ஒலிம்பிக்கின்போது இலவச வைஃபை சேவை!

Posted By: Karthikeyan
ஒலிம்பிக்கின்போது இலவச வைஃபை சேவை!

ஒலிம்பிக்கின்போது இலவச வைஃபை சேவை!

ஒலிம்பிக் திருவிழா இன்னும் 57 நாள்களில் தொடங்கவிருக்கிறது. ஜூலை 27ல் லண்டனில் தொடங்கும் இந்த ஒலிம்பிக் திருவிழாவைக் கண்டு தரிசிக்க உலகமே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த ஒலிம்பிக்கை நடத்த இருக்கும் இங்கிலாந்தும் உலக மக்களுக்காக பல மாயஜாலங்களை வழங்க காத்துக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக இந்த ஒலிம்பிக் நிகழ்வில் தகவல் தொழில் நுட்பத்தின் பங்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதிலும் வெளிநாடுகளில் இருந்து ஒலிம்பிக் போட்டிகளைக் காணவரும் விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இங்கிலாந்தில் தங்கு தடையின் சென்று வர போக்குவரத்தை தகவல் தொழில் நுட்பத்தால் நவீனபடுத்தி இருக்கிறது இங்கிலாந்து.

அதன் முதல் படியாக இங்கிலாந்தில் உள்ள ட்ரான்ஸ்போர்ட் பார் லண்டன் மற்றும் வெர்ஜின் மீடியா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் நாட்களில் லண்டனில் உள்ள முதல் 80 பாதாள ரயில் நிலையங்களில் இலவச வைஃபை இன்டர்நெட் தொடர்பு சேவையை பயணிகள் பெறலாம்.

இந்த சேவையின் மூலம் பயணிகள் ரயிலில் பயண் செய்து கொண்டிருக்கும் போதே ரயில்களின் பயண நேரங்கள், நடைமேடை எண்கள், டிக்கட் அலுவலகங்கள் மற்றும் அவசரகால நேரத்தில் அணுகவண்டிய விவரங்கள் போன்றவற்றை தங்கள் மொபைல்களிலேயே பெறலாம்.

இதன் மூலம் வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று நம்பப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot