நீரில் மூழ்குபவர்களை காப்பாற்ற குதிரை லாடத்தை போன்ற வாட்டர் டிரோன் செய்து சாதனை.!

அடிக்கடி அசம்பாவிதங்கள் நடைபெறும்போதிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எப்போதும் எடுக்கப்படுவதில்லை

|

இந்தியாவில் எந்த கடற்கரையிலும் உயிர்காக்கும் கருவிகளை மிகவும் அரிதாகவே காணமுடியும். அடிக்கடி அசம்பாவிதங்கள் நடைபெறும்போதிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எப்போதும் எடுக்கப்படுவதில்லை.

நீரில் மூழ்குபவர்களை காப்பாற்ற வாட்டர் டிரோன்!

இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக சைஃப் ஆட்டோமேஷன் சர்வீசஸ் (SAS) நிறுவனத்தின் இணை நிறுவனரான அலிஅஸ்கர் கல்கட்டாவாலா வாட்டர் ட்ரோன் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

மரணங்களைக் குறைக்க விரும்பினால்..

மரணங்களைக் குறைக்க விரும்பினால்..

"இதுபோன்ற மரணங்களைக் குறைக்க விரும்பினால், அதற்கேற்றாற்போல் சரியான கருவிகள் இருக்க வேண்டும்" என்கிறார் அலிஅஸ்கர். சேஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் வாட்டர்டிரோன் உயிர்காக்கும் கருவிகளை போன்று செயல்படும். 12 கிலோ எடையுள்ள இக்கருவி குதிரை லாடத்தை போன்ற தோற்றமளிக்கக்கூடியது.

300 கிலோ எடை

300 கிலோ எடை

300 கிலோ எடையை சுமந்துசெல்லும் திறன்கொண்ட இது மணிக்கு 13 கிமீ வேகத்தில் பயணிக்கக்கூடியது. இது 3 கிமீ தொலைவு வரை வலுவான தொலைதொடர்பு இணைப்பை கொண்டிருக்கும் நிலையில், கோரிக்கைக்கு ஏற்ப 10 கி.மீ தொலைவு வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

ரிமோட் கண்ட்ரோல்

ரிமோட் கண்ட்ரோல்

ரிமோட் கண்ட்ரோல் எனப்படும் தொலைதூர கட்டுப்பாட்டின் உதவியுடன் இயங்கும் இந்த ட்ரோன், 156 முதல் 174 மெகா ஹெர்ட்ஸ் ரேடியோ அலைவரிசையை பயன்படுத்துகிறது. "எங்கள் தொழில்நுட்பம் கடற்கரையில் நீரில் மூழ்கும் மக்களை காப்பாற்றுவதற்காக காவலர்களுக்கு(லைப் காஃர்ட்ஸ்) உதவுகிறது. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நகர்ப்புற அமைப்புகள் மற்றும் இந்திய கடற்படை ஆகியவை தயாரிப்பில் ஆர்வம் காட்டியுள்ளன" என்கிறார் 41 வயதான அலிஅஸ்கர்.

கரைக்கு திரும்ப வழிகாட்ட முடியும்

கரைக்கு திரும்ப வழிகாட்ட முடியும்

இந்த ட்ரோன் எடுத்துசெல்வதற்கு எளிதாக மிகவும் பளு இல்லாமல் இருக்கிறது. யாரேனும் நீரில் மூழ்குவதை லைப்கார்டு பார்த்துவிட்டால், இந்த ட்ரோனை தண்ணீர் உள்ள இடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும். இது ஏரிகள் மற்றும் எட்டு அடி உயரம் வரை உள்ள அலைகள் இருக்கும் கடலில் பயணிக்கக்கூடியது. இந்த ட்ரோன் நீரில் மூழ்கும் நபரை சென்றடைந்தவுடன், லைப்கார்டு அவர்கள் பாதுகாப்பாக கரைக்கு திரும்ப வழிகாட்ட முடியும்.

 அலிஅஸ்கர்

அலிஅஸ்கர்

2016 ல் நடைபெற்ற கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தின் அறிவியல் கண்காட்சியில் "சையிப் ஸீ" நிறுவனத்திற்கான யோசனை தோன்றியது. " என்னை போன்ற ஒத்த கருத்துடையை பொறியாளர்களை சந்தித்தபோது பாதுகாப்பான எதிர்காலத்திற்கான கருவிகளை உருவாக்க வேண்டும் என்ற அதே உணர்வை பகிர்ந்தனர். அவர்களது உள்ளீடுகளுடன், நாங்கள் இக்கருவியை சிறப்பாக வடிவமைக்க முடிந்தது" என்று கூறுகிறார் அலிஅஸ்கர்.

Best Mobiles in India

English summary
Visakhapatnam-based techie makes a water drone to save people from drowning: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X