வெறும் ரூ.101 மட்டும் செலுத்தி புது போன் வாங்கலாம்.! எப்படி தெரியுமா? உடனே முந்துங்கள்.!

|

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், Vivo நிறுவனம் தனது தீபாவளி சிறப்பு விற்பனை குறித்த சலுகை விபரங்களை இப்போது அறிவித்துள்ளது.

Vivo X80 சீரிஸ், V25 சீரிஸ், Y75 சீரிஸ், Y35 போன்ற பிரபல ஸ்மார்ட்போன்களின் மீது விவோ இப்போது பிக் ஜாய் தீபாவளி சேல்ஸ் சலுகைகளை (Vivo Big Joy Diwali Sale Offers) அறிவித்துள்ளது.

முதல் முறையாக, வெறும் 101 ரூபாய் மட்டும் செலுத்தி, புது போன் வாங்கும் வாய்ப்பை விவோ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் பிக் ஜாய் தீபாவளி சலுகைகள்.!

இந்தியாவில் பிக் ஜாய் தீபாவளி சலுகைகள்.!

இந்தியாவில் பிக் ஜாய் தீபாவளி சலுகைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 31 ஆம் தேதி வரை இந்த சிறப்பு சலுகை லைவ் இல் இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

Vivo இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. குறிப்பாக, பிக் ஜாய்ஸ் தீபாவளி விற்பனையில் நம்ப முடியாத கேஷ்பேக் சலுகை, எக்ஸ்டெண்டட் வாரன்டி போன்றவற்றையும் இந்த ஆண்டு வழங்குகிறது.

வெறும் 101 ரூபாய்க்கு புது போன் வாங்க முடியுமா? எப்படி?

வெறும் 101 ரூபாய்க்கு புது போன் வாங்க முடியுமா? எப்படி?

இதில், விவோ ரசிகர்கள் கவனிக்க வேண்டிய மிகவும் உற்சாகமான அம்சம் என்னவென்றால், Vivo இந்த ஆண்டு முதல் முறையாக புதிய ஸ்மார்ட்போன்களை வெறும் 101 ரூபாய்க்கு வழங்குகிறது.

ஆம், சரியாக தான் படித்தீர்கள், வெறும் ரூ.101 என்ற தொகையை முன் பணமாகச் செலுத்தி, உடனே உங்களுக்கான புதிய டிவைஸை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று விவோ அறிவித்துள்ளது.

இந்த முறையில் போன் வாங்க என்ன நிபந்தனை வழங்கப்பட்டுள்ளது என்பதை இறுதியில் பார்க்கலாம்.

போன் வாங்குனா கார் இலவசம்.! இந்த லிஸ்ட்ல இருக்க ஏதாச்சும் 1 போன் வாங்குனா போதும்.!போன் வாங்குனா கார் இலவசம்.! இந்த லிஸ்ட்ல இருக்க ஏதாச்சும் 1 போன் வாங்குனா போதும்.!

எந்த விவோ ஸ்மார்ட்போன்கள் மீது இந்த தள்ளுபடி கிடைக்கும்?

எந்த விவோ ஸ்மார்ட்போன்கள் மீது இந்த தள்ளுபடி கிடைக்கும்?

இதேபோல, விவோவின் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே பிளிப்கார்ட் தீபாவளி சேல்ஸ் மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்ஸ் விற்பனையில் கூடுதல் தள்ளுபடியில் பட்டியலிடப்பட்டுள்ளன என்பதையும் மறக்காதீர்கள்.

இந்த பிக் ஜாய்ஸ் தீபாவளி விற்பனையின் போது Vivo அதன் X, V, மற்றும் Y சீரிஸ் போன்கள் மேல் தனித்தனி சலுகைகளை அறிவித்துள்ளது.

ரூ.8,000 வரை கேஷ்பேக் பெறுவது எப்படி?

ரூ.8,000 வரை கேஷ்பேக் பெறுவது எப்படி?

