Vijay Sales Mega Republic Day sale: ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவிகளை கம்மி விலையில் வாங்க இதுதான் சரியான நேரம்.!
அமேசான், பிளிப்கார்ட் தளங்களுக்குப் போட்டியாக விஜய் சேல்ஸ் தளத்தில் ஸ்மார்ட்போன், டிவி உள்ளிட்ட பல சாதனங்களுக்குத் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளது. அதாவது தற்போது விஜய் சேல்ஸ் தளத்தில் Mega Republic Day sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.

சிறப்பு விற்பனை
இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப், ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்குத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைபயன்படுத்தி சாதனங்களை வாங்கினால் கூடுதலர் தள்ளுபடி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 14
மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஐபோன் 14 மாடலுக்கு இந்த தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது முன்பு 79,990-க்கு விற்பனை செய்யப்பட்ட ஐபோன் 14 மாடல் ஆனது தற்போது ரூ.74,900-க்கு வாங்கக் கிடைக்கிறது. குறிப்பாக தரமான அம்சங்களுடன் இந்த ஐபோன் 14 மாடல் வெளிவந்துள்ளது.

ஐபோன் 13
விஜய் சேல்ஸ் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு விற்பனையில் ஐபோன் 13 மாடல் ரூ.64,900-க்கு வாங்க கிடைக்கும். பின்பு இந்த தளத்தில் ஐபோன் 12 மாடல் ரூ.59,990-க்கு வாங்க கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஐபோன்களை இந்த சிறப்பு விற்பனையில் வாங்குவது மிகவும் நல்லது.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட்
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் மாடல் ஆனது முன்பு ரூ.14,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த சிறப்பு விற்பனையில் ரூ.9,999-க்கு வாங்க கிடைக்கிறது. 8-7-இன்ச் டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5100 எம்ஏஎச் பேட்டரி, 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி டேப் ஏ7 லைட் மாடல்.

ஒன்பிளஸ் 10ஆர்
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் 10ஆர் ஸ்மார்ட்போன் முன்பு ரூ.38,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது விஜய் சேல்ஸ் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஒன்பிளஸ் 10ஆர் ஸ்மார்ட்போனை ரூ.32,999-விலையில் வாங்க முடியும்.

fire boltt ninja call 2 ஸ்மார்ட்வாட்ச்
விஜய் சேல்ஸ் தளத்தில் ஸ்மார்ட்வாட்ச் வாங்குவதற்கு இதுதான் சரியான நேரம். அதாவது fire boltt ninja call 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கு 75 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த fire boltt ninja call 2 ஸ்மார்ட்வாட்ச் ஸ்மார்ட்வாட்ச் மாடலை தற்போது ரூ.1999-விலையில் வாங்க முடியும்.

ஒன்பிளஸ் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி
ஒன்பிளஸ் 43Y1 ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவிக்கு விஜய் சேல்ஸ் தளத்தில் 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.22,999-விலையில் வாங்க முடியும். ஆண்ட்ராய்டு டிவி 9 இயங்குதளம், டால்பி ஆடியோ ஆதரவு, 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல்.

40-இன்ச் எம்ஐ ஸ்மார்ட் டிவி
40-இன்ச் எம்ஐ Horizon Edition ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி ஸ்மார்ட் டிவிக்கு 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.21,999-க்கு வாங்க முடியும். குவாட்-கோர் பிராசஸர், 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








