ரோலக்ஸ் கேரக்டரில் கலக்கிய சூர்யா... ரோலக்ஸ் வாட்சை பரிசாக கொடுத்து அசத்திய கமல்... விலை எவ்வளவு தெரியுமா?

|

தமிழில் ஒரு சிறந்த Pan India திரைப்படம் வெளியாகாதா என்ற எதிர்பார்ப்பு தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக விக்ரம் திரைப்படம் வெளியாகி உள்ளது என்றே கூறலாம். இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடத்த விக்ரம் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியான ஒரு வாரத்திற்குள் உலகம் முழுவதும் ரூ.175 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் திரைப்படம் 2022 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த படமாக இருக்கும் என திரை விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய வில்லனாக சூர்யா

முக்கிய வில்லனாக சூர்யா

இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் என பலர் நடித்திருக்கின்றனர். படத்தின் இறுதி ஐந்து நிமிடத்தில் முக்கிய வில்லனாக வந்து கலக்கி இருக்கிறார் நடிகர் சூர்யா. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரத்தின் பெயர் ரோலக்ஸ்.

நல்ல வரவேற்பை பெற்ற ரோலக்ஸ் கதாபாத்திரம்

கதாநாயனாக மட்டுமே நடித்து வந்த நடிகர் சூர்யா இந்த திரைப்படத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவராக தோன்றி கலக்கி இருக்கிறார். நடிகர் சூர்யாவின் வித்தியாசமான தோற்றத்தின் மூலம் ரோலக்ஸ் கதாபாத்திரம் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை குறிப்பிட்டு டுவிட்டரில் #Rolex என்ற ஹேஷ்டேக் பிரபலமாகி வருகிறது.

தியேட்டரே அதிர்ந்தது

சூர்யாவின் நடிப்பைப் பாராட்டிய டுவிட்டர் பயனர் ஒருவர், "ரஜினிக்குப் பிறகு, தெலுங்கு மாநிலங்களில் சூர்யா அளவுக்கு கிரேஸ் வேறு எந்த தமிழ் ஹீரோவுக்கும் இல்லை. அவரது டைட்டில் கார்ட் மற்றும் #Rolex Entry-ன் போது தியேட்டர் அதிர்ந்தது" என குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பல பயனர்களும் #Rolex என குறிப்பிட்டு சூர்யாவை பாராட்டி வருகின்றனர். இதையடுத்து தனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பளித்த கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோருக்கு நன்றி என நடிகர் சூர்யா டுவிட் செய்துள்ளார்.

ரூ.47 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச்

ரூ.47 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச்

விக்ரம் திரைப்படம் வசூல் சாதனை செய்து வரும் நிலையில் படத்தின் நாயகன் கமல்ஹாசன் சூர்யாவுக்கு ரூ.47 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்சை பரிசாக அளித்துள்ளார். திரைப்படத்தில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தின் பெயர் ரோலக்ஸ், இதை குறிப்பிடும் விதமாக ரோலக்ஸ் வாட்சை அன்பளிப்பாக நடிகர் கமல் ஹாசன் சூர்யாவுக்கு வழங்கி இருக்கிறார்.

ரோலக்ஸுக்கு நன்றி அண்ணா

விக்ரம் படத்தில் ரோலக்ஸ் வேடத்தில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு ரூ.47 லட்சம் மதிப்புள்ள புதிய ரோலக்ஸ் வாட்சை பரிசாக நடிகர் கமல்ஹாசன் வழங்கி உள்ளார்.

இதுகுறித்து நடிகர் சூர்யா டுவிட்டரில் டுவீட் ஒன்று பதிவிட்டுள்ளார். அதில் "இது போன்ற ஒரு தருணம் வாழ்க்கையை அழகாக்குகிறது! உங்கள் #ரோலக்ஸுக்கு நன்றி அண்ணா! @ikamalhaasan என குறிப்பிட்டுள்ளார்.

சூர்யாவுக்கு முக்கிய பங்கு அளிப்பேன்

சூர்யாவுக்கு முக்கிய பங்கு அளிப்பேன்

முன்னதாக நடிகர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், விக்ரம் திரைப்படத்தை வெற்றிப் பெற செய்த அனைவருக்கும் நன்றி, சிறப்பு வேடத்தில் நடித்த சூர்யாவுக்கு நன்றி, அடுத்த இருவரும் இணைந்து நடிக்கும் படத்தில் சூர்யாவுக்கு முக்கிய பங்கு அளிப்பேன் என குறிப்பிட்டார். அதேபோல் விக்ரம் திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு நடிகர் கமல்ஹாசன் Lexus சொகுசு காரை பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் மட்டும் 2 மில்லியன் டாலர்கள் வசூல்

அமெரிக்காவில் மட்டும் 2 மில்லியன் டாலர்கள் வசூல்

IANS தகவலின்படி, விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் விறுவிறுப்பான வணிகத்தை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. அமெரிக்காவில் மட்டும் 2 மில்லியன் டாலர்கள் வசூலை தாண்டி இருக்கிறது. தமிழ் திரைப்படத்திற்கு அமெரிக்காவில் இவ்வளவு வசூல் என்பது மிகவும் அரிது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில், கேஜிஎஃப் 2-க்கு பிறகு அதிக வரவேற்பு பெற்ற திரைப்படம் விக்ரம் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யாவுக்கு வழங்கிய ரோலக்ஸ் வாட்ச் அம்சங்கள்

சூர்யாவுக்கு வழங்கிய ரோலக்ஸ் வாட்ச் அம்சங்கள்

நடிகர் கமல் ஹாசன் சூர்யாவுக்கு வழங்கிய ரோலக்ஸ் வாட்ச், Rolex Day-date 40mm Rose Gold Sun Dust Diamond Dial மாடலாகும். இந்த வாட்ஸ் ரோஸ் கோல்ட் மூலம் உருவாக்கப்பட்டது. இந்த வாட்ச்சில் உள்ள முற்களும் ரோஸ் கோல்ட் மூலமாகவே உருவாக்கப்பட்டவை. இது 10 ஏடிஎம் தண்ணீர் அளவை தாங்கும் திறன் கொண்டிருக்கிறது. இந்த வாட்ச்-க்கு என தனி சிறப்பு இருக்கிறது. இந்த வாட்ச் முழுவதும் கைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vikram Success: Kamal Haasan Gifts his Rolex Watch to Actor Suriya

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X