பணமோசடி வழக்கில் சோதனை: பிரபல செல்போன் நிறுவன இயக்குனர்கள் செஞ்ச வேலைய பாத்தீங்களா?
சீனாவை சேர்ந்த பிரபல செல்போன் நிறுவனம் தான் விவோ. இந்நிறுவனம் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் கிளைகளை அமைத்து தொழில் செய்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் செயல்பட்டு வரும் விவோ நிறுவனத்தின் இயக்குனர்களாக ஹுஹென்ஷென் ஒவ் மற்றும் ஹூஹெங் ஜீ ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.

44 இடங்களில் ரெய்டு
மேலும் கடந்த செவ்வாயன்று விவோ தொடர்புடைய 44 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் டெல்லி, உத்தரப் பிரதேசம், மேகலாயா, மாகாராஷ்டிரா போன்ற முக்கிய இடங்களில் இருக்கும் விவோ தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

போலி ஆவணங்கள்
குறிப்பாக இந்த சோதனையில் போலி ஆவணங்களை பயன்படுத்தியதாக ஜம்மு மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த விவோ விநியோக அமைப்பின் மீது டெல்லி காவல் துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.
அதன்பின்பு இந்த முதல் தகவல் அறிக்கையை கொண்டே, அமலாக்கத் துறையும் விவோ நிறுவனம் மீது ஒரு வழக்கு பதிவு செய்தது.

அதேபோல் இதன் தொடர்ச்சியாக விவோ தொடர்புடைய பல இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலி நிறுவனங்கள் வழியே பணப் பரிவர்த்தனை செய்யும் நோக்கில், போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

விவோ நிறுவனத்தின் இயக்குனர்கள்
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள விவோ நிறுவனத்தின் இயக்குனர்களான ஹூஹென்ஷென் ஒவ் மற்றும் ஹூஹெங் ஜீ ஆகிய இரண்டு பேரும் இந்தியாவை விட்டு தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் விவோ நிறுவனத்தின் இயஙகுனர்கள் இரண்டு பேர் இந்தியாவை விட்டு தப்பிச்சென்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஒரு பிரச்சனையில் சிக்கி உள்ளது
விவோ நிறுவனம் ஏற்கனவே ஒரு பிரச்சனையில் சிக்கியது. அதாவது செல்போன் நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு தனித்தனி ஐஎம்இஐ எண்ணை கொண்டிருக்க வேண்டும் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2017-ம் ஆண்டு உத்தரவுபிறப்பித்தது.

உத்தரப் பிரதேச காவல்துறை
குறிப்பாக இது தவறும்பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்ததது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்.ஆனால் விவோ நிறுவனத்தின் சுமார் 13500 போன்கள் ஒரே இஎம்இஐ எண்ணை கொண்டிருந்தது 2020-ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து உத்தரப் பிரதேச காவல்துறை விவோ நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்தது.

5ஜி சேவை
இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் விவோ நிறுவனமும் பல 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளதால் நிறுவனம் போன்களை அறிமுகம் செய்யுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications