Jio, Airtel கதை முடிஞ்சது.. 12 மணி To 12 மணி.. இனி FREE டேட்டா.. தமிழ்நாட்டுல Vi விஸ்வரூபம்.. ரூ.365 போதும்!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த டெலிகாம் கஸ்டமர்களையும் தூக்கி சாப்பிடும்படி ஒவ்வொரு நாளிலும் 12 மணி நேரத்துக்கு அன்லிமிடெட் டேட்டாவை வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் கொடுக்கிறது. தமிழ்நாட்டில் விஐ சூப்பர் ஹீரோ திட்டத்தை (Vi Super Hero Plan) பெறும் கஸ்டமர்களுக்கு இந்த 12 மணி நேர இலவச டேட்டா (12 Hours Free Data) வழங்கப்படுகிறது. இந்த விஐ திட்டத்தின் முழு சலுகை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வோடபோன் ஐடியா நிறுவனம் டேட்டா பிரியர்களுக்காக பிரத்யேக திட்டங்களை வைத்திருக்கிறது. அன்லிமிடெட் நைட் டேட்டா (Unlimited Night Data) சலுகை இருக்கிறது. வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) மற்றும் டேட்டா டிலைட் (Data Delight) சலுகைகளும் வருகிறது. இதில் நள்ளிரவு 12 மணி முதல் காலை மணி வரையில் அன்லிமிடெட் நைட் டேட்டா கிடைத்தது.

ஆனால், இப்போது காலை 6 மணி வரையில் கிடைத்த டேட்டாவை மதியம் 12 மணிக்கு மாற்றி இருக்கிறது. இதன் மூலம் நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டாவை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். 12 மணி நேரங்கள் அதாவது ஒரு நாளில் பாதிக்குப்பாதி நேரத்தில் இலவசமாக டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த அன்லிமிடெட் டேட்டாவுக்கும் வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்துள்ள திட்டத்தில் கிடைக்கும் டேட்டாவுக்கும் தொடர்பு இல்லை. ஆகவே, திட்டத்தின் டேட்டாவையும் பயன்படுத்தலாம். இந்த இலவச டேட்டாவையும் கூடுதலாக பயன்படுத்தி கொள்ளலாம். இதனால், டேட்டா அதிகமாக தேவைப்பட்டாலும் டேட்டா வவுச்சருக்கு இனிமேல் தேவையிருக்காது.
இதுபோக விஐ சூப்பர் ஹீரோ திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு வழக்கமான வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மற்றும் டேட்டா டிலைட் சலுகையும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் சலுகையில் வாரத்தில் பயன்படுத்தாத டேட்டாவை வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறுகளில் வோடபோன் கஸ்டமர்கள் பயன்படுத்தலாம்.
டேட்டா டிலைட் மூலமாக மாதத்துக்கு 2 முறை 2 ஜிபி டேட்டாவை இலவசமாக பெற்று கொள்ளலாம். இது பேக்கப் டேட்டா போல கஸ்டமர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் அனைத்து திட்டத்துக்கும் கிடைக்காது. 2 ஜிபி டேட்டா அல்லது அதற்கும் மேல் டேட்டாவை தினசரிக்கு கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது.
ஆகவே, ரூ.365 விலையில் இருந்து திட்டங்கள் தொடங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம். இந்த ரூ.364 மதிப்பிலான திட்டத்தில் 2 ஜிபி டேட்டா தினசரிக்கு பயன்படுத்த கிடைக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தின் மூலம் 56 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ள முடிகிறது.
இந்த தினசரி டேட்டாவுக்கு அடுத்தப்படியாக 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. இது மதியம் 12 மணிக்கு மேல் நள்ளிரவு 12 மணிக்குள் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், நள்ளிரவு 12 மணிக்கு மேல் அன்லிமிடெட் டேட்டா இலவசமாக கொடுக்கப்பட தொடங்கப்படும். இதை மதியம் 12 வரையில் பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்படும்.
இந்த டேட்டா சலுகைகள் போக முக்கியமான வாய்ஸ் கால்கள் சலுகை மற்றும் எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. எனவே, கஸ்டமர்கள் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) பெற முடிகிறது. மேலும் 100 எஸ்எம்எஸ் (100 SMS) சலுகையை தினமும் பயன்படுத்தலாம். இந்த திட்டத்தில் இருந்து விஐ சூப்பர் ஹீரோ திட்டத்தின் சலுகைகள் கிடைக்கிறது. இதற்கு மேலுள்ள திட்டங்களிலும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








