2.5 லட்சம் கம்ப்யூட்டர்களை முடக்கும் வைரஸ் பாதிப்பு! பரபரப்பு தகவல்!

Posted By: Staff
2.5 லட்சம் கம்ப்யூட்டர்களை முடக்கும் வைரஸ் பாதிப்பு! பரபரப்பு தகவல்!

2.5 லட்சம் கம்ப்யூட்டர்கள் வைரஸ் மூலம் வருகிற திங்கட்கிழமை முடக்கப்பட இருப்பதாக ஓர் பரபரப்பு ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.

சமீபமாகவே கம்ப்யூட்டர் ஹேக்கிங், வைரஸ் பாதிப்பு என்று பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றது. இதை தொடர்ந்து ஆலுரியான் என்ற வைரஸை பரவுவதன் மூலம் 2.5 லட்சம் கம்ப்யூட்டர்கள் வருகிற திங்கட்கிழமை முடக்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

உலகின் அனைத்து கம்ப்யூட்டர்களையும் கட்டுப்படுத்தும் வகையில், புதிய வைரஸை சைபர் குற்றவாளிகள் பரப்பியுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த புதிய வைரஸ்களால் வரும் ஜூலை மாதம் இணையதளங்கள் முடக்கப்படுவதற்கான வாய்ப்பிருப்பதாகவும் கூகுள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த ஆலுரியான் வைரஸ் மூலம் 2 லட்சத்தி 45 ஆயிரம் கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கம்ப்யூட்டர் தொழில் நுட்ப பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது மட்டும் அல்லாது அமெரிக்காவில் ஆலுரியான் வைரஸ் மூலம் 45 ஆயிரத்தி முன்நூற்றி 55 கம்ப்யூட்டர்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிறுவனம் தகவல் தெரிவிக்கிறது.

இப்படி பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றது. இதன் உண்மை நிலவரம் என்ன என்பதை, இனி வெளியாகும் செய்திகள் முலம் தான் பார்க்க வேண்டும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot