Home
News

கொஞ்ச நஞ்ச வோடபோன் யூசர்களுக்கு இனிமேல் ராஜயோகம்! 30 நாட்கள் வேலிடிட்டி அறிவிப்பு! புதிய ப்ரீபெய்ட் பிளான்கள்!

இந்திய டெலிகாம் மார்க்கெட்டில் லாபமே இல்லாமல் மிகவும் சிரமப்பட்டுவரும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. புதிய ப்ரீபெயட் ரீசார்ஜ் திட்டங்களில் 30 நாட்கள் வேலிடிட்டி உடன் டேட்டா வழங்கப் போகிறது. இதுகுறித்த விவரம் இதோ.

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்களுடன் போட்டிப்போட முடியாமல், வோடபோன் ஐடியா நிறுவனம் தவித்து வருகிறது. இருப்பினும், நாளுக்குநாள் குறைந்துவரும் வாடிக்கையாளர்களை தக்கவைக்க புதிய போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்த திட்டங்களை பார்த்தால், லாபத்தை பார்க்காமல் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற அறிவிக்கப்படுவது போல் தோன்றுகிறது.

கொஞ்ச நஞ்ச வோடபோன் யூசர்களுக்கு ராஜயோகம்! 30 நாட்கள் வேலிடிட்டி பிளான்

இந்த சூழலில் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. கடந்த வாரத்தில், வோடபோன் ஐடியா நிறுவனம் இரண்டு புதிய டேட்டா திட்டங்களை அறிமுகம் செய்தது. ரூ.24 விலையில் அன்லிமிடெட் டேட்டா சலுகையையும், ரூ.49 விலையில் 24 மணி நேர டேட்டா சலுகையையும் வழங்கியது.

இந்த திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்போது, ரூ. 198 மற்றும் ரூ. 204 விலையில் இரண்டு புதிய ப்ரீபெய்ட் காம்போ மற்றும் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த பிளான்கள் மூலம் 30 நாட்களுக்கு டாக்டைம் மற்றும் டேட்டா சலுகைகள் கிடைக்கும். இந்த திட்டங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு.

வோடபோன் ஐடியா ரூ 198 காம்போ/வேலிடிட்டி பிளான்: இந்த புதிய விஐ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானின் வேலிடிட்டி 30 நாட்களாகும். இந்த 30 நாட்களில் கால்கள் மேற்கொள்ள நொடிக்கு 2.5 பைசா வசூலிக்கப்படும். அதோடு 500 எம்பி டேட்டா சலுகை வழங்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா ரூ 204 காம்போ/வேலிடிட்டி பிளான்: இந்த திட்டத்திலும் கால்கள் மேற்கொள்ள நொடிக்கு 2.5 பைசா வசூலிக்கப்படும். 500 எம்பி டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த இரண்டு புதிய திட்டங்களும் மும்பை, குஜராத் மற்றும் டெல்லி நகரங்களில் முதலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த சில வாரங்களில் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த பிளான்கள் மட்டுமல்லாமல், மற்ற அனைத்து பிளான்களின் சலுகைகளையும் பெறுவதற்கு வோடபோன் வாடிக்கையாளர்கள் சர்வீஸ் வேலிடிட்டி ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால், உங்களது இன்கம்மிங் கால் வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட வாய்ப்புள்ளது.

இதனை தவிர்க்க ஆரம்ப ரீசார்ஜ் பிளானான, ரூ.99 விலையில் வேலிடிட்டி ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vi Vodafone Idea Launched Rs 198 Rs 204 New Prepaid Plans Data, Validity Recharge Through the Vi App And Website
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X