Home
News

எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா.! இணையதளத்தில் வைரலான கடற்பறவை.!

இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் பதிவிடும் பதிவுகளில் எந்த ஒரு பதிவு திடீரென வைரல் ஆகும் என்று யாருக்கும் தெரியாது. எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு ஏற்றார் போல், இணையத்தில் பதிவிடும் பதிவுகளும் காரணம் இல்லாமல் சில நேரங்களில் வைரல் ஆகிவிடுகிறது.

 இந்தப்பூமியில் உள்ள உயிரினங்களுக்கு

அதேபோல் பறவைகள் பலவிதம் அவை ஒவ்வொன்றும் ஒருவிதம் என்று கூறுவர்கள். அதாவது வாழும் சூழுலுக்கும் ஏற்பவும்,வடிவம் மற்றும் உணவுப்பழக்கத்தின் அடிப்படையிலும் பறவைகள் பல வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும்ஒவ்வொரு வகையில் இந்தப் பூமியில் உள்ள உயிரினங்களுக்கு பயன்படுகின்றன என்று தான் கூறவேண்டும்.

 கடற்பறவையின் மீது மற்றொரு

இந்நிலையில் ஒரு கடற்பறவையின் மீது மற்றொரு கடற்பறவை அமர்ந்துகொண்டு மிகவும் ஒய்யாரமாக சாவரி செய்யும் காட்சிகள்தான் தற்சமயம் இணையத்தில் அதிகவைரலாகியுள்ளது. மேலும் இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரங்கள்
வெளியாகவில்லை.

இருந்தபோதிலும் ட்விட்டர் பக்கத்தில் அதிக கவனம் பெற்ற இந்த வீடியோ ஆனது 2 லட்சத்துக்கு மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த வீடியோவில் ஒரு கடற்பறவையின் மீது மற்றொரு பறவை அமர்ந்துகொண்டு சிறிதுதூரம் பயணிக்கிறது, பின்பு இரண்டும் பிரிந்து தனித்தனியாக பறந்து சென்று விடுகிறது.

கரடியின் வீடியோ இணையதளத்தில்

இதேபோல் ஒரு கரடியின் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது என்றுதான் கூறவேண்டும். வெளிவந்த தகவலின்படிஅமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்தில் சைரியா என்பவர் வசித்து வருகிறார்.

இல்லத்தில் தான் கரடி ஒன்று புகுந்து

மேலும் இவருடைய இல்லத்தில் தான் கரடி ஒன்று புகுந்து செய்துள்ள அனைத்து சேட்டைகளும் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இரவு நேரத்தில் யாரும் இல்லாத சமயம் பார்த்து சைரியா வீட்டினுள் புகுந்த கரடி ஒனறு வீட்டில் உள்ள வளாகத்தில் வலம் வந்துள்ளது.இதனை சைரியா கவனித்துள்ளார்.

அதன்பின்பு கரடியின் போக்கை சைரியா ஆராய்ந்துள்ளார். வளாகத்தில் இருந்து வீட்டின் பின்புறம் சிறுவர்கள் விளையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த சிறிய அளவிலான நீர் தொட்டியை அந்த கரடி அடைந்தது. பின்னர் அந்த நீர்த் தொட்டியை கரடி சுற்றி சுற்றி வந்திருந்தது. அடுத்து சிறுது நேரத்தில் அந்த தொட்டியை பார்த்ததும் கரடிக்கு ஏதோ தோன்றியது போலவே அந்த தொட்டிக்குள் பதமாகஅந்த கரடி இறங்கியது.

தற்சமயம் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக

தொட்டிக்குள் இறங்கியதுமே முதலில் நீரை ஆசைதீர பருகியது, பின்னர் அந்த தொட்டிக்குள் அப்படியே சிறுது நேரம் விளையாடத்துவங்கியது. தற்சமயம் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Best Mobiles in India

English summary
Video of another bird sitting on a bird goes viral on the internet: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X