Home
News

Vivo-க்கு அடிச்சாச்சு யோகம்.. AI பீச்சர்களில் மிரளவிடும் FOS 15.. CALL டிரான்ஸ்லேஷன் டூ AI போட்டோ என்ஹான்ஸ்!

இந்தியாவில் இருக்கும் விவோ (Vivo) பிரியர்களுக்கு அடிச்சது யோகம் என்று சொல்லும்படி ஏஐ பீச்சர்களை வாரி வழங்கி இருக்கிறது, ஃபன்டச் ஓஎஸ் 15 (FunTouch OS 15). ஏற்கனவே, பல்வேறு மாடல்களில் இந்த ஓஎஸ் கிடைத்தாலும், இப்போது அதில் புதிய ஏஐ பீச்சர்கள் களமிறக்கப்பட்டுள்ளன. ஏஐ எரைஸ், ஏஐ லைவ் கட்அவுட், ஏஐ டிரான்ஸ்கிரிப்ட் அசிஸ்ட், ஏஐ ஸ்கீரின் டிரான்லேஷன், ஏஐ கால் டிரான்ஸ்லேஷன் மற்றும் ஏஐ போட்டோ என்ஹான்ஸ் என்று ஒட்டுமொத்தமாகவே பட்டையை கிளப்பி இருக்கிறது.

சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்களை தொடர்ந்து அடுத்தடுத்து மற்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் அதனுடைய மாடல்களில் ஏஐ பீச்சர்களை கொடுக்க தொடங்கிவிட்டன. இந்த பீச்சர்கள் கேமரா மற்றும் மல்டி-மீடியாவில் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. இப்போது, விவோ நிறுவனமும் அதனுடைய ஃபன்டச் ஓஎஸ் 15-இல் புதிய பீச்சர்களை கொண்டுவந்துள்ளது.

Vivo-க்கு அடிச்சாச்சு யோகம்.. AI பீச்சர்களில் மிரளவிடும் FOS 15!

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் பேஸ்டு வெர்ஷனாக கிடைக்கும் இந்த ஃபன்டச் ஓஎஸ் 15 ஆனது ஏற்கனவே, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விவோ மற்றும் ஐக்யூ ஸ்மார்ட்போன்களில் கிடைக்கின்றன. ஆனால், அதில் புதிய அப்டேட்களுடன் என்னென்ன ஏஐ பீச்சர்கள் கிடைக்க இருக்கிறது என்பதை விவோ இந்தியா நிறுவனம், இப்போது பட்டியலிட்டுள்ளது. இதை இப்போது பார்ப்போம்.

ஏஐ எரைஸ் & ஏஐ லைவ் கட்அவுட் (AI Erase & AI LIVE Cutout): இது கேமரா பிரியர்களுக்காக கிடைக்கும் பீச்சராகும். இந்த பீச்சர் மூலம் நீங்கள் கிளிக் செய்த போட்டோவில் இருக்கும் தேவையில்லாத ஆப்ஜெக்ட்களை நீக்கி கொள்ளலாம். இது கிட்டத்த கிளீன் செய்வது போலத்தான். அந்த ஆப்ஜெக்ட் இருந்த இடமே தெரியாமல் போகிவிடும். இதனால், எதிர்பார்த்த அவுட்புட் கிடைக்கும்.

இதேபோல ஏஐ லைவ் கட்அவுட் பீச்சர் மூலம் உங்களுக்கு தேவையான சப்ஜெக்ட்டை மட்டும் கட்அவுட் செய்து கொள்ள முடியும். இது கிட்டத்தட்ட பேக்கிரவுண்ட் எரைசரை போலத்தான். ஆனால், இது ஏஐ மூலம் கொடுக்கப்படுவதால், சுலபமாக அதை செய்து கொள்ள முடியும். இதன் மூலம் பேக்கிரவுண்ட்களை மாற்றி கொள்ளலாம், அல்லது பிஎன்ஜி போல பயன்படுத்தி கொள்ளலாம்.

Vivo-க்கு அடிச்சாச்சு யோகம்.. AI பீச்சர்களில் மிரளவிடும் FOS 15!

ஏஐ டிரான்ஸ்கிரிப்ட் அசிஸ்ட் (AI Transcript Assist): இந்த பீச்சர் மூலம் மீட்டிங், இன்டர்வியூ போன்ற நேரங்களில் ஆடியோவை டெக்ஸ்ட்டாக மாற்றி கொள்ள முடியும். அதேபோல அந்த டெக்ஸ்ட்டை சம்மரைஸ் செய்யவும், ஒரு குறிப்பிட்ட வார்த்தையை கொடுத்து சர்ச்ச் செய்யவும் முடியும். இதன் மூலம் நீங்கள் கவனிக்க தவறிய கன்டென்ட்களை கூட பிறகு எடுத்து பார்த்து கொள்ள முடியும்.

ஏஐ ஸ்கிரீன் டிரான்ஸ்லேஷன் (AI Screen Translation): இந்த பீச்சர் மூலம் உங்களது ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனில் தோன்றும் எதையும் டிரான்ஸ்லேஷன் செய்து கொள்ளலாம். அது போட்டோவாக இருந்தாலும் சரி, பிடிஎப் ஃபைல்லாக இருந்தாலும் சரி அப்படியே உங்களது மொழியில் டிரான்ஸ்லேஷன் செய்ய முடியும். அதே நேரத்தில் அதை சேவ் செய்து டெக்ஸ்ட்டாகவும் பயன்படுத்தவும் முடியும்.

