இந்த டைம் ஸ்மார்ட்போன் இல்ல., வேற: முதன்மை ரக சிப்செட் வசதியோடு வரும் விவோ சாதனம்- என்ன., எப்போது அறிமுகம்?

|

விவோ டேப்லெட் குறித்த தகவல் கடந்த சில மாதங்களாகவே இணையதளத்தில் வெளியாகி வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் 2022 நான்காம் காலாண்டில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதே சமயத்தில் விவோ நிர்வாகி அதிகாரப்பூர்வமாக 2022-ன் முதல் பாதியில் வெளியிடப்படும் என உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து இதன் வெளியீடு விரைவில் இருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாகவே வரவிருக்கும் விவோ டேப்லெட்டில் வடிவமைப்பு மற்றும் சில அம்சங்கள் கசிந்திருக்கிறது. தற்போது புதிய கசிவு விவோ டேப்லெட் செயலி குறித்த தகவலை வெளியிட்டிருக்கிறது.

விவோ டேப்லெட் விவரங்கள்

விவோ டேப்லெட் விவரங்கள்

இந்த தகவலானது சீன டிப்ஸ்டர் டிஜிட்டல் அரட்டை நிலையம் வழியாக வெளியிடப்பட்டிருக்கிறது. டிப்ஸ்டர் தகவலின்படி, விவோவின் முதல் டேப்லெட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் அதே சிப்செட் சியோமி பேட் 5 பேட் ப்ரோ சாதனமும் இயக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதைத் தவிர விவோ டேப்லெட் குறித்த எந்த விவரங்களையும் டிப்ஸ்டர் பகிர்ந்து கொள்ளவில்லை. அதேசமயத்தில் 2022 ஆம் ஆண்டில் அதிக உற்பத்தியாளர்கள் டேப்லெட் சந்தையில் நுழைவார்கள் என அவர் குறிப்பிட்டார். இதையடுத்து வாடிக்கையாளர்களுக்கு பரந்த அளவிலான டேப்லெட் விருப்பங்களை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் அதன் முதல் டேப்லெட்

விரைவில் அதன் முதல் டேப்லெட்

ஒன்பிளஸ் நிறுவனமும் டேப்லெட்கள் பிரிவில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் பேட் மோனிகர் முன்பு இயூஐபிஓ-வில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஒப்போ விரைவில் அதன் முதல் டேப்லெட் ஒப்போ பேட்-ஐ அறிமுகப்படுத்த உள்ளது. இதன் விலை இந்திய மதிப்புப்படி சுமார் ரூ.23,290 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. டிப்ஸ்டர் மின் மை டேப்லெட்கள் சிறிய அளவிலான கேமிங் வசதி சூப்பர் பிக் டிஸ்ப்ளே ஓஎல்இடி வசதியோடு கூடிய ஃபிளாக்ஷிப் டேப்லெட் ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

விவோ பேட் என்ற பெயர்

விவோ பேட் என்ற பெயர்

அதேசமயத்தில் விவோ டேப்லெட்-ன் சரியான பெயர் விவரங்கள் இன்னும் தெரியவில்லை. தற்போது பிராண்ட் டேப்லெட்டை விவோ பேட் என்ற பெயருடன் ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விவோவின் முதல் டேப்லெட் விவோ பேட் என அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விவோ வெளியீட்டு காலவரிசை உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும் விவோ பேட் குறித்த முக்கிய அம்சங்கள் இன்னும் வெளியிடவில்லை. அதேபோல் டியூவி ரைன்லேண்ட் சான்றிதழ் பட்டியலின்படி, டேப்லெட் 8040 எம்ஏஎச் திறன் கொண்ட பிடபிள்யூ-பி1 மாதிரி எண்ணை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. விவோ டேப்லெட் முன்னர் கசிந்த படங்களின்படி, இது நாட்ச் மற்றும் பஞ்ச் ஹோல் கட்அவுட் இரண்டையும் தவிர்க்கக்கூடி இருக்கும் என கூறப்படுகிறது. அதேசமயத்தில் டேப்லெட் முழுத்திரை காட்சியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

செல்பி கேமரா வசதி

செல்பி கேமரா வசதி

முன்புறத் தொகுதி குறித்து வெளியான காட்சியின் அடிப்படையில் இதில் செல்பி கேமரா இடம்பெறாது என கூறப்படுகிறது. அதேபோல் பின்புற பேனலில் எல்இடி பிளாஷ் கொண்ட இரட்டை கேமராக்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் சாதனத்தின் வலது பக்கத்தில் ஆற்றல் பட்டன் மற்றும் இடது பக்கத்தில் வால்யூம் ராக்கர்ஸ் பட்டன்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. வரவிருக்கும் விவோ டேப்லெட் குறித்து சேகரிக்கப்பட்ட அனைத்து தகவலும் தற்போது பகிரப்பட்டுள்ளது. விரைவில் இந்த டேப்லெட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ டேப்லெட்டின் கேமரா அம்சங்கள்

விவோ டேப்லெட்டின் கேமரா அம்சங்கள்

வரவிருக்கும் விவோ டேப்லெட்டின் கேமரா அம்சங்கள் மற்றும் டிஸ்ப்ளே இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் தற்போது வரை வெளியான தகவலின்படி வரவிருக்கும் விவோ பேட் ஆனது எம்ஐ பேட் 5 சீரிஸ் மற்றும் ஒப்போ பேட் உடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஐ பேட் 5 சீரிஸ் டேப்லெட்கள் ஆனது 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 5ஜி இணைப்பு மற்றும் வேகமான சார்ஜ் வசதி உள்ளிட்ட பல வசதிகளோடு வருகிறது. விவோ டேப்லெட்டில் இந்த வசதி இடம்பெறுமா என்பது குறித்த தகவல் சரியாக தெரியவில்லை.

Best Mobiles in India

English summary
Vivo Going to Launch its First Tablet as Vivo Pad: Might be Launching on Q1 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X