2023-ல "இந்த" Vivo போனை தான் எல்லாரும் போட்டி போட்டு வாங்க போறாங்க.! ஏன் தெரியுமா?

|

Vivo சமீபத்தில் இந்தியாவில் V25 தொடரை அறிமுகப்படுத்தியது. புதிய பிரீமியம் V சீரிஸில் இந்தியாவில் V25 5G மற்றும் V25 Pro 5G ஆகிய மாடல்கள் இதில் உள்ளது. இந்த வரிசையில் வி25 4ஜி மாடலும் உள்ளது. இது வரும் நாட்களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இந்த போன்களின் சில விவரங்களுக்காக நாங்கள் காத்திருக்கும்போது, ​​ஒரு புதிய அறிக்கை அடுத்த V-சீரிஸ் Vivo V27 போனின் அறிமுகம் குறித்த சில விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது.

2023-ல் இந்த போனுக்கு டிமாண்ட் ஜாஸ்தியா இருக்கும்.!

2023-ல் இந்த போனுக்கு டிமாண்ட் ஜாஸ்தியா இருக்கும்.!

ஆம், அடுத்த ஆண்டு விவோ நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் புதிய V சீரிஸ் ஸ்மார்ட்போன் பற்றிய விபரங்கள் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. Vivo அடுத்த ஆண்டு தொடக்கத்தில், அதாவது 2023 ஆம் ஆண்டில் முதல் காலாண்டிற்குள்,Vivo V27 தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் 91Mobiles வழியாக வெளியாகியுள்ளது.

விவோ V25-க்கு பிறகு, 2023-ன் ஆரம்பத்திலேயே விவோ V27- ஆ?

விவோ V25-க்கு பிறகு, 2023-ன் ஆரம்பத்திலேயே விவோ V27- ஆ?

இந்தியாவில் விவோ V27 தொடரின் கீழ் வெளியிடப்படும் சாத்தியமான மாடல்களின் தகவல்களையும் இந்த சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இதுவரை அறியப்பட்ட Vivo V27 தொடர் வெளியீட்டு காலவரிசை பற்றிய கூடுதல் விவரங்களைப் பார்ப்போம். Vivo V25 தொடர் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, நிறுவனம் தொடர் வரும் மாதங்களில் Vivo V27 தொடரை அறிமுகம் செய்யுமென்று கூறப்பட்டுள்ளது.

1 இல்ல தினமும் 2 ஜிபி தராங்க.! Jio-ல அதிகமா ரீசார்ஜ் செய்யப்பட்ட ரீசார்ஜ் பிளான்.! உடனே பாருங்க.!1 இல்ல தினமும் 2 ஜிபி தராங்க.! Jio-ல அதிகமா ரீசார்ஜ் செய்யப்பட்ட ரீசார்ஜ் பிளான்.! உடனே பாருங்க.!

Vivo V27 அடுத்த ஆண்டில் எப்போது அறிமுகம் செய்யப்படும்?

Vivo V27 அடுத்த ஆண்டில் எப்போது அறிமுகம் செய்யப்படும்?

இந்த வரவிருக்கும் புதிய Vivo V27 ஸ்மார்ட்போன் சீரிஸ் Vivo V25 சீரிஸ் போன்களின் வாரிசாக அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. விவோ நிறுவனம் குறைந்தபட்சம் இரண்டு போன்களை இந்த தொடரில் வரிசையாக அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கிடைத்த தகவலின் படி, பிப்ரவரி 2023 இல் Vivo V27 தொடரை அறிமுகப்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அதிரடி தள்ளுபடி: ரூ.5000 முதல் HD Android Tv-ஆ? டக்குனு வாங்கிடுங்க ஸ்டாக் கம்மியா இருக்கு.!அதிரடி தள்ளுபடி: ரூ.5000 முதல் HD Android Tv-ஆ? டக்குனு வாங்கிடுங்க ஸ்டாக் கம்மியா இருக்கு.!

Vivo V27 வரிசையில் எத்தனை 5G போன்கள் வெளிவரும்?

Vivo V27 வரிசையில் எத்தனை 5G போன்கள் வெளிவரும்?

இது இந்தியாவின் வெளியீட்டுக் காலக்கெடு மற்றும் உலகளாவிய அறிமுகத்தைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளதா என்பதை நிறுவனம் தெளிவாக அறிவிக்கவில்லை. விவோ நிறுவனம் இந்த Vivo V27 வரிசையில் குறைந்தது இரண்டு மாடல்களை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. அவை Vivo V27 5G மற்றும் Vivo V27 Pro 5G ஆகிய மாடல்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

iPhone மற்றும் iPad டிவைஸ்களை மூளை மூலம் இயக்கலாமா? நம்ப முடியாத முயற்சி வெற்றி.!iPhone மற்றும் iPad டிவைஸ்களை மூளை மூலம் இயக்கலாமா? நம்ப முடியாத முயற்சி வெற்றி.!

