Vi வழங்கும் 1 ஜிபி இலவச 4G டேட்டா.. யாருக்கெல்லாம் தெரியுமா?

|

Vi என மறுபெயரிடப்பட்ட வோடபோன் ஐடியா, தனது வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி இலவச 4 ஜி டேட்டாவை வழங்குகிறது. Vi இந்தியாவில் தனது வணிகத்தை மிக விரைவாக விரிவுபடுத்தவும், விரைவில் அதன் லாபத்தை ஈட்டக்கூடிய வகையில் அதன் செயல்முறையை மாற்றவும் முயன்று வருகிறது. டெல்கோ நிறுவனம் ஏஜிஆர் நிலுவைத் தொகையாக ரூ. 54,754 கோடியைக் அடுத்த 10 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும்.

மீண்டும் லாபம் ஈட்டும் முயற்சியில் Vi

மீண்டும் லாபம் ஈட்டும் முயற்சியில் Vi

இதன் காரணமாக மீண்டும் லாபம் ஈட்டும் முயற்சியில், Vi நெட்வொர்க்கை கைவிட்டுச் சென்ற வாடிக்கையாளர் மற்றும் செயலற்ற வாடிக்கையாளர்களை மீண்டும் பெற டெல்கோ தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. அழைப்புகள் அல்லது டேட்டாவைப் பயன்படுத்துவதற்கு Vi சிம் கார்டுகளை பயன்படுத்தாத பல வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ளனர், ஆனால் இவர்கள் இன்னும் சிம் கார்டை சாதனங்களில் சும்மா வைத்திருக்கிறார்கள்.

சும்மா இருக்கும் வாடிக்கையாளர் தான் இலக்கு

சும்மா இருக்கும் வாடிக்கையாளர் தான் இலக்கு

அப்படியான வாடிக்கையாளர்களுக்கு Vi நிறுவனம் தற்பொழுது இலவச டேட்டா நன்மையை வழங்க முன்வந்துள்ளது. வாய்ஸ் அழைப்பு பயன்பாட்டிற்கும் பயன்படுத்தாமல், டேட்டா பயன்பாட்டிற்கும் பயன்படுத்தாமல் சும்மா இருக்கும் வாடிக்கையாளர்களை மீண்டும் Vi நெட்வொர்க்கை பயன்படுத்த வைப்பதற்காக தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு இந்த இலவச 1 ஜிபி டேட்டாவை Vi வழங்குகிறது.

SBI அதிரடி அறிவிப்பு: இனி பணம் எடுக்க ATM-ஐ மட்டும் பயன்படுத்த வேண்டாம்! ADWM கூட இருக்கே!SBI அதிரடி அறிவிப்பு: இனி பணம் எடுக்க ATM-ஐ மட்டும் பயன்படுத்த வேண்டாம்! ADWM கூட இருக்கே!

Vi வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி இலவச 4 ஜி டேட்டா

Vi வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி இலவச 4 ஜி டேட்டா

Vi அதன் தற்போதைய வாடிக்கையாளர் தளத்திற்கு 1 ஜிபி 4G டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. இந்த 1 ஜிபி 4 ஜி டேட்டா 7 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். எனவே அந்த கால எல்லைக்குள் இது பயன்படுத்தப்படாவிட்டால், நன்மை காலாவதியாகும். Vi இன் இந்த நடவடிக்கை டெல்கோ உண்மையில் அதன் செயலற்ற வாடிக்கையாளர்களைச் செயலில் உள்ளவர்களாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதைத் தெளிவாகக் காட்டுகிறது.

இலவச ZEE5 பிரீமியம் சந்தா

இலவச ZEE5 பிரீமியம் சந்தா

Vi அதன் ப்ரீபெய்ட் திட்டங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளையும் வழங்குகிறது. பாரதி ஏர்டெல் தவிர Vi மட்டுமே தனது வாடிக்கையாளர்களுக்கு ZEE5 பிரீமியம் சந்தாவை வழங்குகிறது. ஏர்டெல்லில் கூட, OTT நன்மை 1 திட்டத்திற்கு மட்டுமே கிடைக்கிறது. ஆனால் Vi உடன், இந்த OTT நன்மை வாடிக்கையாளர்களுக்கு சுமார் 5 ப்ரீபெய்ட் திட்டங்களுடன் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுட்டுக்கொல்லப்பட்ட ஏலியன்.. மறைக்கப்பட்ட உடல்.! 42 வருடங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை!சுட்டுக்கொல்லப்பட்ட ஏலியன்.. மறைக்கப்பட்ட உடல்.! 42 வருடங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை!

எம்.பி.எல் கேஷ் மற்றும் சோமாடோ மீதான தள்ளுபடி

எம்.பி.எல் கேஷ் மற்றும் சோமாடோ மீதான தள்ளுபடி

அது மட்டுமல்லாமல், Vi அதன் திட்டங்களுடன் சுவாரஸ்யமான நன்மைகளையும் வழங்குகிறது. Vi இன் ஒவ்வொரு ப்ரீபெய்ட் அல்லது போஸ்ட்பெய்ட் திட்டமும் இப்போது எம்.பி.எல் கேஷ் மற்றும் சோமாடோ மீதான தள்ளுபடியுடன் வருகிறது. இருப்பினும் இந்த சலுகைகள் Vi வாடிக்கையாளர்களைச் சிறிது நேரம் கவனத்தை ஈர்க்கும், ஆனால் டெல்கோ தனது வாடிக்கையாளர் சேவையில் பணியாற்ற வேண்டும்.

Vi விட்டு வாடிக்கையாளர்கள் விலகி சென்ற காரணம்

Vi விட்டு வாடிக்கையாளர்கள் விலகி சென்ற காரணம்

வோடபோன் ஐடியாவை விட்டு வாடிக்கையாளர்கள் விலகி சென்றதற்கு முக்கிய காரணமே நெட்வொர்க் சிக்கல் தான், நிறுவனம் அதன் ஒட்டுமொத்த 4G நெட்வொர்க்கை மேம்படுத்த வேண்டும், இதனால் வாடிக்கையாளர்கள் நீண்ட காலத்திற்கு டெல்கோவுக்கு விசுவாசமாக இருக்க முடியும். தெரியாதவர்களுக்கு, Vi தனது Priority 4G Network அம்சத்தை போஸ்ட்பெய்ட் திட்டங்களிலிருந்து நீக்கியுள்ளது, இதனால் ட்ராய் மற்றும் டெல்கோ இடையே எந்த மோதலும் இல்லை.

Best Mobiles in India

English summary
Vi (Vodafone Idea) Is Offering Free 1GB 4G Data for 7 Days To It's Existing Customers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X