சூப்பர் டீலக்ஸ் & ஐரா இணையத்தில் கசிந்தது இப்படித்தான்.! தடுமாறும் தமிழ் சினிமா.!
சமீப காலமாகத் திரைக்கு வரும் புதிய படங்கள் இணையதளத்தில் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கும், படக்குழுவினருக்கும் பெருமளவில் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றது.
இணையதளத்தில் புதிய படங்கள் அனைத்தும் திருட்டுத்தனமாக வெளியாகிக்கொண்டே இருக்கிறது. சமீப காலமாகத் திரைக்கு வரும் புதிய படங்கள் இணையதளத்தில் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கும், படக்குழுவினருக்கும் பெருமளவில் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இதைத் தடுக்க சைபர் கிரைம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்டோர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் இந்த நிலையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

கண்டிப்பான சோதனை
என்னதான் தியேட்டர் உரிமையாளர்கள் உஷாராக இருந்தாலும், படம் பார்க்க வரும் வடிக்கைளார்களை சோதனை செய்து படம் பார்க்க அனுப்பினாலும், இன்னும் திருட்டுத்தனமாகப் படம் பதிவு செய்யப்படுவதை தவிர்க்க முடிவதில்லை.

பட்டன் கேமரா vs வாட்ச் கேமரா
அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படங்களை மிக எளிதில் எச்.டி தரத்தில் பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டுவிடுகிறார்கள், முக்கியமாக விலை உயர்ந்த சீக்ரெட் கேமராகள், பட்டன் கேமராகள், வாட்ச் கேமராகள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள கேமராக்களை பயன்படுத்தி முழு படத்தையும் பதிவு செய்துவிடுகின்றனர்.

வைஃபை கேமரா
திருட்டுத்தனமாகப் படங்களைப் பதிவு செய்பவர்களை தியேட்டர் இல் வைத்து கையும் களவுமாகப் பிடித்தாலும் கூட பதிவு செய்யப்பட்ட படங்களை மீட்க முடிவதில்லை. என்னென்றால் இவர்கள் பயன்படுத்தும் கேமராகளில் வைஃபை சேவை இருப்பதினால் படங்கள் அனைத்தும் சர்வர்களில் நேரடியாக ஸ்டோர் செய்யப்படுகின்றன.

புதிய படங்கள்
இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன் திரைக்கு வந்த ரஜினி, அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் புதிய படங்களை துவங்கி சிறு பட்ஜெட் படங்கள் வரை அனைத்தையும் திருட்டுத்தனமாக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

சூப்பர் டீலக்ஸ் & ஐரா ஆன்லைன் இல்
இந்த வரிசையில் தற்பொழுது விஜய் சேதுபதி நடித்து வெளியாகி உள்ள சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மற்றும் நயன்தாரா நடித்து வெளியாகியுள்ள ஐரா திரைப்படங்கள் தற்பொழுது எச்.டி தரத்தில் திருட்டுத்தனமாக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல் இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களுக்கும், படக்குழுவினருக்குப் பெரு அதிர்ச்சியை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications