நல்ல வருஷம் பொறந்திருச்சு! iPhone 15 மீது ரூ.13000, iPhone 14 மீது ரூ.18000! இப்படி ஒரு ஆஃபர் இனி கிடைக்காது!
ஐபோன் 15 (iPhone 15), ஐபோன் 14 (iPhone 14), ஐபோன் 13 (iPhone 13), மேக்புக்கள், ஐபேட்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச்கள் உட்பட பல வகையான ஆப்பிள் தயாரிப்புகளின் மீது பல்வேறு சலுகைகளை வழங்கும் சிறப்பு விற்பனை ஒன்று விஜய் சேல்ஸ் (Vijay Sales) வழியாக நடக்கிறது.
ஆப்பிள் டேஸ் (Apple Days) என்கிற பெயரின்கீழ், டிசம்பர் 31 முதல் தொடங்கிய இந்த சிறப்பு விற்பனையானது வருகிற ஜனவரி 7 ஆம் தேதி வரையிலாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விற்பனையின்கீழ் என்னென்ன ஆப்பிள் தயாரிப்புகள் (Apple Products) மீது என்னென்ன சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

ஐபோன் 15 சீரீஸ் மீதான ஆஃபர்: கடந்த 2023 செப்டம்பரில் நடந்த வெளியீட்டு நிகழ்வில் ரூ.79,990-க்கு அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் 15 (iPhone 15) மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் தற்போது விஜய் சேல்ஸ்-ல் ரூ.70,990 என்கிற ஆரம்ப தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
மேலும் எச்டிஎஃப்சி பேங்க் கார்டுகளை (HDFC Bank Cards) பயன்படுத்தினால் ஐபோன் 15 மீது கூடுதலாக ரூ.3,000 தள்ளுபடியை பெறலாம். இதன்மூலம் ஐபோன் 15-ன் இறுதி ஆஃபர் விலையை (Final Offer Price) ரூ.66,990 க்கு கொண்டுவரலாம். இதேபோல ஆப்பிள் ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus) மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,900 க்கு பதிலாக ரூ. ₹ 79,820 என்கிற ஆரம்ப தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

இதேபோல ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,34,900 க்கு பதிலாக ரூ.1,25,900 க்கும், ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) மாடலின் பேஸிக் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,59,900 க்கு பதிலாக ரூ.1,49,240 க்கும் பட்டியலிடப்பட்டுள்ளது.
ஐபோன் 14 சீரீஸ் மீதான ஆஃபர்: ஆப்பிள் ஐபோன் 14 (iPhone 14) மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,900 க்கு பதிலாக ரூ.61,160 க்கும், ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus) மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,900 க்கு பதிலாக ரூ.70,490 க்கும் வாங்க கிடைக்கிறது.

ஐபோன் 13 மீதான ஆஃபர்: ஆப்பிள் ஐபோன் 13 (iPhone 13) மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.69,900 க்கு பதிலாக ரூ.51,820 க்கு வாங்க கிடைக்கிறது. எச்டிடிஎஃப்சி பேங்க் தள்ளுபடியாக கூடுதலாக ரூ.1,000 கிடைக்கும். இப்படியாக ஐபோன் 13 மாடலின் இறுதி ஆஃபர் விலையை ரூ.50,820 க்கு கொண்டுவர முடியும்.
ஆப்பிள் ஐபேட்கள் மீதான ஆஃபர்: ஆப்பிள் ஐபேட் 9த் ஜென் (Apple iPad 9th Gen) மாடல் ரூ.27,990 க்கும் மற்றும் ஐபேட் 10த் ஜென் (Apple iPad 10th Gen) மாடலின் பேஸிக் வேரியண்ட் ரூ.33,430 க்கும் வாங்க கிடைக்கிறது. மேலும் ஐபேட் ஏர் 5த் ஜென் 64ஜிபி வேரியண்ட் (iPad Air 5th Gen 64GB Variant) ரூ.50,680 க்கும் மற்றும் எம்2 சிப்செட் (M2 chipset) கொண்ட ஐபேட் ப்ரோவின் 256ஜிபி வேரியண்ட் (iPad Pro 256GB Variant) ரூ.79,990 க்கும் வாங்க கிடைக்கிறது.
ஆப்பிள் மேக்புக்கள் மீதான ஆஃபர்: எம்1 சிப்செட் (M1 Chipset) கொண்ட மேக்புக் ஏர் (MacBook Air) ரூ.79,990 க்கு வாங்க கிடைக்கிறது. கூடுதலாக ரூ.5,000 வங்கி தள்ளுபடியுடன் இதன் விலையை ரூ.74,900 ஆகவும் குறைக்கலாம். இதேபோல 256ஜிபி ஸ்டோரேஜ் உடனான மேக்புக் ஏர் எம்2 (MacBook Air M2) மாடலானது ரூ.1,01,960 க்கு வாங்க கிடைக்கிறது. இதை வாங்க எச்டிஎப்சி கார்ட்டை பயன்படுத்தினால் இதன் விலையை ரூ.96,960 ஆக குறைக்க முடியும்.
ஆப்பிள் வாட்சுகள் மீதான ஆஃபர்: ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 (Apple Watch Series 9) ரூ.38,810 முதல் வாங்க கிடைக்கிறது. கூடுதலாக வங்கி தள்ளுபடிகள் மூலம் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்சை வாங்கினால் மேற்கண்ட விலையை ரூ,36,310 க்கு கொண்டுவர முடியும். இதேபோல ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 8 (Apple Watch Series 8) மற்றும் ஆப்பிள் வாட்ச் எஸ்இ செக்கெண்ட் ஜென் (Apple Watch SE 2nd Gen) மாடல்கள் முறையே ரூ.32,620 மற்றும் ரூ.25,690 க்கு வாங்க கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications