உங்கள் வீட்டில் விராட் கோலி: வெளியானது கோலி 3டி ஏஆர் ஃபில்டர்- எப்படி பயன்படுத்துவது தெரியுமா?

|

கொரோனா பரவல் லாக்டவுனுக்கு பின் இந்திய அணி முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியை தொடங்கியுள்ளது. இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இன்ஸ்டாகிராமில் கோலி ஏஆர் ஃபில்டர்

இன்ஸ்டாகிராமில் கோலி ஏஆர் ஃபில்டர்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டி, மூன்று டி20 போட்டி மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதையடுத்து கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்த இன்ஸ்டாகிராமில் பேஸ்புக் ஏஆர் ஃபில்டரை வெளியிட்டுள்ளது.

3டி ஏஆர் ஃபில்டர் அறிமுகம்

3டி ஏஆர் ஃபில்டர் அறிமுகம்

ஸ்போர்ட்ஸ்மேனியாஸ் உடன் கூட்டு சேர்ந்து 3டி ஏஆர் ஃபில்டர் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்போர்ட்ஸ்மேனியா விளையாட்டு தொடர்பான இமோஜிகள் மற்றும் ஆக்மெண்ட் ரியாலிட்டியை உருவாக்குவதில் வல்லமை படைத்ததாகும்.

பேட் டாக் ஃபார் இந்தியா என தலைப்பு

பேட் டாக் ஃபார் இந்தியா என தலைப்பு

பேஸ்புக் அறிமுகம் செய்துள்ள விராட்கோலி 3டி ஏஆர் ஃபில்டரை பயன்படுத்தி பகிர்வதன் மூலம் இந்தியா மற்றும் விராட்கோலிக்கு தங்களது ஆதரவுகளை தெரிவிக்கலாம். இந்த ஏஆர் ஃபில்டருக்கு பேட் டாக் ஃபார் இந்தியா(Bat Talk For India) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம்

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம்

விராட் கோலி ஏஆர் ஃபில்டரை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் பகிரலாம். ஏஆர் ஃபில்டரை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம். இன்ஸ்டாகிராம் செயலி முதலில் அப்டேட் செய்து கொள்ளவும்.

Whatsapp பயனர்களே உஷார்.. ஹேக்கர்களின் புதிய வழி மோசடியில் சிக்கிக்கொள்ளாதீர்கள்..

விராட்கோலி சுயவிவர பக்கத்தை திறக்கவும்

விராட்கோலி சுயவிவர பக்கத்தை திறக்கவும்

இன்ஸ்டாகிராம் செயலி ஓபன் செய்தவுடன் விராட்கோலியின் சுயவிவரத்தை திறக்கவும். விராட்கோலியின் பக்கம் திறக்கப்பட்ட உடன் ஹோம்பேஜ்ஜில் வலது புறமாக ஸ்வைப் செய்ய வேண்டும். இதில் ப்ரவுஸ் எபெக்ட் என்று காண்பிக்கும் அதை அழுத்தி ஃபில்டர் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

இன்ஸ்டாகிராமில் பதிவேற்றலாம்

இன்ஸ்டாகிராமில் பதிவேற்றலாம்

ரீல்ஸுக்கு அடுத்துள்ள டேப்பில் பேட் டாக்ஸ் ஃபார் இந்தியா என்ற ஏஆர் ஃபில்டர் காண்பிக்கப்படும். ஃபில்டரை தேர்வு செய்து டிரை இட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இதை ஓபன் செய்தவுடன் கேமரா திரையில் விராட் கோலி ஏஆர் 3டி அவதாரம் காட்டப்படும். அவதார படத்தை பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றலாம். அல்லது கேலரியில் சேமித்தும் வைத்துக் கொள்ளலாம்.

மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்

மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்

இதுகுறித்து விராட்கோலி கருத்து தெரிவித்துள்ளார். அதில் இந்தியாவுக்கான புதிய பேட் டாக்ஸ் ஃபில்டரை ஆரம்பிக்க பேஸ்புக்குடன் ஒத்துழைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். புதிய வழிமுறையை பயன்படுத்த இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை அழைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Virat Kohli AR Filter Now Available on Instagram

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X