கு ப்ரொபல்லர்கள் உள்ளன, இத்துடன் ஒரு உள்ளமைக்கப்பட்ட பேட்டரி பெட்டியும் உள்ளது. காற்றில் பறக்கும்போது மோதலைத் தவிர்க்க மூன்று அகச்சிவப்பு சென்சார்களுடன் இரண்டு கேமராக்கள் இந்த அமைப்பில் உள்ளது.

மூன்றாவது மற்றும் நான்காவது கேமராவுக்கு வாய்ப்புள்ளதா?

மூன்றாவது மற்றும் நான்காவது கேமராவுக்கு வாய்ப்புள்ளதா?

முதல் கேமரா முன் வான்வழி காட்சியை எடுக்கும், மற்றொன்று கீழே உள்ள காட்சிகளைப் பிடிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. கேமரா பெட்டியை ஸ்மார்ட்போனிலிருந்து முழுமையாக வெளியேற்ற முடியும் என்று காப்புரிமை ஓவியம் காட்டுகிறது. ஸ்மார்ட்போனில் இரண்டு கேமராக்களுக்கு மேல் இருக்கவும் வாய்ப்பிருப்பதாக மற்றொரு செய்தி தகவல் வெளியாகியுள்ளது. சுற்றியுள்ள இடங்களில் மூன்றாவது மற்றும் நான்காவது கேமராக்கள் பொருத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

சிறிய வடிவில் டிரோன் போன்ற பறக்கும் ஸ்மார்ட்போன் கேமரா

சிறிய வடிவில் டிரோன் போன்ற பறக்கும் ஸ்மார்ட்போன் கேமரா

பறக்கும் கேமரா மிகவும் சிறியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் இது ஸ்மார்ட்போனுக்குள் வைக்கப்படும் வகையில் உருவாக்கப்படுகிறது. இருப்பினும், காப்புரிமை நிறுவனம் இது போன்ற ஒரு தொலைப்பேசியைச் சந்தைக்குக் கொண்டு வரும் என்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அத்தகைய வகையில் இது ஸ்மார்ட்போன் வடிவமைப்பை மாறுவதற்கான வாய்ப்புகள் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் நிறையக் காப்புரிமை டிசைன்களை தாக்கல் செய்கின்றன, ஆனால் அவற்றில் சில மட்டுமே சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது.

அதிநவீன தொழில்நுட்பம் இனி உங்கள் கரங்களில்

அதிநவீன தொழில்நுட்பம் இனி உங்கள் கரங்களில்

இருப்பினும், இந்த டிசைன் ஒருவேளை அங்கீகரிக்கப்பட்டால், நிச்சயமாக மக்களின் கவனத்தை ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. புத்தகத்தைப்படக் கலைஞர்களுக்குத் தனியாக டிரோன் வாங்கி படம்பிடிக்கும் செலவை இந்த பறக்கும் கேமரா ஸ்மார்ட்போன் குறைக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. பறக்கும் டிரோன் உடன் ஸ்மார்ட்போனில் ஒரு கேமரா இருக்கும் பட்சத்தில் உங்களைச் சுற்றி உள்ள அணைத்து கோணங்களிலும் உங்களால் எளிதாகப் படம்பிடிக்க முடியும் என்பதைத் தாண்டி, அதிநவீன தொழில்நுட்பத்தை உங்கள் கரங்களுக்குள் அடங்கிவிடும்.

Best Mobiles in India

English summary
Vivo is working on a smartphone with an integrated flying camera that will have drone-like capabilities : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X