Home
News

OriginOS 5: ஐக்யூ, விவோ போன் இருக்கா? மொத்தமாக மாற போகுது ஓஎஸ்.. பீச்சர்கள் எப்படி? எந்தெந்த மாடல்களில்?

ஐக்யூ (iQOO) மற்றும் விவோ (Vivo) பிரியர்கள் மூக்கில் விரல் வைக்கும்படியான பீச்சர்களுடன் ஓர்ஜின்ஓஎஸ்5 (OriginOS 5) களமிறங்கி இருக்கிறது. டைனாமிக் ஐலோண்ட், கஸ்டமைசபிள் லாக் ஸ்கிரீன் விட்ஜெட்ஸ், அடோமிக் ஐலேண் ஃபங்ஷன், சியோ வி போன் அசிஸ்டன்ட், சியோ வி ரைட்டிங் போன்ற பல்வேறு பீச்சர்களை பேக் செய்துள்ளது. ஏற்கனவே, இந்தியாவில் ஃபன்டச்ஓஎஸ் 15 (Funtouch OS 15) வெளியாகியது. இப்போது, கூடுதல் பீச்சர்களுடன் இந்த ஓர்ஜின்ஓஎஸ்5 வெளியாகியிருக்கிறது. இதனால், அப்டேட் மூலம் இந்தியாவிலும் வரலாம்.

இந்த ஓர்ஜின்ஓஎஸ்5 ஆனது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட மாடல்களில் வெளியாக இருக்கிறது. ஆகவே, இப்போதைக்கு பிரீமியம் மாடல்களில் மட்டும் டெஸ்டிங் செய்ய கிடைக்க இருக்கிறது. அதன்பிறகு மிட்-ரேஞ்ச் மாடல்களுக்கு வரும். இந்த பீச்சர்கள் இந்தியாவிலுள்ள ஐக்யூ மற்றும் விவோ போன்களின் ஃபன்டச்ஓஎஸ் 15 மாடல்களில் அப்டேட் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

OriginOS 5: ஐக்யூ, விவோ போன் இருக்கா? மொத்தமாக மாற போகுது ஓஎஸ்!

இதனாலேயே இந்த ஓர்ஜின்ஓஎஸ்5 மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இப்போது, பீச்சர்களை பார்ப்போம். டைனாமிக் எஃபெக்ஸ்ட், என்ஹான்ஸ்டு ப்ளூயன்சி, டெப்த்-ஆப்-பீல்டு வால்பேப்பர், கஸ்டமைசபிள் லாக் ஸ்கிரீன் விட்ஜெட்ஸ் மற்றும் டைனாமிக் ஐலேண்ட் பீச்சர்களை கொடுக்க இருக்கிறது. ப்ளூ ஹார்ட் லிட்டில் வி அசிஸ்டன்ட் கிடைக்க இருக்கிறது.

இந்த பீச்சர் மூலம் வாய்ஸ் கமெண்ட் அல்லது லாங் பிரஸ் மூலம் இமேஜ் அல்லது ஃபைல்களை ட்ராக்கிங் மற்றும் டிராப்பிங் செய்து கொள்ளலாம். கிட்டத்தட்ட காப்பி மற்றும் பேஸ்டு போலத்தான். ஏஐ வீடியோ எடிட்டிங் சப்போர்ட் கொண்ட டைம் சில்லவுட் பீச்சர் வருகிறது. இந்த பீச்சர் மூலம் ஆட்டோமேடிக் மியூசிக் மற்றும் வாய்ஸ் சிங்க் கிடைக்கும்.

சியோ வி போன் அசிஸ்டன்ட் பீச்சர் வருகிறது. இந்த பீச்சர் மூலம் வாய்ஸ் கால்களில் இருந்து நோட்ஸ் எடுத்து கொள்ளலாம். பல மொழிகள் சப்போர்ட் உள்ளதால், புரியாத வார்த்தைகளை மொழிப்பெயர்த்து பதிவு செய்யப்பட்ட டெக்ஸ்ட் மூலம் தெரிந்து கொள்ள முடியும். அடோமிக் அனிமேஷன் 5.0 பீச்சர் மூலம் லைட் மற்றும் ஷேடோ எஃபெக்ட்களை பெற்று கொள்ளலாம். இப்படி ஏராளமானவை உள்ளன.

எந்தெந்த மாடல்களில் கிடைக்கும்: 2024 நவம்பர் மாதத்தில் இருந்து விவோ எக்ஸ் போல்டு3 ப்ரோ, விவோ எக்ஸ் போல்டு3, விவோ எக்ஸ்100 அல்ட்ரா, விவோ எக்ஸ்100எஸ் ப்ரோ, விவோ எக்ஸ்100 ப்ரோ, விவோ எக்ஸ்100எஸ் மற்றும் விவோ எக்ஸ்100 போன்களில் கிடைக்க இருக்கிறது. ஐக்யூ 12 ப்ரோ, ஐக்யூ 12, ஐக்யூ நியோ9எஸ் ப்ரோ பிளஸ் மாடல்களில் வருகிறது.

மேலும், ஐக்யூ நியோ9 ப்ரோ, ஐக்யூ நியோ9எஸ் ப்ரோ மற்றும் ஐக்யூ நியோ9 மாடல்களிலும் கிடைக்க இருக்கிறது. 2024 டிசம்பர் மாதத்தில் இருந்து விவோ எக்ஸ் போல்ட்2, விவோ எக்ஸ் ஃபிளிப், விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ், விவோ எக்ஸ்90 ப்ரோ, விவோ எக்ஸ்90எஸ், விவோ எக்ஸ்9 மாடல்களில் வருகிறது. மேலும், ஐக்யூ 11 ப்ரோ, ஐக்யூ 11எஸ் மற்றும் ஐக்யூ 11 மாடல்களில் வருகிறது.

அதேபோல ஐக்யூ இசட்9 டர்போபிளஸ் மாடலிலும் கிடைக்க இருக்கிறது. இதில் விவோ எக்ஸ் போல்டு3 ப்ரோ, விவோ எக்ஸ்100 அல்ட்ரா, . ஐக்யூ 12 ப்ரோ, ஐக்யூ நியோ9எஸ் ப்ரோ, ஐக்யூ 11 ப்ரோ, விவோ எக்ஸ்90 ப்ரோ போன்ற பல்வேறு மாடல்கள் இந்தியாவில் வெளியாகி இருக்கின்றன. முதலில் சீனாவில் வெளியாகும். அதன்பிறகு ஃபன்டச் ஓஎஸ் மூலம் இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Introduces OriginOS 5 Powered By Android 15 Check New Features And Rollout Models Of Vivo iQOO
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X