மொபைல் வீடியோ கேம்களில் விராத் கோஹ்லி
மொபைல் கேம் உருவாக்கும் நிறுவனம் ஒன்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராத் கோஹ்லி சம்பந்தப்பட்ட வீடியோ கேம்களை உருவாக்க மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

முன்னணி மொபைல் கேம் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான நசாரா தொழில்நுட்ப நிறுவனம், CSE எனப்படும் கார்னர்ஸ்டோன் ஸ்போர்ட் மற்றும் என்டர்டெயின்மென்ட் ப்ரைவேட் லிமிட்டெட் நிறுவனத்துடன் ப்ரெத்யேக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஒப்ந்தத்தின் படி இந்நிருவனம் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராத் கோஹ்லி சம்பந்தப்பட்ட வீடியோ கேம்களை தயாரித்து, விற்பனை செய்து விளம்பரம் செய்யும்.

உலகம் முழுவதும் வீடியோ கேம்களை விளையாடுவதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். விராத் கோஹ்லி வீடியோ கேம் உருவாக்கும் போது, இது உண்மையில் நல்ல திட்டமாக இருப்பதோடு என ரசிகர்களோடு இணைப்பில் இருக்க இது வித்தியாசமான அணுகுமுறையாகவும் இருக்கும் என்று விராத் கோஹ்லி தெரிவித்தார்.

வாடிக்கையாளர்கள் வீடியோ கேம்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். நசாரா தொழில்நுட்ப நிறுவனம் விராத் கோஹ்லி மூலம் மூன்று அல்லது ஐந்து வீடியோ கேம்களை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications