2022ஐ கொண்டாடுங்கள் மக்களே! ஸ்மார்ட்போன்களுக்கு ஆஃபர்களை அள்ளித்தரும் Vivo.!

|

விவோ இந்தியா தனது ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்டு இறுதி சலுகைகளை அறிவித்துள்ளது. பிராண்ட் பல்வேறு விலை பிரிவு ஸ்மார்ட்போன்களுக்கும் தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்குகிறது. இன்று முதல் டிசம்பர் 31, 2022 வரை அனைத்து மெயின்லைன் சேனல்களிலும் இந்த சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெறலாம் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக Vivo V25 சீரிஸ், Vivo Y75 மற்றும் Vivo Y35 போன்களும் இந்த சலுகைகளில் அடக்கம்.

2022ஐ கொண்டாடுங்கள்! ஸ்மார்ட்போன்களுக்கு ஆஃபர்களை அள்ளித்தரும் Vivo.!

Vivo V25 சலுகைகள்

Vivo V25 சலுகைகள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது இந்தியாவில் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. அது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகும். இதன் 8 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.35,999 எனவும் 12 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.37,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை ஐசிஐசிஐ, எஸ்பிஐ, ஒன் கார்ட், கோடக், யெஸ் பேங்க் மற்றும் பிற முன்னணி வங்கி கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.2500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இஎம்ஐ சலுகைகளிலும் கேஷ்பேக்குகள் வழங்கப்படுகிறது.

அதன்படி விவோ வி25 இன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட்டை ரூ.27,999 எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட்டை ரூ.31,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ பேங்க் மற்றும் பிற வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதையடுத்து இந்த போன்களை ரூ.25,999 மற்றும் ரூ.29,999 என வாங்கலாம்.

2022ஐ கொண்டாடுங்கள்! ஸ்மார்ட்போன்களுக்கு ஆஃபர்களை அள்ளித்தரும் Vivo.!

Vivo Y35 மற்றும் Vivo Y75 சலுகைகள்

Vivo Y75 இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.20,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த ஸ்மார்ட்போனை ஐசிஐசிஐ கிரெடிட்/டெபிட் கார்டுகள், எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் போன்றவற்றை பயன்படுத்தி வாங்கினால் ரூ.1500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அதன்படி இதன் ரூ.19,499 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி96 எஸ்ஓசி, 6.44 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 50 எம்பி பிரதான கேமரா ஆதரவைக் கொண்டிருக்கிறது.

Vivo Y75 5G மற்றும் Vivo Y35 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களையும் ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்ட்கள் பயன்படுத்தி வாங்கினால் ரூ.1000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த கேஷ்பேக் சலுகைகள் அனைத்து முக்கிய சேனல்களிலும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஸ்மார்ட்போன்களுக்கு இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மிட்ரேன்ஜ் விவோ ஸ்மார்ட்போன்களை வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும்.

2022ஐ கொண்டாடுங்கள்! ஸ்மார்ட்போன்களுக்கு ஆஃபர்களை அள்ளித்தரும் Vivo.!

விவோ வி25 ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 90Hz ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. டூயல் வேரியண்ட்டில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 64 எம்பி பிரதான கேமரா, 50 எம்பி செல்பி கேமரா, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 4,500mAh பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது.

Vivo Y75 5G மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இதில் 50MP பிரதான சென்சார் மற்றும் இரண்டு 2MP கேமராக்களைக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16MP செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான Funtouch OS 12 இல் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo Christmas Celebration Offer: Cashback Offer Announced For Vivo Y75 Series, Vivo V25, Vivo Y35

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X