டவுண்லோடு செய்வது வைரஸ் ஸ்கேனரா? அல்லது மால்வேரா? ஒரே குழப்பம்.!

By Prakash
|

ரேன்சம்வேர் சைபர் தாக்குதல் 200,000 க்கும் மேற்பட்ட கணினிகளை சிக்கவைத்தது, ஆனால் ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்ப்படவில்லை என தேசிய பாதுகாப்பு முகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ்கள் பொதுவாக விண்டோஸ் போன்ற பிரபலமான இயக்க முறைமைகளைக் குறிவைத்தே உருவாக்கப்படுகின்றன.

ஒரு வலைத்தளம் நம்ப முடியாத ஒரு சலுகையை வழங்கினால் அல்லது தேவையில்லாதது எனக் கருதக்கூடிய மிக முக்கியமான தகவல்களைக் கேட்டால், நீங்கள் என்ன தகவலை வழங்கப்போகிறீர்கள் என்பதைப் பற்றி ஒருமுறைக்கு இரு முறை சிந்தித்துக்கொள்ளவும், மேலும் அந்த தகவல்கள் அடையாளத் திருடர்கள் அல்லது பிற குற்றவாளிகளுக்குத் தெரிந்துவிட்டால் மிகவும் சிக்கல் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் போலியான வைரஸ் ஆப் போன்றவற்றை உபயோகப்படுத்தாமல் இருப்பது மிகவும் நல்லது.

போலியான ஆப்ஸ் :

போலியான ஆப்ஸ் :

போலியான ஆப்ஸ் உங்கள் சாதனத்தின் தொடர்புகளை ஸ்கேன் செய்து, உங்கள் ஸ்மார்ட்போன் ஆபத்தாக இருக்கிறது எனக் கூறும், ஏனெனில் அது "பாதுகாப்பான இண்டர்நெட்" இல்லை மேலும் இந்த விதமான போலியான ஆப்ஸ் பல்வேறு சிக்கல் கொண்டுவரும். இது போன்ற ஆப்ஸ் பயன்படுத்தமால் இருப்பது மிகவும் நல்லது.

ரிஸ்க்ஐக்யூ :

ரிஸ்க்ஐக்யூ :

ரிஸ்க்ஐக்யூ என்பது ஒரு சைபர் நிறுவனம், இந்த நிறுவனம் ரேன்சம்வேர் போன்ற தாக்குதலில் இருந்து உங்கள் மொபைலை பாதுகாக்க சில ஆப்ஸ்களை வெளியிட்டுள்ளது, இதை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யமுடியும். தற்போது அதிகமக்கள் போலியான வைரஸ் ஸ்கேனர் போன்றவற்றை தான் பயன்படுத்திவருகின்றனர் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு:

தீங்கிழைக்கும் எச்சரிக்கைகள், ட்ரோஜான்கள் மற்றும் ஆண்ட்ராய்டு இயக்க முறைமையில் தாக்குதல்கள் போன்றவற்றில் ரிஸ்க்ஐக்யூ பாதுகாப்பாக செயல்படுகிறது. மேலும் பல்வேறு பாதுகாப்புகளை தருகிறது. இந்தப் பயன்பாட்டை தற்போது அதிகமான மக்கள் உபயோகம் செய்கின்றனர்.

கூகுள் ப்ளே ஸ்டோர்:

கூகுள் ப்ளே ஸ்டோர்:

கூகுள் ப்ளே ஸ்டோரில் பல விதமான வைரஸ் நீக்கும் ஆப்ஸ்கள் கிடைக்கும், மேலும் இவற்றில் பல்வேறு போலியான ஆப்ஸ்கள் உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சில ஆப்ஸ்கள் உங்கள் மொபைல்போன்களுக்கு மிகவும் பாதுகாப்பான வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ரிஸ்க்ஐக்யூ பயன்பாடுகள்:

ரிஸ்க்ஐக்யூ பயன்பாடுகள்:

ரிஸ்க்ஐக்யூ பதிவிறக்கம் செய்வதற்கு முன்னர் கவனமாக வாசிக்கப்படும் எல்லா பயன்பாடுகளையும் பரிந்துரை செய்கிறது. மேலும் உங்கள் மொபைல்போனில் ஏற்ப்பட்டுள்ள பல்வேறு வகையான சிக்கலை இவை நீக்குகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Virus scanner or malware Beware app store fakes : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X