ஏஐ கால் டிரான்ஸ்லேஷன் & ஏஐ லைவ் டெக்ஸ்ட் (AI Call Translation & AI Live Text): இந்த கால் டிரான்ஸ்லேஷன் பீச்சர் மூலம் வேறு மொழியில் வரும் கால்களை உங்களது மொழியில் டிரான்ஸ்லேட் செய்து ஆடியோவாக கேட்க முடியும். அதேபோல லைவ் டெக்ஸ்ட் மூலம் உங்களது ஸ்கிரீனில் தோன்றும் எதில் இருந்தும், அட்ரஸ், போன் நம்பர் போன்றவற்றை காப்பி செய்து பயன்படுத்த முடியும்.

ஏஐ போட்டோ என்ஹான்ஸ் (AI Photo Enhance): ஸ்மார்ட்போனின் கேமராவில் எடுத்த போட்டோக்களில் பல, நீங்கள் நினைத்த கிளாரிட்டியில் இருக்காது. இதற்காக கலர் கரெக்சன், கான்ட்ரான்ஸ்ட் போன்ற எடிட்டிங்களை செய்ய வேண்டி இருக்கும். ஆனால், இந்த ஏஐ போட்டோ என்ஹான்ஸ் பீச்சர்கள் மூலம் அதை சில நொடிகளில் செய்து முடிக்க முடியும்.

அதாவது, நீங்கள் கிளிக் செய்த போட்டோவை ஓப்பன் செய்து, ஏஐ போட்டோ என்ஹான்ஸ் ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அந்த போட்டோவானது ஏஐ மூலம் என்ஹான்ஸ் செய்து கொடுக்கப்படும். இது சில நொடிகளில் நடப்பதால், வேலை மிச்சமாகிறது. அவுட்புட் பிரீமியமாக கிடைக்கிறது. இதற்கு அடுத்து வழக்கமான சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search) பீச்சர் கிடைக்கிறது.

இந்த பீச்சர் மூலம் உங்களது ஸ்மார்ட்போனில் தோன்றும் டெக்ஸ்ட், போட்டோ, அல்லது ஆப்ஜெக்ட்களை சர்க்கிள் செய்தால் போதும். அதனுடைய விவரங்கள் இன்டர்நெட்டில் தேடி கொடுக்கப்படும். இதனால் தெரியாத விவரங்களை எளிதாக சர்ச்ச் செய்து தெரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு அடுத்து ஏஐ நோட்ஸ் அசிஸ்ட் பீச்சர் கிடைக்கிறது.

ஏஐ நோட்ஸ் அசிஸ்ட் (AI Note Assist): மாணவர்கள் அல்லது வொர்க்கிங் ப்ரோபஸ்னல்களுக்கு இந்த பீச்சர் முக்கியமாக இருக்கிறது. ஈமெயில் அல்லது நோட்ஸ் கிரியேட் செய்வது அல்லது அதை சம்மரைஸ் செய்வது, ஹைலைட் செய்வது போன்ற பலவற்றை இந்த பீச்சர் மூலம் செய்து கொள்ள முடியும். அதேபோல ஸ்மார்ட் லேய்அவுட், டிரான்ஸ்லேஷன் ஆப்ஷன்களும் கிடைக்கின்றன.

இப்படி கேமரா மற்றும் மல்டி மீடியாவில் ஏராளமான ஏஐ பீச்சர்களை விவோ நிறுவனம் கொடுக்கிறது. இந்த பீச்சர்கள் மூலம் கேமரா பிரியர்களுக்கு எந்தவொரு எடிட்டிங் வேலையும் இல்லாமலேயே பிரீமியம் போட்டோ அவுட்புட் கிடைக்கிறது. அதேபோல மல்டி மீடியாவில் சிரமாக செய்யப்பட்டுவந்த வேலையில் இப்போது நொடியில் ஏஐ மூலம் செய்யப்படுகின்றன.

விவோ நிறுவனத்தின் ஃபன்டச் ஓஎஸ் 15 ஆனது கடந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதியே அறிமுகமாகியது. ஆனால், முதலில் விவோ எக்ஸ்100 சீரிஸ், விவோ எக்ஸ் போல்டு 3 ப்ரோ, விவோ வி30 சீரிஸ், விவோ வி27 ப்ரோ போன்ற பிரீமியம் மற்றும் மிட்-பிரீமியம் மாடல்களுக்கு மட்டுமே கிடைத்தது. இப்போது, அடுத்தடுத்த மாடல்களுக்கு அப்டேட் மூலம் கிடைத்து வருகிறது.

இந்த விவோ போன்கள் மட்டுமல்லாமல், ஐக்யூ 12, ஐக்யூ நியோ 9 ப்ரோ, ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ, ஐக்யூ நியோ 7, ஐக்யூ நியோ 7 ப்ரோ போன்ற மாடல்களிலும் ஃபன்டச் ஓஎஸ் 15 கிடைக்கிறது. அடுத்தடுத்த மாதங்களில் மற்ற மாடல்களுக்கும் கிடைக்க இருக்கிறது. இதில் பீட்டா வெர்ஷனிலும் பல்வேறு மாடல்களுக்கு ஃபன்டச் ஓஎஸ் 15 அப்டேட் கிடைத்து இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Introduces Latest AI Features For FunTouch OS 15 Based on Android 15 platform
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X