விஐ வழங்கும் 6ஜிபி போனஸ் டேட்டா: எந்தெந்த ரீசார்ஜ் திட்டங்களுக்கு தெரியுமா?

|

வோடபோன் ஐடியா நிறுவனம் தங்களது பயனர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களின் கீழ் ரீசார்ஜ் செய்யும்போது 6ஜிபி போனஸ் டேட்டாவை வழங்குகின்றன.

விஐ பிராண்ட் அறிவிப்பு

விஐ பிராண்ட் அறிவிப்பு

ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டில் வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்தன. பிறகு இரு நிறுவனங்களும் இணைந்து வோடபோன் ஐடியா என மறுபெயரிடப்பட்டது. சமீபத்தில் தொலைத்தொடர்பு நிறுவனம் புதிய பிராண்ட்டை விஐ என அறிவித்தது.

புதிய சலுகைகள் தொடர்ந்து அறிவிப்பு

புதிய சலுகைகள் தொடர்ந்து அறிவிப்பு

இந்த புதிய தோற்றம் மற்றும் புதிய உணர்வைக் கொண்ட Vi தங்களது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. தற்போது வாடிக்கையாளர்களை ஈர்க்க அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகை குறித்து பார்க்கலாம்.

ஜீ5 ப்ரீமியம் இலவச சந்தா

ஜீ5 ப்ரீமியம் இலவச சந்தா

வோடபோன் ஐடியா பயனர்களுக்கு ரூ.999 மதிப்புள்ள ஒரு வருடத்திற்கான ஜீ5 ப்ரீமியம் இலவச சந்தாவை அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட ரீசார்ஜ் திட்டங்களில் வழங்குகிறது. ஜீ5 ப்ரீமியம் தொகுக்கப்பட்ட திட்டங்கள் குறித்து பார்க்கையில் அது ரூ.355, ரூ.405, ரூ.595, ரூ.795 மற்றும் ரூ.2,595 ஆகியவை ஆகும். இலவச ஓராண்டு சந்தாவை வழங்குகின்றன. ஜீ5 ப்ரீமியம் சலுகை மட்டுமின்றி பயனர்கள் கூடுதலாக 6ஜிபி இலவச போனஸ் டேட்டாவை பெறுவார்கள்.

விண்வெளியில் நேருக்கு நேர் வந்த இஸ்ரோ- ரஷ்ய செயற்கைகோள்கள்- மோதும் தூரத்தில் வந்ததால் பதற்றம்!

குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்

குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்

வோடபோன் ஐடியா ஜீ5 ப்ரீமியம் ப்ரீபெய்ட் திட்டங்களில் 6 ஜிபி டேட்டாவை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கையில், ஜீ5 ப்ரீமியம் தொகுக்கப்பட்டுள்ள வரம்பற்ற ரீசார்ஜ் திட்டங்களை ரீசார்ஜ் செய்ய வேண்டும். ரூ.219 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற குரலழைப்பு நன்மைகளை 28 நாட்களுக்கு வழங்குகிறது.

6 ஜிபி போனஸ் டேட்டா

6 ஜிபி போனஸ் டேட்டா

அதேபோல் ரூ.219 திட்டங்களை தவிர ஜீ5 ப்ரீமியம் சந்தா கிடைக்கும் ரூ.355, ரூ.405, ரூ.595, ரூ.795 மற்றும் ரூ.2,595 திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் போது பயனர்கள் 6 ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவை பெறுவார்கள். இந்த 6ஜிபி டேட்டா இந்த திட்டங்களில் கிடைக்கும் சலுகைகளுடன் கூடுதலாக சேர்க்கப்படும்.

ஜீ5 ப்ரீமியம் சந்தா பயன்பாடு

ஜீ5 ப்ரீமியம் சந்தா பயன்பாடு

ஜீ5 ப்ரீமியம் திட்டத்துடன் பயனர்கள் மீண்டும் ரீசார்ஜ் செய்யும்போது ஜீ5 ப்ரீமியம் சந்தா அவர்களுக்கு கிடைக்காது என டெலிகாம் டாக் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. விஐ வழங்கும் ஜீ5 ப்ரீமியம் சந்தாவை 28 நாட்களுக்குள் பயன்படுத்தாவிட்டால் அடுத்து பயனருக்கு கிடைக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
VI Users Can Get 6GB Bonus Data From These Selected Plans- Here the Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X