10நிமிடத்தில் ஃபுல் சார்ஜ்: அதிவேக சார்ஜரை அறிமுகம் செய்யும் விவோ.!

பின்பு இந்த 5ஜி சாதனத்தில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 256 ஜிபி மெமரி-12 ஜிபி ரேம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

|

விவோ நிறுவனம் தொடர்நது புதிய தொழிலநுட்பம் கொண்ட சாதனங்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது, அதன்படி உலகிலேயே முதன் முறையாக 120வாட் கொண்ட அதிவேக சார்ஜரை அறிமுகம் செய்கிறது விவோ.!

அதிக வரவேற்பை பெறும்

அதிக வரவேற்பை பெறும்

அதன்படி சீனாவை சேர்ந்த நிறுவனமான விவோ வரும ஜீன்-26-ம் தேதி 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் 120வாட் கொண்ட சார்ஜரையும் அறிமுகம் செய்ய திட்மிட்டுள்ளது. கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சார்ஜர் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 விவோ  5ஜி ஸ்மார்ட்போன்

விவோ 5ஜி ஸ்மார்ட்போன்


குறிப்பாக அடுத்தவாரம் ஷாங்காய் நகரில் நடைபெற உள்ள மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் என்ற பெயரில் கண்காட்சி நடைபெறுகிறது. மேலும் இந்த கண்காட்சி 26-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் விவோ நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் பாஸ்ட் சார்ஜர் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.

ரூ.16,999-விலையில் புதிய 40-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!ரூ.16,999-விலையில் புதிய 40-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

 13நிமிடத்தில் முழு சார்ஜ் வழங்குகிறது

13நிமிடத்தில் முழு சார்ஜ் வழங்குகிறது

விவோ நிறுவனத்தின் புதிய பாஸ்ட் சார்ஜர் 120வாட் மின்சாரம் வழங்குகிறது, எனவே இதன் மூலம் ஸ்மார்ட்போனில் 10நிமிடத்தில் முழு சார்ஜ் செய்யும் அம்சம் உள்ளது என்றும், 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் அதற்குமேல் உள்ள
பேட்டரிகளுக்கு 13நிமிடத்தில் முழு சார்ஜ் வழங்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் அறிமுகம் செய்யப்போகும் அடுத்த சூப்பர் அப்டேட்கள் இதுதான்!ஒன்பிளஸ் அறிமுகம் செய்யப்போகும் அடுத்த சூப்பர் அப்டேட்கள் இதுதான்!

100வாட்  மின்சக்தியை மட்டும் தான் வழங்கியது

100வாட் மின்சக்தியை மட்டும் தான் வழங்கியது

விவோ நிறவனம் இதற்குமுன்பு டர்போ சார்ஜரை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது, அது 100வாட் மின்சக்தியை மட்டும் தான் வழங்கியது, தற்போது அறிமுகம் செய்ய உள்ள சார்ஜரில் 120வாட் மின்சக்தி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஸ்னாப்டிராகன் எக்ஸ்50

ஸ்னாப்டிராகன் எக்ஸ்50

மேலும் விவோ நிறுவனம் அறிமுகம் செய்யும் அபெக்ஸ் 2019 ஸ்மார்ட்போன் மாடலில் 5ஜி சப்போர்ட் வழங்கப்படுகிறது. இதற்கென குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் எக்ஸ்50 5ஜி மோடெம் வழங்கப்படுகிறது.

உலகினரை உற்று நோக்கவைத்த இந்திய கலைஞரின் விவசாய ஓவியம்! கூகுள் மேப் வேணும் இதை பார்க்க!உலகினரை உற்று நோக்கவைத்த இந்திய கலைஞரின் விவசாய ஓவியம்! கூகுள் மேப் வேணும் இதை பார்க்க!

அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது

அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது

பின்பு இந்த 5ஜி சாதனத்தில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 256 ஜிபி மெமரி-12 ஜிபி ரேம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த 5ஜி மற்றும் அதிவேக சார்ஜர் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
vivo announces 120w super flashcharge news: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X