ஏவுகணையை தாக்கி அழிக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பு ! அதிர்ச்சி வீடியோ..

"அயர்ன் டோம் ஏரியல் டிபென்ஸ் சிஸ்டம் அந்த ஏவுகணையை இடைமறித்தது" என இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

|

சிரியாவில் உள்ள ஈரான் படைகள் ஸ்கை ரிசார்ட் எனும் பனிசறுக்கு தளத்தின் மீது ஏவப்பட்டதாக கூறப்படும் ஏவுகணையை, அயர்ன் டோம் டிபென்ஸ் சிஸ்டம் (Iron Dome defense system) இடைமறித்த வீடியோவை இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பு பகிர்ந்துள்ளது.


அந்த வீடியோவில், பெண் ஒருவர் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள ஹெர்மான் ரிசார்ட்டில் பனிச்சறுக்கில் ஈடுபட்டிருக்கும் போது, டிபென்ஸ் சிஸ்டம் அந்த ஏவுகணையை இடைமறிக்கிறது. பெண் ஒருவர் பனிச்சறுக்கில் ஈடுபடும் போது, இஸ்ரேல் ஏவுகணை செலுத்தப்படுவதை காண்பிக்கும் வீடியோவை இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பின் செய்திதொடர்பாளர் உறுதிசெய்துள்ளார்.

ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள இரண்டு புதிய பட்ஜெட் ப்ரீபெய்ட் திட்டம்.!ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள இரண்டு புதிய பட்ஜெட் ப்ரீபெய்ட் திட்டம்.!

கோலன் ஹைட்ஸ்

கோலன் ஹைட்ஸ்

இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பு கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட டிவிட்டர் பதிவில், " ஞாயிறு அன்று சிரியாவில் இருந்து செயல்படும் ஈரான் படைகள் சிரியாவில் இருந்து தரையிலிருந்து தாக்கும் ஏவுகணையை ஏவினர்" என கூறப்பட்டுள்ளது. 1981ல் கோலன் ஹைட்ஸ் பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்திருந்தாலும், அது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த படைகள் ஈரானிய புரட்சிப்படையின் உயர்பிரிவுகள் ஆகும்.

அயர்ன் டோம் ஏரியல்

அயர்ன் டோம் ஏரியல்

"அயர்ன் டோம் ஏரியல் டிபென்ஸ் சிஸ்டம் அந்த ஏவுகணையை இடைமறித்தது" என இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. 2011 முதல் செயல்பாட்டில் இருக்கும் இஸ்ரேலின் அயர்ன் டோம், உள்வரும் ஏவுகணைகளை கண்டுபிடித்து தாக்கும் "ஏவுகணை இடைமறிப்பு அமைப்பு" ஆகும்.

 ஈரான்

ஈரான்

தனது படைகளின் மீது இஸ்ரேலின் வான்தாக்குதலை தடுக்கும் நோக்கத்தோடு, ஈரான் முன்கூட்டியே இந்த ஏவுகணையை ஏவியிருக்கலாம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது.

மனித உரிமை ஆர்வலர்கள்

மனித உரிமை ஆர்வலர்கள்

இந்த ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு, சிரியா போரில் அந்நாட்டு ஜனாதிபதி பஷர் அல்-ஆசாத்-ஐ ஆதரிக்க ஈரானால் அனுப்பப்பட்ட இராணுவம் இருக்கும் பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது. ஆயுததளவாட சேமிப்பு தளம், டமாஸ்கஸ் சர்வதேச விமானநிலையம், ஈரான் உளவுபிரிவு தளம் மற்றும் ஈரான் இராணுவ பயிற்சி முகாமில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், 2 சிரியர்கள் உள்பட குறைந்தபட்சம் 11 வீரர்கள் இறந்துள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Video shows Israel's Iron Dome intercept a rocket over a ski resort in the Golan Heights : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X