Home
News

வீடியோ: பனை மரத்தின் உச்சியில் இளைஞர்: அதிவேகத்தில் தள்ளாடிய மரம்.,கிடுகிடுக்க வைத்த செயல்!

பனை மரத்தில் ஏறி நபர் ஒருவர் அதன் மொத்த ஓலைப்பகுதிகளையும் வெட்டியவுடன் பனை மரம் இடது, வலது என இருபுறம் வளைந்து ஆடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்காத்துக் கொள்ள பனை மர ஓலைகள்

தற்காத்துக் கொள்ள பனை மர ஓலைகள்

வெயில், மழை, குளிர், காற்று போன்ற இயற்கைச் சீற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்ள பனை மர ஓலைகள் முந்தையகால மனிதர்களுக்கு பிரதான தேவையாக பயன்பட்டுள்ளது. பனைகள் பொதுவாகவே பயிரிடப்படுதில்லை எனவும் இயற்கையிலே தானாகவே பெரும்பாலும் பெருகுகின்றன எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வளர்ச்சி அடைவதற்கு 15 ஆண்டுகள்

வளர்ச்சி அடைவதற்கு 15 ஆண்டுகள்

பனைகள் முதிர்ந்து வளர்ச்சி அடைவதற்கு 15 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் எனவும் பனை மரத்தின் வயதின் மனிதனின் ஆயுட்காலத்தை விட அதிகம் எனவும் கூறப்படுகிறது. பனைகள் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.

30-40 வரையிலான விசிறி வடிவ ஓலைகள்

30-40 வரையிலான விசிறி வடிவ ஓலைகள்

தமிழகத்தின் மாநில மரமாக பனை விளங்குகிறது. பனை மரத்தின் உச்சியில் கிட்டத்தட்ட 30-40 வரையிலான விசிறி வடிவ ஓலைகள் வட்ட வடிவில் முளைத்திருக்கும். பனை மரம் ஆப்பிராக்காவைத் தாயகமாகக் கொண்டது என கூறப்படுகிறது.

பல்வேறு வகை பொருட்கள்

பல்வேறு வகை பொருட்கள்

பதநீர், பனைநார், பனையோலை, பனைமட்டை, பனஞ்சட்டம், பனங்கருப்பட்டி, கள், பனை நுங்கு, பனம் பழம் என பல்வேறு வகை பொருட்கள் பனைமரத்தில் இருந்து கிடக்கின்றன. பனை மரங்களின் பல்வேறு வகை முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஓலைகளை வெட்டும் காட்சி

ஓலைகளை வெட்டும் காட்சி

இந்த நிலையில் பனை மரத்தில் ஏறி தன் உயிரை பணயம் வைத்து நுங்கு வெட்டுவது போன்று வேலைகள் நடைபெறுகின்றன. அதன்படி ஒருவர் பனைமரத்தின் உச்சிக்கு ஏறி அதன் விசிறையை வடிவ ஓலைகளை வெட்டும் காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

30 மீட்டர் உயரத்திலான பனை மரம்

30 மீட்டர் உயரத்திலான பனை மரத்தில் ஏறி அதன் விசிறிகளை வெட்டியவுன் எடையிழந்த மரம் வலது இடது வலைந்து வலைந்து அலசிகிறது. அந்தரத்தில் தொங்கிய அந்த நபர் மரத்தை கட்டிப்பிடித்தப்படி உள்ளார்.

இருபுறமும் அலசும் காட்சி

இருபுறமும் அலசும் காட்சி

பனை மரம் அந்த பக்கமும் இந்த பக்கமும் அலசும் காட்சியும் அதை அந்தநபர் கட்டிப்பிடித்தப்படி உள்ள வீடியோவும் பார்ப்போரை வியக்க வைக்கிறது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Best Mobiles in India

English summary
Viral Video: Young Man Who Went to Top to Cut Down the Palm Tree- Shocking Incident
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X