மொபைல் போன் சந்தாதாரர்களுக்கு இலவசமாக 750 எம்பி இண்டர்நெட் டேட்டா
டிஜிட்டல் இந்தியா வாரத்தை அனுசரிக்கும் விதமாக, தற்சமயம் இண்டர்நெட் பயன்படுத்தாத சந்தாதாரர்களுக்கு 750 எம்பி இலவச டேட்டாவினை வழங்க தொலைதொடர்பு நிறுவனமான வீடியோகான் அறிவித்திருக்கின்றது. இந்த 750 எம்பி டேட்டாவினை வாடிக்கையாளர்கள் இரு மாதங்களுக்கு பயன்படுத்த முடியும் என்பதோடு அதிகபட்சமாக சுமார் 1500 எம்பி டேட்டா வரை வழங்கப்படும் என்று அந்நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் இண்டர்நெட் மீது மோகம் இல்லாதது, மற்றும் அதிக கட்டணத்தின் காரமாக வாடிக்கையாளர்கள் இண்டர்நெட் பயன்படுத்தாமல் உள்ளனரா என்பதை கண்டறிய உதவும் என்று வீடியோகான் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான அரவிந்த் பலி தெரிவித்தார்.
இது குறித்து அந்நிறுவனம் நடத்திய ஆய்வில் சுமார் 86 சதவீதம் பேர் இண்டர்நெட் வசதி கொண்ட மொபைல் வைத்திருந்தும் இண்டர்நெட் பயன்படுத்த தயக்கம் காட்டியிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். இண்டர்நெட் குறித்த சந்தேகங்களை கேட்டறிவது மற்றும் பயன்படுத்த தயக்கம் காட்டுவதால் பெரும்பலானோர் இண்டர்நெட் பயன்படுத்துவதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications