வெற்றி வெற்றி வெற்றி! விண்ணில் சீறிப்பாய்ந்த Vikram-S ராக்கெட்.. இந்தியாவின் வரலாற்று நிகழ்வு!

|

இந்தியா தனது தனியார் நிறுவனம் மூலம் உருவாக்கிய முதல் ராக்கெட்டான Vikram-S ராக்கெட்டை இன்று விண்ணில் ஏவியது. வணிக விண்வெளித் துறையை உருவாக்கும் நாட்டின் முயற்சியில் இது ஒரு மைல்கல் ஆகும். விண்வெளி ஆராய்ச்சியின் தொடக்க நிறுவனமான ஸ்கைரூட் உருவாக்கிய ராக்கெட் சென்னைக்கு அருகிலுள்ள இந்திய விண்வெளி ஏஜென்சியின் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டது.

விக்ரம்-எஸ் ராக்கெட்

விக்ரம்-எஸ் ராக்கெட்

இந்த ராக்கெட் ஆனது ஒலியை விட ஐந்து மடங்கு வேகம் மற்றும் 83 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டதாக இருக்கிறது. ஐதராபாத்தை தளமாகக் கொண்ட ஸ்கைரூட் என்ற தனியார் நிறுவனம் மூலம் இந்த ராக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான கதவை இஸ்ரோ திறந்த உடன் அதில் நுழைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் நிறுவனம் இதுவாகும். இதன் மூலம் உருவாக்கப்பட்ட ராக்கெட் தான் விக்ரம் எஸ்.

இதுவரை ரூ.530 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் 200 பேர் பணிபுரிகின்றனர் எனவும் முதல் வெளியீட்டு நிகழ்வு பணியில் மட்டும் சுமார் 100 பேர் ஈடுபட்டுள்ளனர் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ராக்கெட் சுமார் 81 கிலோமீட்டர் உயரத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம்-எஸ் ஏவப்பட்டதன் மூலம், இந்தியாவின் முதல் தனியார் விண்வெளி நிறுவனமாக ஸ்கைரூட் உருவெடுத்து இருக்கிறது.

விண்வெளி வீரர்களின் நம்பகத்தன்மை

விண்வெளி வீரர்களின் நம்பகத்தன்மை

இந்தியாவில் தற்போது பறந்துள்ள தனியார் நிறுவனத்தின் விக்ரம் எஸ் ராக்கெட் மூலம் உலகெங்கிலும் உள்ள இந்திய தனியார் விண்வெளி வீரர்களின் நம்பகத்தன்மை கணிசமாக மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் 13 பில்லியன் டாலராக (தோராயமாக ரூ.1,06,222 கோடி) வளர்ச்சியடையும் எனவும் 2025 ஆம் ஆண்டிக்குள் இந்த விண்வெளி ஏவுதளப் பிரிவான CAGR இல் 13 சதவீதம் வரை இந்தியா வேகமாக வளரும் எனவும் மதிப்பிடப்பட்டிருக்கிறது.

விண்வெளி வரலாற்றில் முதன்முறை

விண்வெளி வரலாற்றில் முதன்முறை

இந்திய விண்வெளி வரலாற்றில் முதன்முறையாக தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம் வடிவமைத்த விக்ரம் எஸ் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களின் போட்டி

தனியார் நிறுவனங்களின் போட்டி

விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம் என்பது புதிதல்ல. எலான் மஸ்க் இன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசாவின் விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. அதேபோல் தான் ஜெஃப் பெசோஸ் இன் ப்ளூ ஆர்ஜின் நிறுவனமும். விண்வெளி சுற்றுலா போன்ற திட்டங்களில் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ் போன்ற உலகப் பணக்காரர்களின் தனியார் நிறுவனங்கள் விண்வெளி ஆராய்ச்சியில் போட்டிப்போட்டு வருகின்றன.

வளர்ச்சியை நோக்கி இஸ்ரோ

வளர்ச்சியை நோக்கி இஸ்ரோ

விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் நிறுவனம் என்பது புதிதல்ல என்றாலும் இந்திய வரலாற்றில் தனியார் நிறுவனம் என்பது இது முதன்முறை. தனியார் நிறுவனம் வடிவமைத்த "விக்ரம்-எஸ்" என்ற ராக்கெட் இன்று விண்ணில் பாய்ந்தது. நாசாவின் ஆராய்ச்சிக்கு மஸ்க் இன் ஸ்பேஸ் எக்ஸ் பங்கு பெரிதாக இருப்பது போல், இஸ்ரோவின் ஆராய்ச்சிக்கு இந்திய தனியார் நிறுவனங்கள் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்பேஸ் திட்டம்

தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலான திட்டத்தை இஸ்ரோ 2020 ஆம் ஆண்டு செயல்படுத்தியது. இந்த திட்டத்திற்கு இன்ஸ்பேஸ் என பெயரிடப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ராக்கெட், செயற்கைக்கோள்களை தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி தயாரிக்கப்பட்ட ராக்கெட் தான் விக்ரம் எஸ் ஆகும்.

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை

தற்போது மூன்று வித எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் வெவ்வேறு ராக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் அதிகப்பட்சமாக 480 கிலோ எடையை சுமந்து செல்லக்கூடிய ராக்கெட் தான் விக்ரம் எஸ். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தையான மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாரா பாய் நினைவாக விக்ரம் என இந்த ராக்கெட்டுக்கு பெயரிடப்பட்டிருக்கிறது.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த விக்ரம் எஸ்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த விக்ரம் எஸ்

இந்த விக்ரம் எஸ் ராக்கெட் முன்னதாக நவம்பர் 15 ஆம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வானிலை மோசமாக இருந்த காரணத்தால் அன்று ராக்கெட் விண்ணில் ஏவப்பட வில்லை. தொடர்ந்து இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vikram-S Successfully Launched in to Space: SkyRoot Aerospace that has place in the history of India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X