Redmi நிறுவனத்துக்குச் சோதனை மேல் சோதனை: தீ பற்றி எரிந்த போன் வீடியோ.!

|

ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக சார்ஜ் செய்து கொண்டே பயன்படுத்தக் கூடாது. அதேபோல் அதிக நேரம் இணையத்தைப் பயன்படுத்தும் போது போன் சூடாவது தெரிந்தால் சிறிது நேரம் போனை ஆஃப் செய்து வைத்தால் மிகவும் நல்லது.

எட்டு மாத குழந்தை

எட்டு மாத குழந்தை

சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலியில் (Bareilly), சார்ஜ் ஆகிக்கொண்டிருந்த மொபைலின் பேட்டரி வெடித்ததன் விளைவாக எட்டு மாத குழந்தை ஒன்று உயிர் இழந்துள்ளது.

குறிப்பாக இந்த மொபைல் வெடிப்பு சம்பவத்தில் சிக்கிய குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுசிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

நாசா விண்வெளியில் 'நரகத்தை' கண்டுபிடித்ததா? நெருப்பு மழை..தொடர்ந்து எரியும் சூப்பர் ஹாட் கிரகம்..நாசா விண்வெளியில் 'நரகத்தை' கண்டுபிடித்ததா? நெருப்பு மழை..தொடர்ந்து எரியும் சூப்பர் ஹாட் கிரகம்..

ரெட்மி 6ஏ

ரெட்மி 6ஏ

மேலும் சில நாட்களுக்கு முன்பு ரெட்மி 6ஏ எனும் போன் வெடித்து பெண் இறந்தார். பிரபல யூடியூபர் ஒருவரின் ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்த யூடியூபரின் அத்தை இரவு தூங்கும் போது ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனை தலையணைக்கு அருகில் முகத்திற்கு நேராக வைத்திருந்தார் எனவும், அந்த போன் வெடித்து அவரது உயிரைப் பறித்ததாகக் கூறப்படுகிறது எனவும் கூறப்படுகிறது.

உங்கள் போனை எப்படிப் பிடித்துப் பயன்படுத்துகிறீர்கள்? உங்களைப் பற்றிய உண்மை இது தான்.. தெரிஞ்சுக்கோங்க..உங்கள் போனை எப்படிப் பிடித்துப் பயன்படுத்துகிறீர்கள்? உங்களைப் பற்றிய உண்மை இது தான்.. தெரிஞ்சுக்கோங்க..

ரெட்மி

இது எங்களுக்கு மோசமான நேரம். இந்த நேரத்தில் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது பிராண்டின் பொறுப்பு என்று அந்த யூடியூபர் ட்விட்டரில் தகவல் தெரிவித்து இருக்கிறார்.

அதாவது பேட்டரி வெடித்ததால் போன் முழுமையாக எரிந்தது எனவும், இதன் காரணமாக அதில் இருந்த டிஸ்பிளே உடைந்து பின்புற பேனல் முழுமையாக சேதமடைந்து விட்டது என்றும் கூறப்படுகிறது. மேலும் ட்விட்டரில் வெளியாகி இருக்கும் படங்களில் உயிரிழந்த பெண் படுத்திருந்த பகுதி முழுக்க இரத்தத்தை காண முடிகிறது.

இந்தியாவில் ஏன் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவது சிறந்ததில்லை.. இவ்வளவு காரணம் இருக்கிறதா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்கஇந்தியாவில் ஏன் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவது சிறந்ததில்லை.. இவ்வளவு காரணம் இருக்கிறதா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

ரெட்மி நோட் 11டி ப்ரோ

ரெட்மி நோட் 11டி ப்ரோ

இந்நிலையில் சீனாவில் கூட ஒரு ரெட்மி போன் வெடித்து சிதறிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது சீனாவில் ரெட்மி நோட் 11டி ப்ரோ ( Redmi Note 11T Pro) வெடித்துச் சிதறியதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த போன் வெடித்ததால் யாரும் இறக்கவில்லை. குறிப்பாக விபத்துக்கு பின்பு போனின் தோற்றம் தொடர்பான வீடியோ வைரலானது.