இந்த சலுகை காலத்தில், வாடிக்கையாளர்கள் Vivo X80 அல்லது Vivo X80 Pro போன்ற மாடல்களை ICICI அல்லது SBI EMI விருப்பங்களுடன் வாங்கினால், ரூ.8,000 வரை கேஷ்பேக் நன்மையைப் பெறலாம்.

மேலும், அந்தத் தொகையை முழுமையாகச் செலுத்தினால், நிறுவனம் தனது எக்ஸ் சீரிஸ் போனுக்கு கூடுதலாக ஆறு மாத நீட்டிக்கப்பட்ட வாரண்டியை வழங்கும் என்று அறிவித்துள்ளது. உண்மையில், இது பெஸ்டா ஆஃப்பர் தான்.

ரூ.599 விலையில் இப்படி ஒரு Redmi Writing Pad-ஆ.! இது டேப்லெட்டா இல்ல வேற மாதிரி டிவைஸா?ரூ.599 விலையில் இப்படி ஒரு Redmi Writing Pad-ஆ.! இது டேப்லெட்டா இல்ல வேற மாதிரி டிவைஸா?

ரூ. 4000 மற்றும் ரூ. 2000 கேஷ்பேக் எந்த போன்கள் மீது கிடைக்கிறது?

ரூ. 4000 மற்றும் ரூ. 2000 கேஷ்பேக் எந்த போன்கள் மீது கிடைக்கிறது?

இதேபோல், விவோவின் V25 தொடர் வாங்குபவர்கள் ICICI அல்லது SBI EMI விருப்பங்களைப் பயன்படுத்தி ரூ.4,000 வரை கேஷ்பேக்கைப் பெறலாம்.

விவோ வி25 சீரிஸ் போன்களுக்கு ஆறு மாதங்கள் நீட்டிக்கப்பட்ட வாரண்டியையும் நிறுவனம் வழங்குகிறது. Vivo Y சீரிஸ் போன்களை வாங்குபவர்கள் ICICI அல்லது SBI EMI விருப்பங்களைப் பயன்படுத்தி ரூ.2,000 வரை கேஷ்பேக்கைப் பெறலாம்.

Vivo Rs 101 ஸ்மார்ட்போன் ஆஃபர் எப்படி செயல்படும்?

Vivo Rs 101 ஸ்மார்ட்போன் ஆஃபர் எப்படி செயல்படும்?

Vivo Y சீரிஸ் சாதனங்களில் ரூ.10,000 மதிப்புள்ள ஜியோ டிஜிட்டல் லைஃப் நன்மைகளை Vivo வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ Y75, Y35 போன்ற Y தொடர் சாதனங்களில் பயனர்கள் ஆறு மாத நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தையும் பெறுகிறார்கள்.

சரி, இப்போது விவோ அறிவித்துள்ள Vivo Rs 101 ஸ்மார்ட்போன் ஆஃபர் பற்றி பார்க்கலாம்.

இந்த புதிய சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள், புதிய Vivo ஃபோனை எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் வெறும் 101 ரூபாய்க்கு வாங்கலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

மிச்ச தொகையை எப்படி செலுத்துவது?

மிச்ச தொகையை எப்படி செலுத்துவது?

இந்தச் சலுகையின்படி, வாடிக்கையாளர்கள் V, X அல்லது Y சீரிஸ் வரிசையில் கிடைக்கும் எந்த மாடலை வேண்டுமானாலும் வாங்கலாம். அதுவும், வெறும் ரூ.101 என்ற தொகையை ஆரம்பக் கட்டணமாகச் செலுத்தி, போனை சொந்தமாக்கிக்கொள்ளலாம்.

இருப்பினும், மிச்ச தொகையை வாடிக்கையாளர், அருகிலுள்ள சில்லறை விற்பனையாளரிடம் சென்று பேமெண்ட் செய்ய வேண்டுமா இல்லையா என்பதைத் தெளிவாக குறிப்பிடவில்லை.

பெரும்பாலும் பேலன்ஸ் தொகையை நிறுவனம் EMI ஆக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo Big Joy Diwali Offers Now Providing New Smartphones To Buy At Just Rs 101

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X