சார்., விண்வெளிக்கு ஒரு டிக்கெட்- விண்ணைத் தாண்டி வந்த ரிச்சர்ட்: அந்த அனுபவம் இருக்கே அடடா!

|

ரிச்சர்ட் பிரான்சனின் நிறுவனமான விர்ஜின் கேலக்டிக் உருவாக்கிய சூப்பர்சோனிக் விண்வெளி பயணம் செய்த முதல் நபர் ஆனார். அவரது நிறுவனமான விர்ஜின் கேலடிக் விண்வெளி விமானம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நியூ மெக்ஸிகோவில் இருந்து வானத்துக்கு பறந்தது. இதில் பிரான்சன் மற்றும் மூன்று சக பணியாளர்களை சுமந்து சென்றது.

விர்ஜின் கேலடிக் பிரான்சன்

விர்ஜின் கேலடிக் பிரான்சன்

பிரான்சன் விர்ஜின் கேலடிக் ஊழியர்களான பெத் மோசஸ், கொலின் பென்னட் மற்றும் சிரிஷா பாண்ட்லா உட்பட விமானிகள் டேவ் மேக்கே மற்றும் மைக்கேல் மசூசி ஆகியோருடன் ஸ்பேஸ்ஷிப் விண்ணில் பறந்தது. வானத்தை நோக்கி 50,000 அடி உயரத்தில் பறந்தது. பிரிட்டன் தொழிலதிபரான ரிச்சர்ட் பிரான்சன், விண்ணுக்கு சென்று திரும்ப வேண்டும் என்ற கனவு நினைவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.

யுனிட்டி என்ற ராக்கெட்

விர்ஜின் கேலடிக் நிறுவனம் உருவாக்கிய யுனிட்டி என்ற ராக்கெட் விண்ணில் ஒன்றரை மணிநேரம் பயணம் மேற்கொண்டது. பூமியின் ஈர்ப்பு விசையை தாண்டி தாமாக மிதிக்கும் உயரத்துக்கு சென்று திரும்பியுள்ளனர். பயணர்களை அடுத்த ஆண்டு விண்ணுக்கு செலுத்தும் இந்த திட்டத்தில் பிரான்சன் முதல் அனுபவசாலியாக இருக்க விரும்பினார். அதன்படி முதல் பயணம் மேற்கொண்டார்.

50 ஆயிரம் அடி உயரத்துக்கு மேலே பறந்தது

யுனிட்டி ராக்கெட் வடிவமைப்பு பார்க்கையில் மிகவும் அசாதாரணமாக உள்ளது. சுமார் 15 கிமி உயரம் அதாவது 50 ஆயிரம் அடி உயரத்துக்கு மேலே பறந்தது. ஈர்ப்பு விசை இல்லாத நேரத்தில் சில நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. நீல வானம் விண்வெளியின் நட்சத்திரங்கள் ஸ்பெக்கிள் இருளில் மங்குவதை கண்டு ரசித்துள்ளார். முன்னதாகவே கூறியது போல் இந்த ராக்கெட் வடிவமைப்பில் இதன் இறக்கைகள் தட்டையாக இருக்கும் பறக்கும் போது, பின் கொஞ்சம் கொஞ்சமாக செங்குத்தாக மாறி பறப்பதற்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்டது.

விண்வெளியின் பரந்த காட்சி அனுபவம்

இதன் ஸ்பேஸ்ஷிப் நடுப்பகுதியின் மூலம் விண்வெளியின் பரந்த காட்சிகளை காண அனுமதித்தனர். விமானத்தின் இறக்கைகள் மேல்நோக்கி சுருட்டப்படுகிறது. மைக்ரோகிராவிட்டியில் பிரான்சன் மிதந்தபடி வீடியோ பதிவு செய்துள்ளார். குழந்தையாக ஒரு கனவுடன் இருந்தது, நட்சத்திரங்களை பார்த்தேன்., இப்போது விண்கலத்தில் நாங்கள் அனுபவிக்கிறோம், அப்போ நீங்கள் என்ன செய்யமுடியும் என்பதை கற்பனை செய்து பாருங்கள் என பேசியிருந்தார். இவரது வார்த்தை பலரை ஊக்கமளிக்கும் வகையில் இருந்தது.

பறக்கும் தன்மைக்கு ஏற்ப இறக்கைகள்

யூனிட்டி விண்கலம் பயணத்துக்கு முன்னதாக ஏவுதளத்திற்கு ரிச்சர் பிரான்சன் சைக்கிளில் ஜாலியாக வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பேசு பொருளாக மாறி வருகிறது. பிரிட்டன் நாட்டின் கோடீஷ்வரரான பிரான்சன் விண்வெளி பயணம் குறித்து பலரும் ஆர்வமாக இருந்த நிலையில், அவர் கூலாக சைக்கிள் மூலம் ஏவுதளத்திற்கு வந்தார். ஸ்பேஸ்போர்ட் ஆப் அமெரிக்கா என்ற ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் புறப்பட்டது. மோசமான வானிலை காரணமாக திட்டமிட்ட நேரத்தில் சற்று தாமதமாக ஏவப்பட்டது.

அதிகரிக்கும் விண்வெளி சுற்றுலா

அடுத்த ஆண்டு பயணிகளை விண்ணுக்கு அழைத்து செல்லும் திட்டமாக இது இருக்கிறது. இதேபோன்ற திட்டத்தில் தான் அமேசான் மற்றும் ப்ளூ ஆர்ஜின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஈடுபட்டுள்ளார். அவரது ப்ளூ ஆர்ஜின் நிறுவனமும் தீவிரமாக இந்த பணியில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து ஸ்பேஸ் சுற்றுலாவுக்கான வரவேற்பு வரும் காலங்களில் அமோகமாக இருக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லை.

Best Mobiles in India

English summary
Virgin Galactic Founder Richard Branson Become First Person Ride to Space

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X