ரெட்மி கே50ஐ

குறிப்பாக இந்த ரெட்மி நோட் 11டி ப்ரோ போன் இந்தியாவில் ரெட்மி கே50ஐ எனும் பெயரில் அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்து. குறிப்பாக சீனாவில் சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்ட இந்த வீயோவில் டிஸ்பிளே மற்றும் பின்பக்க பேனல் முற்றிலும் சேதமடைந்துள்ளது.

கவனமாக இருக்க வேண்டும்

கவனமாக இருக்க வேண்டும்

போன்களின் பேட்டரி திடீரென வெடிப்பது அல்லது தீப்பிடித்து எரிவது போன்ற விபத்துகளால் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அல்லது தீக்காயங்களை சந்திக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. எனவே போன்களை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இது நடந்தால்., அது நடக்கும்: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை எப்போது வரும்?- மஸ்க் வைத்த நிபந்தனை!இது நடந்தால்., அது நடக்கும்: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை எப்போது வரும்?- மஸ்க் வைத்த நிபந்தனை!

பேட்டரியை கவனிக்கவும்

பேட்டரியை கவனிக்கவும்

போன் வெடிப்பதற்கான காரணம் என்னவென்றால். போனில் இருக்கும் பேட்டரி மட்டும்தான். பேட்டரி சூடாகி பருமனாகி வெடித்து சிதறுகிறது. அப்போது செல்போனும் தானாக வெடிக்கிறது. பேட்டரி வெடிப்பதற்கு காரணம், சார்ஜர் மட்டும்தான். ஒரு மொபைல் போனில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை பொருத்தே அதற்கான சார்ஜர் வழங்கப்படும். ஆனால் வேறுஒருவரின் சார்ஜரை மாற்றிப் போடும் போது வோல்ட் சப்ளையில் மாற்றம் அடைகிறது.

உதாரணமாகக் கூறவேண்டும் என்றால் குறைந்த எம்ஏஹெச் பவர் கொண்ட பேட்டரியில் அதிக வோல்ட் சப்ளை உள்ள சார்ஜர் போடும் போது பேட்டரி பருமன் அடையத் தொடங்குகிறது. இதனால் சார்ஜ் சரியாக நிக்காமல் அடிக்கடி பேட்டரி லோ ஆகும்.

அதன் காரணமாக மொபைல் போன் நீண்ட நேரமோ அல்லது இரவு முழுவதுமோ சார்ஜ் போடும் நிலை ஏற்படுகிறது. அப்படி பேட்டரி பருமன் அடைந்துக் கொண்டே வருகையில் ஒருகட்டத்தில் வெடித்து சிதறுகிறது. எனவே மொபைலுக்கு என்று வழங்கப்பட்ட சார்ஜரில் மட்டும் சார்ஜ் போடுவது மிகவும்நல்லது.

டீனி-டைனி ரோபோ நண்டு: விரைவில் மனித உடலுக்குள் சுற்றித் திரியுமா? இது புதிய சாதனை படைப்பு..டீனி-டைனி ரோபோ நண்டு: விரைவில் மனித உடலுக்குள் சுற்றித் திரியுமா? இது புதிய சாதனை படைப்பு..

டிஸ்பிளே

டிஸ்பிளே

அதேபோல் மொபைல் போனின் டிஸ்பிளே (ஸ்க்ரீன்) ஆனது முன்பிதுங்குவது அல்லது மொபைல் போனின் பின்புறம் சமமாக இல்லாமல் இருப்பது போன்றவைகளை கவனித்தாலும், உடனே அந்த போனை ஓரங்கட்டுவது மிகவும் நல்லது.

மேலும் சேதமடைந்த அல்லது உடைந்த போனை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். இதன் மூலம் கண்டிப்பாக ஆபத்து வரலாம்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Video shows Redmi Note 11T Pro exploding and burning in China: Full Details!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X