Home
News

Vi பேட்ட போடு.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 12AM - 12PM இலவசம்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2GB டேட்டா.. 3 திட்டங்கள்!

வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்கள் அறக்க பறக்க ரீசார்ஜ் செய்யும்படி அன்லிமிடெட் டேட்டா சலுகைகள் 365 நாட்களுக்கு இலவசமாக கிடைக்கிறது. வருடாந்திர வேலிடிட்டியில் 2 ஜிபி டேட்டாவுடன் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களில் நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையில் இலவச டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இப்போது, மூன்று வருடாந்திர திட்டங்களில் (Yearly Plans) அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) சலுகையை பெற்று கொள்ளலாம். இதுகுறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த விஐ வருடாந்திர திட்டங்கள் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ், ஓடிடி சந்தா மற்றும் விஐ டேட்டா சலுகைகளை கொடுக்கிறது. இந்த டேட்டா சலுகைகளுடன் இனிமேல் நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையில் இலவச டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ஓடிடி சலுகையில் மட்டுமே மாற்றம் இருக்கும். மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாக இருக்கும்.

Vi பேட்ட போடு.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 12AM - 12PM இலவசம்.. மூன்று!

விஐ ரூ 3599 ப்ரீபெய்ட் திட்டம் (Vi Rs 3599 Prepaid Plan): இந்த 365 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தில் ஓடிடி சந்தா கிடையாது. அடுத்து வரும் திட்டங்களில் இருந்து ஓடிடி சந்தா தொடங்குகிறது. ஆகவே, இந்த திட்டத்தில் இருந்து நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையில் கிடைக்கும் இலவச டேட்டா சலுகை தொடங்குகிறது. இந்த சலுகை போக 2 ஜிபி டேட்டாவை தினமும் பயன்படுத்தலாம்.

அதேபோல வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) மற்றும் டேட்டா டிலைட் (Data Delight) சலுகை இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. மற்ற சலுகைகளை பார்க்கையில், வருடம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Calls) கொடுக்கிறது. 100 எஸ்எம்எஸ்கள் நாளொன்றுக்கு செய்து கொள்ள கிடைக்கிறது.

விஐ ரூ 3699 ப்ரீபெய்ட் திட்டம் (Vi Rs 3699 Prepaid Plan): இந்த வருடாந்திர திட்டத்துக்கும் நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். அதேபோல திட்டத்தின் 2 ஜிபி டேட்டாவையும் நாளொன்றுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். முந்தைய திட்டத்தில் பார்த்த வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மற்றும் டேட்டா டிலைட் சலுகைகள் இதற்கும் கிடைக்கிறது.

அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் சலுகையும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகள் போக கூடுதலாக டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) மொபைல் சந்தா கொடுக்கப்படுகிறது. இது ரூ.499 மதிப்பிலான சலுகையாகும். இப்போது அடுத்த திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்வோம்.

விஐ ரூ 3799 ப்ரீபெய்ட் திட்டம் (Vi Rs 3799 Prepaid Plan): இந்த 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்துக்கும் தினசரிக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையிலான அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் பயன்படுத்த கிடைக்கின்றன.

டேட்டா சலுகைகளில் கூடுதலாக வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மற்றும் டேட்டா டிலைட் சலுகைகளை கொடுக்கிறது. இந்த சலுகைகள் போக அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) லைட் சந்தாவை இந்த திட்டம் கொடுக்கிறது. இந்த சந்தாவின் மதிப்பு ரூ.799ஆக இருக்கிறது. ஆகவே, இந்த மூன்று வருடாந்திர திட்டங்களில் பாதி நாளுக்கு அன்லிமிடெட் டேட்டாவை பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vi Super Hero Plans For 2025 Unlimited Data From 12 AM to 12 Noon For Yearly Prepaid Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X