விக்ரம் லேண்டரின் அசல் புகைப்படம் வெளியிடப்படாததற்குக் காரணம் இதுதான்!

|

நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் எங்குத் தரையிறங்கியுள்ளது என்று இஸ்ரோ தனது ஆர்பிட்டரை பயன்படுத்தி நேற்று கண்டுபிடித்தது. இந்த செய்தியைக் கேட்டு சோகத்திலிருந்த இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சி கொண்டனர். சமூக வலைத்தளத்தில் விக்ரம் லேண்டரின் புகைப்படம் என்று போலியாக ஒரு புகைப்படம் வைரல் ஆகிவருகிறது.

இஸ்ரோ தலைவர் சிவனின் டிவிட்டர் பக்கம்

இஸ்ரோ தலைவர் சிவனின் டிவிட்டர் பக்கம்

இஸ்ரோ தலைவர் சிவனின், அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படம் பதிவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இஸ்ரோ தலைவர் சிவனிற்கென்று அதிகாரப்பூர்வ டிவிட்டர் அக்கௌன்ட் இல்லை என்பதே உண்மை.

போலி விக்ரம் லேண்டர் புகைப்படம்

போலி விக்ரம் லேண்டர் புகைப்படம்

போலியான டிவிட்டர் பக்கத்திலிருந்து சிவன் என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த புகைப்படம் விக்ரம் லேண்டரின் புகைப்படமே இல்லை என்பது தான் உண்மை. சமூக வலைத்தளத்தில் விக்ரம் லேண்டரின் புகைப்படம் என்று வைரல் ஆகிக்கொண்டிருக்கும், இந்த படம் உண்மையில் அப்போலோ 16 லேண்டிங் சைட் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திராயன்-2 லேண்டர் பேட்டரிக்கு மின்சப்ளை துவங்கியது:இஸ்ரோ-நாசா சேருகிறது.!

அப்போலோ 16 லேண்டிங் சைட்

அப்போலோ 16 லேண்டிங் சைட்

கூகுள் பக்கத்திற்குச் சென்று, அப்போலோ 16 லேண்டிங் சைட்(Apollo 16 Landing Site) என்ற டைப் செய்தீர்களானால், விக்ரம் லேண்டர் என்று பொய்யாகப் பரவி வரும் புகைப்படத்தை நீங்கள் காணலாம். அப்போலோ லேண்டிங் சைட் புகைப்படத்தை, விக்ரம் லேண்டரின் தற்போதைய நிலை என்று போலியாகப் பகிர்ந்து வருகின்றனர்.

இஸ்ரோவின் பதில்

இஸ்ரோவின் பதில்

முதலில் இது போலியான புகைப்படம் என்பதை இஸ்ரோ தெளிவுபடுத்தியுள்ளது. அதேபோல் இஸ்ரோ தலைவருக்கு டிவிட்டர் அக்கௌன்ட் இல்லை என்பதையும் உறுதிப்படத் தெரிவித்துள்ளது.விக்ரம் லேண்டரின் அசல் புகைப்படம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் இரண்டாம் எச்சரிக்கை: 24 புதிய ஆப்ஸ்களை உடனே அன்இன்ஸ்டால் செய்யுங்கள்!கூகுள் இரண்டாம் எச்சரிக்கை: 24 புதிய ஆப்ஸ்களை உடனே அன்இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஏன் இன்னும் விக்ரம் லேண்டரின் புகைப்படம் வெளியிடப்படவில்லை?

ஏன் இன்னும் விக்ரம் லேண்டரின் புகைப்படம் வெளியிடப்படவில்லை?

விக்ரம் லேண்டரை கண்டிப்பித்த ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப்பாதையைச் சுற்றி வருகிறது என்பது நமக்குத் தெரிந்த ஒன்றே, முதலில் நிலவை ஒரு முழு வட்டம் அடித்து, ஒரு வட்ட சுற்றுப்பாதையை ஆர்பிட்டர் நிறைவு செய்வதற்கு மூன்று நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

இதான் காரணமா?

இதான் காரணமா?

முதல் முறையாக தெர்மல் இமேஜிங் முறைப்படி ஆர்பிட்டர், நேற்று விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டது. மீண்டும் அதே இடத்திற்கு வருவதற்கு ஆர்பிட்டருக்கு மூன்று நாட்கள் எடுத்துக்கொள்ளும். ஆதலால் ஒரு புகைப்படம் எடுக்க, மூன்று நாட்கள் ஆகும் என்ற காரத்தினாலேயே இன்னும் விக்ரம் லேண்டர் இன் அசல் புகைப்படம் வெளியிடப்படவில்லை.

மிகப்பெரிய அளவில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய காக்னிசென்ட் திட்டம்: அச்சத்தில் ஊழியர்கள்.!மிகப்பெரிய அளவில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய காக்னிசென்ட் திட்டம்: அச்சத்தில் ஊழியர்கள்.!

பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை

பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை

நிபுணர்களின் கருத்துப்படி விக்ரம் லேண்டருடன் தொடர்பை மீட்பதற்கான நேரம் முடிந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் அவர்களின் முயற்சியை விடுவதாக இல்லை. இறுதி நிமிடத்தில் கூட போராடும் இந்திய விஞ்ஞானிகளைப் பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை.

Best Mobiles in India

English summary
Vikram Lander Original Picture Was Not Released Because Of This The Reason : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X