Home
News

யார்ரா நீங்கலாம்.. போட்டோக்களை வைத்து சினிமா.. ஆட்டம் காட்டும் Apple நிறுவனம்!

ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro) ஹெட்செட்டிற்கான விஷன்ஓஎஸ் 2.4 அப்டேட்டை (visionOS 2.4 Update) வெளியிட்டுள்ளது. இது ஒரு பெரிய அப்டேட் ஆக கருதப்படுகிறது. ஏனென்றால் இதன்கீழ் ஆப்பிள் நிறுவனம் எம்ஆர் ஹெட்செட்டுக்கான ஆப்பிள் இன்டலிஜென்ஸ் அம்சங்களின் முதல் தொகுப்பை அறிமுகப்படுத்துகிறது.

விஷன்ஓஎஸ் 2.4 அப்டேட் வழியாக ஆப்பிள் விஷன் ப்ரோவிற்கு கிடைத்துள்ள புதிய அம்சங்கள்: ரைட்டிங் டூல்கள் இப்போது ஆப்பிள் விஷன் ப்ரோவில் கிடைக்கின்றன. இது எழுத்துப்பிழை மற்றும் இலக்கண சரிபார்ப்புகளுடன் டாகுமெண்ட்களை எழுதுதல், ரீரைட் செய்தல் மற்றும் சரிபார்த்தல் ஆகியவற்றுக்கான விருப்பங்களை கொண்ட ஏஐ அம்சங்களை வழங்கும். மேலும் இதன் கீழ் டெக்ஸ்ட்-ஐ சுருக்கமாக எழுதலாம், பட்டியல்கள் மற்றும் அட்டவணைகளை உருவாக்கலாம் அல்லது டெக்ஸ்ட்-இல் இருந்து முக்கிய புள்ளிகளை முன்னிலைப்படுத்தலாம்.

போட்டோக்களை வைத்து சினிமா.. ஆட்டம் காட்டும் Apple நிறுவனம்!

மேலும் இந்த அப்டேட் இமேஜ் பிளேகிரவுண்ட்டையும் வழங்குகிறது, இது விளக்கமான ப்ராம்ப்ட்களின் அடிப்படையில் படங்களை உருவாக்க ஜெனரேட்டிவ் ஏஐ-ஐ பயன்படுத்தும் ஒரு தனித்த ஆப் ஆக செயல்படும். பயனர்கள் தங்கள் போட்டோஸ் ஆப்பில் இருந்து குறிப்பிட்ட நபரையும் தேர்ந்தெடுக்கலாம் மற்றும் வெவ்வேறு ஆர்ட் ஸ்டைல்களில் இருந்தும் தேர்வுகளை செய்யலாம்.

மேலும் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் ஆனது இப்போது பயனர்கள் போட்டோஸ் ஆப்பில் சேமிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட படங்களை இயற்கையான மொழி வினவல்களுடன் தேட அனுமதிக்கிறது. மேலும், கிரியேட் ஏ மெமரி மூவீ என்கிற அம்சம் ஆனது, புகைப்படங்களிலிருந்து அடையாளம் காணப்பட்ட தீம்களின் அடிப்படையில் அத்தியாயங்களுடன் ஒரு கதைக்களத்தை வடிவமைக்கும், பயனர் உள்ளிடும் ப்ராம்ட்டை பொறுத்து அவற்றை ஒருதிரைப்படமாக ஒழுங்கமைக்கும்

விஷன்ஓஎஸ் 2.4 அப்டேட் ஆனது மெயிலில் ப்ரையாரிட்டிமெசேஜ்கள் செய்திகள், மெயில் சம்மரிஸ், நோட்களில் இமேஜ் வாண்ட், நோட்டிபிகேஷன் சென்டரில் ப்ரையாரிட்டி நோட்டிபிகேஷன் மற்றும் நோட்டிபிகேஷன் சம்மரிஸ் ஆதரவையும் கொண்டு வந்துள்ளது. திரைப்படங்கள் மற்றும் பிற செயல்களை உருவாக்க பயன்படுத்தப்படும் போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் ஆனது ப்ரைவேட் ஆக வைக்கப்படுகின்றன, அவைகள் நிறுவனத்துடன் பகிரப்படுவதில்லை என்பதை ஆப்பிள் நிறுவனம் வலியுறுத்துகிறது.

கூடுதலாக, பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்க ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் ஆனது முடிந்தவரை ஆன்-டிவைஸ் ப்ராசஸிங்-ஐ பயன்படுத்துகிறது. லார்ஜ் ஏஐ மாடல்கள் தேவைப்படும் பணிகளுக்கு, ஆப்பிள் நிறுவனம் ப்ரைவேட் கிளவுட் கம்ப்யூட்டை பயன்படுத்தும் என்றும், பயனர்களின் டேட்டா ஒருபோதும் சேமிக்கப்படவோ அல்லது பகிரப்படவோ மாட்டாது என்பதையும் ஆப்பிள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது

ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் ஆனது விஷன்ஓஎஸ் (visionOS) மூலம் இயங்குகிறது. இது ஹை-ரெசல்யூஷன் உடனான 2 மைக்ரோ-ஓஎல்இடி டிஸ்பிளேக்களை (High-resolution micro-OLED displays) கொண்டுள்ளது. இந்த ஹெட்செட் ஆப்பிளின் எம்2 சிப்களால் (Apple's M2 Chip) இயக்கப்படுகிறது.

மேலும் ஆப்பிளின் இந்த மிக்ஸடு ரியாலிட்டி ஹெட்செட் ஆனது 12 கேமராக்கள், 5 சென்சார்கள் மற்றும் 6 மைக்ரோஃபோன்களிலிருந்து இன்புட் ப்ராசஸை பெறும் ஆர்1 சிப்பையும் கொண்டுள்ளது. இந்த ஹெட்செட் ஒரு முப்பரிமாண யூஸர் இன்டர்பேஸ் மற்றும் ஒரு பயனரின் கண்கள், கைகள் மற்றும் குரல் மூலம் கட்டுப்படுத்தப்படும் இன்புட் சிஸ்டமை கொண்டுள்ளது.

மேலும் ஆப்பிள் விஷன் ப்ரோவில் ஐஓஎஸ் (iOS) மற்றும் ஐபேட்ஓஎஸ் (iPadOS) அடிப்படையிலான 1 மில்லியனுக்கும் அதிகமான ஆப்கள் (Apps) அணுக கிடைக்கும். ப்ரொடெக்டிவிட்டி தேவைகள் (Productivity Needs) உள்ள பயனர்கள் இந்த ஹெட்செட்டை மேஜிக் கீபோர்டு (Magic Keyboard) மற்றும் டிராக்பேடு (Trackpad) உடனும் இணைக்கலாம். இது ஆப்பிள் டிவி பிளஸ் (Apple TV+), டிஸ்னி+ மேக்ஸ் (Disney+ Max) மற்றும் பல தளங்களில் இருந்து நிகழ்ச்சிகளையும், திரைப்படங்களையும் ஸ்ட்ரீம் செய்யவும் அனுமதிக்கும். கேமர்களுக்கு, ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டில் 250 க்கும் மேற்பட்ட ஆப்பிள் ஆர்கேட்டைட்டில்கள் அணுக கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
VisionOS 2 4 Update Brings Apple Intelligence Capabilities New Features to Apple Vision Pro
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X