பட்ஜெட் விலையில் Vivo V27e மாடல் கூட வெளிவருமா?

பட்ஜெட் விலையில் Vivo V27e மாடல் கூட வெளிவருமா?

விவோ நிறுவனம் Vivo V25e 4G மாடலுக்கு அடுத்தபடியாக பட்ஜெட் விலையில் Vivo V27e மாடலை கூட வெளியிடக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த Vivo V27 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டில் எந்த காலவரிசையில் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் இணையத்தில் கசிந்தாலும், இன்னும் நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் அதிகாரப்பூர்வமான வெளியீட்டு தேதி பற்றிய விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

அதிரடி விலை குறைப்பு.! பாதிக்கு பாதி விலையில் Samsung Galaxy M53 5G வாங்கலாம்.! ஆனா?அதிரடி விலை குறைப்பு.! பாதிக்கு பாதி விலையில் Samsung Galaxy M53 5G வாங்கலாம்.! ஆனா?

Vivo V25 4G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

Vivo V25 4G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

Vivo V27 தொடர் புதிய தலைமுறை MediaTek Dimensity சிப்செட்களுடன் வெளிவரலாம் என்று அறிக்கை ஊகிக்கிறது. தற்போதைய V25 சீரிஸ் ஹூட்டின் கீழ் ஒரு Dimensity 1300 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. Vivo வரும் வாரங்களில் V25 4G ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம். இது தாய்லாந்தில் இருந்து ரீபேட்ஜ் செய்யப்பட்ட V25e 4G ஆக அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!

ஸ்டோரேஜ் மற்றும் பேட்டரி விபரம்

ஸ்டோரேஜ் மற்றும் பேட்டரி விபரம்

இந்த 4G ஸ்மார்ட்போன் அதே விவரக்குறிப்புகளை பேக் செய்யும் என்று கூறப்படுகிறது. இது ஹூட்டின் கீழ் MediaTek Helio G99 சிப்செட் கொண்டிருக்கும். இந்த சாதனம் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும். இது 44W பாஸ்ட் சார்ஜ் ஆதரவுடன் இயங்கும் 4500mAh பேட்டரியை பேக் செய்கிறது. இதன் கேமரா பற்றிப் பேசுகையில், இது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

சீனால தான் இதன் பெயர் Redmi Note 12 5G.! இந்தியால இதன் பெயரே வேற.! முழுசா மாத்திட்டாங்க.!சீனால தான் இதன் பெயர் Redmi Note 12 5G.! இந்தியால இதன் பெயரே வேற.! முழுசா மாத்திட்டாங்க.!

கேமரா விபரம்

கேமரா விபரம்

இந்த சாதனம் 64MP பிரைமரி கேமரா சென்சார் மற்றும் இரண்டு 2MP சென்சார்களைக் கொண்டிருக்கலாம். இவை மேக்ரோ படங்கள் மற்றும் டெப்த் சென்சார் செயல்பாட்டுடன் இருக்கும். இந்த சாதனம் முன்பக்கத்தில் 32MP செல்பி கேமராவைக் கொண்டிருக்கும். போனின் பின்புற பேனல் விவோவின் நிறத்தை மாற்றும் தொழில்நுட்பத்துடன் இருக்கும்.

Nothing Ear (Stick) மீது ஜாஸ்தி டிமாண்ட்.! இருந்தாலும் தள்ளுபடி தரோம்.! எவ்வளவு தெரியுமா?Nothing Ear (Stick) மீது ஜாஸ்தி டிமாண்ட்.! இருந்தாலும் தள்ளுபடி தரோம்.! எவ்வளவு தெரியுமா?

Vivo V25 என்ன விலையில் வாங்க கிடைக்கும்?

Vivo V25 என்ன விலையில் வாங்க கிடைக்கும்?

இது சன்ஷைன் கோல்டு மற்றும் டயமண்ட் பிளாக் நிறங்களில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. Vivo V25 4G ஆனது 90Hz ரெபெரெஸ் ரேட் கொண்ட 6.44' இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரைக் கொண்டிருக்கும். இந்த போன் இந்தியாவில் Vivo V25 5G ஸ்மார்ட்போனுக்கு கீழே பட்டியலில் சேர்க்கப்படும். இந்தியாவில் இதன் விலை சுமார் ரூ.23,000 ஆக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo Could Launch New Vivo V27 Series 5G Smartphones In February 2023

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X