Vi சிம் இருக்கா.. எதிர்பார்த்த 5ஜி வந்தாச்சு.. ஆனால், லிமிட் இருக்கு.. 28 நாட்களுக்கு 300 ஜிபி.. அதுக்கு மேல?
இந்தியா முழுவதும் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சேவையை கொடுக்க தொடங்கிவிட்டன. ஆனால், போட்டி நிறுவனமான வோடபோன் ஐடியா (Vodafone Idea) மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் மும்பை சர்க்கிளில் மட்டும் 5ஜி சேவையை தொடங்கி இருக்கிறது. இப்போது, 5ஜி திட்டங்களை சூடச் சூட களமிறங்கி இருக்கிறது. ஆனால், அதில் ட்விஸ்ட் வைத்திருக்கிறது. இதைப்போலவே மற்ற சர்க்கிள்களிலும் தொடங்க இருப்பதால், அனைத்து கஸ்டமர்களும் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
மும்பை சர்க்கிளில் இருக்கும் வோடபோன் ஐடியா கஸ்டமர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அன்லிமிடெட் 5ஜி திட்டங்கள் கிடைக்கின்றன. ரூ.299 முதல் ப்ரீபெய்ட் திட்டங்கள் (Prepaid Plan) தொடங்குகின்றன. இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதேபோல 56 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் 5ஜி திட்டங்கள் கிடைக்கின்றன.

இதனால், வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் டேட்டாவை பெற்று கொள்ளாலாம் என்று கஸ்டமர்கள் நினைத்தனர். ஆனால், உண்மையில் 28 நாட்களுக்கு இவ்வளவு டேட்டாவை மட்டுமே அதிகபட்சமாக பயன்படுத்த முடியும் என்ற லிமிட் இருக்கிறது. ஆகவே, விஐ கஸ்டமர்கள் எத்தனை நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்தாலும், அவர்களுக்கு லிமிட் இருக்கும்.
விஐ அன்லிமிடெட் 5ஜி டேட்டா லிமிட் (Vi Unlimited 5G Data Limit): 28 நாட்கள், 56 நாட்கள், 84 நாட்கள் அல்லது 365 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொண்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 4ஜி டேட்டா அல்லாமல், 5ஜி சேவையில் வழங்கப்படும் டேட்டாவை அதிகபட்சமாக 300 ஜிபி வரையில் மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும்.
அதாவது, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா திட்டத்துக்கு கிடைக்கிறது. ஆகவே, 28 நாட்களுக்கு 56 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். இந்த டேட்டா சலுகை இல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா இலவசமாக கொடுக்கப்படும். இந்த டேட்டாவை 28 நாட்களுக்கு 300 ஜிபி மட்டுமே அதிகபட்சமாக பயன்படுத்த முடியும். இந்த 28 நாட்களுக்கு முன்பே 300 ஜிபியை முடித்தால், வேகம் குறையும்.
ஆகவே, வழக்கம்போல 4ஜி டேட்டா ஆக்டிவ் செய்யப்படும். அந்த டேட்டாவும் முடிந்து போனால், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்கும். இதுவே உங்களிடம் 28 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி இருந்தால், அடுத்த 28 நாட்களுக்கான அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். இதுவும் 300 ஜிபி டேட்டா லிமிட்டில் கொடுக்கப்படும். இப்படியே வோடபோன் ஐடியா கொடுக்கிறது.
இதேபோல மற்ற மாநிலங்களில் இருக்கும் சர்க்கிள்களிலும் வோடபோன் ஐடியா திட்டங்களை கொடுக்க இருக்கிறது. ஆகவே, எந்த நகரங்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சேவை தொடங்கப்பட்டாலும், அங்கு இந்த 300 ஜிபி லிமிட் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மும்பையில் இப்போது ரூ.299 மதிப்பிலான திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது.
விஐ ரூ 299 ப்ரீபெய்ட் திட்டம் (Vi Rs 299 Prepaid Plan): இந்த திட்டம் ஆரம்ப விலை 5ஜி திட்டமாக இருக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகளுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கொடுக்கப்படுகிறது. 28 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (300 ஜிபி லிமிட்) பயன்படுத்தி கொள்ளலாம்.
அதே நேரத்தில் நாளொன்றுக்கு 1 ஜிபி வீதம் 4ஜி டேட்டா கிடைக்கிறது. மேலும், 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பிஞ்ச் ஆல் நைட் டேட்டா, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் போன்ற சலுகைகள் கிடையாது. ஆனால், அடுத்தடுத்த திட்டங்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








